வரலாற்றில் இன்று ( 03.06.2024)

வரலாறு என்பது இறந்த காலத்தில் நிகழ்ந்த விஷயத்தை பற்றி நாம் தெரிந்து கொள்ளும் ஒன்றாகும். குறிப்பாக வரலாற்றில் ஒருவர் செய்த சாதனைகள், தியாகங்கள், சிறப்புகள் இதுபோன்ற பலவகையான முக்கிய விஷயங்கள் பற்றி அனைவருக்கும் தெரியப்படுத்தும் விஷயமாகும். தெளிவாக சொல்ல வேண்டும் என்றால் தங்கள் வாழும் காலத்தின் பின்னணியில் கடந்த காலத்தின் நிகழ்வுகளை விளக்கி வரலாறாக எழுதுகின்றனர். சரி இந்த பதிவில் நாம் நமது வாழ்வில் கடந்து செல்லும் ஒவ்வொரு நாட்களிலும் ஏதாவது ஒரு விஷயம் நிகழ்ந்திருக்கலாம் அந்த  வகையில் வரலாற்றில் இன்று என்ன நாள்? என்பதை பற்றி நாம் நமது மின்கைத்தடியின் இந்த தொகுப்பில் படித்து தெரிந்து கொள்வோம் வாங்க..

வரலாற்றில் இன்று | Today History in Tamil

சூன் 3  கிரிகோரியன் ஆண்டின் 154 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 155 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 211 நாட்கள் உள்ளன.

