அப்படியென்ன சிறப்புகள் இதில்?

 அப்படியென்ன சிறப்புகள் இதில்?

அப்படியென்ன சிறப்புகள் இதில்? இன்று மாலை விண்ணில் பாய்கிறது பி.எஸ்.எல்.வி-சி48!

     

    ன்றுக்கு மேற்பட்ட செயற்கைக்கோள்களை ஏந்திக் கொண்டு பி.எஸ்.எல்.வி-சி48 செயற்கைக்கோள் இன்று மாலை விண்ணில் ஏவப்படுகிறது. இதன் சிறப்புகள் குறித்து இங்கே காணலாம்.

    இஸ்ரோ எனப்படும் இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் பூமியை கண்காணிப்பதற்காக இந்தியாவின் ”ரிசாட்-2பிஆர்1” என்ற செயற்கைக்கோளை விண்ணில் செலுத்த உள்ளது.

     இது ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் உள்ள ஏவுதளத்தில் இருந்து பி.எஸ்.எல்.வி-சி48 ராக்கெட் மூலம் செலுத்தப்படுகிறது.


     இன்று பிற்பகல் 3.25 மணிக்கு விண்ணில் ஏவப்படுகிறது. இதனுடன் இஸ்ரேல், ஜப்பான், இத்தாலி ஆகிய நாடுகளை சேர்ந்த தலா ஒரு செயற்கைக்கோள், அமெரிக்காவின் 6 செயற்கைக்கோள் ஆகியவை அனுப்பப்படுகின்றன.

     பூமியில் இருந்து 576 கி.மீ உயரத்தில் 37 டிகிரியில் நிலைநிறுத்தப்படுகிறது. பி.எஸ்.எல்.வி-சி48 ராக்கெட்டில் முதல் நிலையில் திட எரிபொருளும், இரண்டாம் நிலையில் திரவ எரிபொருளும் நிரப்பப்பட்டு உள்ளன.

  இந்த ராக்கெட்டின் உயரம் 44.4 மீட்டர் ஆகும். இதில் பொருத்தப்பட்டுள்ள 628 கிலோ எடை கொண்ட ”ரிசாட்-2பிஆர்1” செயற்கைக்கோளில் நவீன ரேடார்கள் இடம்பெற்றுள்ளன.

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...