வரலாற்றில் இன்று – 01.12.2019 – மேதா பட்கர்

வரலாற்றில் இன்று – 01.12.2019
மேதா பட்கர்
இந்திய சமூக ஆர்வலர் மேதா பட்கர் 1954ஆம் ஆண்டு டிசம்பர் 1ஆம் தேதி மும்பையில் பிறந்தார்.
இவர் இந்தியாவில் பரவலாக அறிந்த உரிமைப் போராளி ஆவார். குஜராத் மாநிலத்தில் உள்ள சர்தார் சரோவர் அணை கட்டுவதற்கு மக்கள் சார்பாக உரிமைக்குரல் கொடுத்த நிறுவனமான நர்மதா பச்சாவோ அந்தோளன் என்னும் அமைப்பால் இவர் நன்கு அறியப்பட்டார்.
இவருடைய தந்தையார் இந்திய விடுதலைப் போராட்டத்தில் பங்குகொண்டவர். இவருடைய தாயார் பொருளாதாரத்திலும், கல்வி, உடல்நலம் முதலியவற்றிலும் நலிவுற்ற பெண்களுக்கு உதவும் சுவதார் (ளுறயனயச) என்னும் நிறுவனத்தில் உறுப்பினராக இருந்தார். இவருடைய பெற்றோர்களின் விழிப்புணர்வும், தொண்டும் இவருடைய கொள்கைகள் மற்றும் கருத்துக்களை செதுக்கின.
மேதா பட்கர் 1991ஆம் ஆண்டு Right Livelihood Award, 1999ஆம் ஆண்டு எம்.ஏ. தாமசு மனித உரிமைப் பரிசு (M.A.Thomas National Human Rights Award), தீனா நாத் மங்கேஷகார் பரிசு (Deena Nath Mangeshkar Award), மகாத்மா பூலே பரிசு (Mahatma Phule Award), 1999ஆம் ஆண்டு கோல்டுமன் சுற்றுச்சூழல் பரிசு (Goldman Environment Prize), பச்சை நாடா பரிசு (Green Ribbon Award), மனித உரிமைக் காப்பாளர் பரிசு (Human Rights Defenders Award) போன்ற பல பரிசுகளைப் பெற்றுள்ளார்.
முக்கிய நிகழ்வுகள்
1963ஆம் ஆண்டு டிசம்பர் 1ஆம் தேதி நாகாலாந்து இந்தியாவுடன் ஒரு மாநிலமாக இணைக்கப்பட்டது.
1965ஆம் ஆண்டு டிசம்பர் 1ஆம் தேதி இந்தியாவில் எல்லைக் காவற்படை அமைக்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!