நிகழ்வுகள்

350 – நெப்போத்தியானுசு உரோமைப் பேரரசனாகத் தன்னை அறிவித்து, கிளாடியேட்டர்களுக்குத் தலைமை வகித்து உரோமை நகரை அடைந்தான்.
713 – பைசாந்தியப் பேரரசர் பிலிப்பிக்கசு குருடாக்கப்பட்டு, நாடு கடத்தப்பட்டார். இரண்டாம் அனசுதாசியோசு பேரரசராக முடிசூடினார்.[1]
1140 – பிரெஞ்சுக் கல்வியாளர் பியேர் அபேலார்டு சமயமறுப்புக்காக குற்றவாளியாகக் காணப்பட்டார்.
1326 – உருசியாவுக்கும் நார்வேக்கும் இடையில் எல்லையை வரையறுக்கும் நொவ்கோரத் உடன்பாடு எட்டப்பட்டது.
1539 – எர்னாண்டோ டெ சோட்டோ புளோரிடாவை எசுப்பானியாவுக்காக உரிமை கோரினார்.
1834 – இலங்கை, கொழும்பு நகரில் புறக்கோட்டை, கோட்டை பகுதிகளில் காணிகளை வாங்க தமிழருக்கும், சோனகருக்கும் அனுமதி வழங்கப்பட்டது.[2]
1839 – சீனாவில் பிரித்தானிய வணிகர்களிடம் இருந்து கைப்பற்றப்பட்ட 1.2 மில்லியன் கிகி அபினியை லின் சீசு அழித்தார். முதலாம் அபினிப் போர் ஆரம்பமானது.
1861 – அமெரிக்க உள்நாட்டுப் போர்: மேற்கு வர்ஜீனியாவில் பிலிப்பி நகரில் இடம்பெற்ற சமரில் அமெரிக்கக் கூட்டணியின் படைகள் கூட்டமைப்பின் படைகளைத் தோற்கடித்தன.
1916 – ஐக்கிய அமெரிக்காவின் காவற்படையில் மேலும் 450,000 ஆண்களை சேவைக்கு அமர்த்த சட்டமூலம் கொண்டு வரப்பட்டது.
1940 – இரண்டாம் உலகப் போர்: செருமனியின் வான்படை பாரிசு நகரில் குண்டுகளை வீசின.
1940 – இரண்டாம் உலகப் போர்: பிரான்சின் டன்கிர்க் நகரில் இடம்பெற்ற போரில் செருமனியப் படைகள் வெற்றி பெற்றன. நட்பு அணி முழுமையாகப் பின்வாங்கியது.
1941 – இரண்டாம் உலகப் போர்: நாட்சி செருமன் படைகள் காண்டானசு என்ற கிரேக்கக் கிராமத்தை அடியோடு அழித்து, 180 கிராமத்தவரைப் படுகொலை செய்தனர்.
1950 – பிரான்சின் எர்சொக், லாச்சினால் ஆகியோர் 8,091 மீட்டர் உயரமான அன்னபூர்ணா 1 மலையின் உச்சியை அடைந்த முதலாவது மனிதர் என்ற சாதனையைப் படைத்தனர்.
1962 – ஏர் பிரான்சு போயிங் விமானம் பாரிசில் விபத்துக்குள்ளாகியதில் 130 பேர் உயிரிழந்தனர்.
1963 – தெற்கு வியட்நாமில் பௌத்தர்கள் நடத்திய போராட்டம் இராணுவத்தினரால் வேதித் தாக்குதல் நடத்தி முறியடிக்கப்பட்டது. 67 பேர் காயமடைந்தனர்.
1965 – நாசாவின் ஜெமினி 4 விண்கலம் ஏவப்பட்டது. எட்வேர்ட் வைட் 21 நிமிடங்கள் விண்ணில் நடந்து சாதனை படைத்தார். இவரே விண்ணில் நடந்த முதலாவது அமெரிக்கர் ஆவார்.
1969 – தெற்கு வியட்நாமில் மெல்பேர்ன் என்ற ஆத்திரேலியப் போர்க்கப்பல் ”எவான்ஸ்” என்ற அமெரிக்கப் போர்க்கப்பலுடன் மோதி அதை இரண்டாகப் பிளந்தது.
1973 – சோவியத் சூப்பர்சோனிக் டியூ-144 வானூர்தி பிரான்சில் விபத்துக்குள்ளாகி வீழ்ந்ததில் 14 பேர் உயிரிழந்தனர்.
1979 – தெற்கு மெக்சிகோ வளைகுடாவில் எண்ணெய்க் கிணறு ஒன்றில் எண்ணெய்க் கசிவு ஏற்பட்டதில் 3,000,000 பீப்பாய்கள் கடலில் கலந்தது.
1980 – விடுதலைச் சிலை அருகே குண்டு ஒன்று வெடிக்கப்பட்டது. குரோவாசியா தேசியவாதிகள் இதனை வெடிக்க வைத்திருக்கலாம் எனச் சந்தேகிக்கப்பட்டது.
1982 – ஐக்கிய இராச்சியத்துக்கான இசுரேலியத் தூதர் சுலோமோ அர்கோவ் இலண்டனில் சுட்டுக் காயப்படுத்தப்பட்டார்.
1984 – புளூஸ்டார் நடவடிக்கை: அம்ரித்சரில் சீக்கியர்களின் புனிதப் பொற்கோயிலுள் இந்திய இராணுவத்தினர் புகுந்தனர். சூன் 6 வரை இடம்பெற்ற இந்நடவடிக்கையில் 5,000 இற்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர்.
1989 – சீனாவில் தியனன்மென் சதுக்கத்தில் ஏழு வாரங்களாக இடம்பெற்று வந்த ஆர்ப்பாட்டங்களைக் கலைக்க அங்கு சீன இராணுவத்தினர் அனுப்பப்பட்டனர்.
1991 – சப்பானில் கியூசுவில் உன்சென் மலை வெடித்ததில் 43 பேர் உயிரிழந்தனர். கொல்லப்பட்டவர்கள் அனைவரும் ஆய்வாளர்களும் ஊடகவியலாளர்களும் ஆவார்.
1992 – ஆத்திரேலியாவில் எடி மாபோ தாக்கல் செய்த மாபோ எதிர் குயின்ஸ்லாந்து வழக்கின் தீர்ப்பின் படி, பழங்குடியினரின் நிலங்களின் உரிமையை அவர்களுக்கே திரும்ப வழங்கப்பட்டது.
1998 – செருமனியில் கடுகதி தொடருந்து ஒன்று பாதையை விட்டு விலகியதில் 101 பேர் கொல்லப்பட்டனர்.
2006 – மொண்டெனேகுரோ செர்பியா-மொண்டெனேகுரோ கூட்டமைப்பில் இருந்து பிரிந்தது.
2007 – விசாரணைக்காகக் கைது செய்யப்பட்ட இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்த இரண்டு தமிழ்ப் பணியாளர்கள் கொழும்பில் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
2007 – தெற்கு சீனாவில் யுனான் பகுதியில் இடம்பெற்ற 6.4 அளவு நிலநடுக்கத்தில் பலர் கொல்லப்பட்டுப் பலத்த சேதம் ஏற்பட்டது.
2012 – லாகோஸ் நகரில் 153 பேரை ஏற்றிச் சென்ற விமானம் ஒன்று வீழ்ந்ததில் அதில் பயணம் செய்த அனைவரும், தரையில் 10 பேரும் உயிரிழந்தனர்.
2013 – அமெரிக்க இராணுவ வீரர் பிராட்லி மானிங் விக்கிலீக்ஸ் நிறுவனத்திற்கு இரகசியத் தகவல்களைக் கசிந்தமைக்காகக் குற்றம் சாட்டப்பட்டு இராணுவ விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார்.
2013 – வடகிழக்கு சீனாவில் சிலின் மாகாணத்தில் கோழிப் பண்ணை ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 119 பேர் உயிரிழந்தனர்.
2015 – கானா, அக்ரா நகரில் பெட்ரோல் நிலையம் ஒன்றில் ஏற்பட்ட வெடிப்பில் 200 பேர் உயிரிழந்தனர்.
2017 – இலண்டன் பாலத்தில் இசுலாமியத் தீவிரவாதிகளால் நடத்தப்பட்ட தாக்குதலில் 8 பேர் கொல்லப்பட்டனர், பலர் காயமடைந்தனர். மூன்று தீவிரவாதிகள் காவல்துறையினரால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
2019 – சூடானில் கர்த்தூம் நகரில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் மீது அரசுப் படைகள் சுட்டதில் 100 இற்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர்.

பிறப்புகள்

1726 – ஜேம்ஸ் கூட்டன், இசுக்காட்டிய நிலவியலாளர், மருத்துவர் (இ. 1797)
1808 – ஜெபர்சன் டேவிஸ், அமெரிக்க மாநிலங்களின் கூட்டமைப்பின் அரசுத் தலைவர் (இ. 1889)
1865 – ஐக்கிய இராச்சியத்தின் ஐந்தாம் ஜோர்ஜ் (இ. 1936)
1873 – ஒட்டோ லோவி, நோபல் பரிசு பெற்ற செருமானிய-அமெரிக்க மருந்தியலாளர், உயிரியலாளர் (இ. 1961)
1900 – அடிலைடே அமெசு, அமெரிக்க வானியலாளர் (இ. 1932)
1924 – மு. கருணாநிதி, தமிழ்நாட்டின் 3-வது முதலமைச்சர், தமிழறிஞர், எழுத்தாளர் (இ. 2018)
1929 – சிமன்பாய் படேல், இந்திய அரசியல்வாதி (இ. 1994)
1930 – ஜார்ஜ் பெர்னாண்டஸ், இந்திய அரசியல்வாதி (இ. 2019)
1931 – ராவுல் காஸ்ட்ரோ, கியூபாவின் 18வது அரசுத்தலைவர்
1947 – பிரேமகீர்த்தி டி அல்விஸ், இலங்கை சிங்கள ஊடகவியலாளர், பாடலாசிரியர் (இ. 1989)
1961 – லோறன்ஸ் லெசிக், அமெரிக்க நூலாசிரியர், படைப்பாக்கப் பொதுமங்களின் நிறுவனர்
1966 – ராதா, தென்னிந்தியத் திரைப்பட நடிகை
1966 – வசீம் அக்ரம், பாக்கித்தானியத் துடுப்பாளர்
1966 – தங்கம் தென்னரசு, தமிழக அரசியல்வாதி
1986 – ரஃபேல் நடால், எசுப்பானிய டென்னிசு வீரர்

இறப்புகள்

1657 – வில்லியம் ஆர்வி, ஆங்கிலேய மருத்துவர் (பி. 1578)
1924 – பிரான்ஸ் காஃப்கா, செக்-ஆத்திரிய வழக்கறிஞர், எழுத்தாளர் (பி. 1883)
1925 – காமில் பிளம்மாரியன், பிரான்சிய வானியலாளர், எழுத்தாளர் (பி. 1842)
1963 – இருபத்திமூன்றாம் யோவான் (திருத்தந்தை) (பி. 1881)
1977 – ஆர்ச்சிபால்ட் ஹில், நோபல் பரிசு பெற்ற ஆங்கிலேய மருத்துவர் (பி. 1886)
1989 – ரூகொல்லா கொமெய்னி, ஈரானின் 1வது அரசுத்தலைவர், ஆன்மிகத் தலைவர் (பி. 1902)
1990 – ராபர்ட் நாய்சு, இன்டெல் நிறுவனத்தை நிறுவிய அமெரிக்க தொழிலதிபர், இயற்பியலாளர் (பி. 1927)
2000 – ஜெய்சங்கர், தமிழ்த் திரைப்பட நடிகர் (பி. 1938)
2009 – இரா. திருமுருகன், தமிழறிஞர் (பி. 1929)
2010 – விளாதிமிர் ஆர்னோல்டு, உருசியக் கணிதவியலாளர் (பி. 1937)
2011 – பஜன்லால், அரியாணாவின் 6வது முதலைமைச்சர் (பி. 1930)
2013 – ஜியா கான், அமெரிக்க-இந்திய நடிகை (பி. 1988)
2013 – அதுல் சிட்னிஸ், செருமானிய-இந்திய ஊடகவியலாளர் (பி. 1962)
2014 – கோபிநாத் முண்டே, இந்திய-மகராட்டிர அரசியல்வாதி (பி. 1949)
2016 – முகம்மது அலி, அமெரிக்க குத்துச் சண்டை வீரர் (பி. 1942)
2016 – பாலு ஆனந்த், தென்னிந்தியத் திரைப்பட இயக்குநர், நடிகர்

சிறப்பு நாள்

மாவீரர் நாள் (உகாண்டா)
மாபோ நாள் (ஆத்திரேலியா)
உலக மிதிவண்டி நாள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!