இன்றைய ராசி பலன்கள் ( 21 ஏப்ரல் ஞாயிற்றுக்கிழமை 2024 )

 இன்றைய ராசி பலன்கள் ( 21 ஏப்ரல் ஞாயிற்றுக்கிழமை 2024 )

தினம் தினம் திருநாளே!’ தினப்பலன் ஏப்ரல் 21ம் நாளுக்கான மேஷம் முதல் மீனம் வரையுள்ள 12 ராசிக்காரர்களுக்கும் பலன்கள் எப்படி இருக்கிறது என்று நமது மின்கைத்தடியின் இப்பகுதியில் பார்க்கலாம்.

குரோதி வருடம் சித்திரை மாதம் 8 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை 21.04.2024 சந்திர பகவான் இன்று கன்னி ராசியில் பயணம் செய்கிறார். இன்று அதிகாலை 12.30 வரை துவாதசி. பின்னர் திரயோதசி.இன்று மாலை 06.23 வரை உத்திரம். பின்னர் அஸ்தம்.உத்திராடம் திருவோணம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சந்திராஷ்டமம்.சற்று கவனமுடனும் எச்சரிக்கையுடனும் நடந்துகொள்வது அவசியம்.

மேஷ ராசி அன்பர்களே!

பிள்ளைகள் வழியில் செலவுகள் ஏற்படக்கூடும். மாலையில் வாழ்க்கைத்துணையின் விருப்பத்தை நிறைவேற்றுவீர்கள். தந்தைவழியில் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் வழக்கம்போலவே இருக்கும். புதிய முயற்சிகளில் கூடுதல் கவனம் தேவை. சக வியாபாரிகளால் ஏற்பட்ட இடையூறுகள் நீங்கும். இன்று தட்சிணாமூர்த்தியை வழிபடுவது நன்று.

ரிஷப ராசி அன்பர்களே!

காலையில் அசதியும் சோர்வும் நிறைந்திருக்கும். என்றாலும் பிற்பகலுக்கு மேல் உற்சாகமும் மகிழ்ச்சியுமாகக் காணப்படுவீர்கள். வாழ்க்கைத்துணைவழி உறவுகளால் ஆதாயம் உண்டாகும். தாயின் தேவையைப் பூர்த்தி செய்வீர்கள். சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு. வியாபாரத்தில் பணியாளர்களின் ஒத்துழைப்பால் கூடுதல் லாபம் கிடைக்கும். பங்குதாரர்களால் ஆதாயம் கிடைக்கக்கூடும். விநாயகர் வழிபாடு நன்று.

மிதுன ராசி அன்பர்களே!

மனதில் தைரியமும் தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். செயல்களில் துணிச்சல் வெளிப்படும். குடும்பம் தொடர்பான பிரச்னை ஒன்று சுமுகமாக முடியும். கணவன் – மனைவிக்கிடையே ஏற்பட்ட சிறுசிறு பிணக் குகள் மறைந்து, அந்நியோன்யம் அதிகரிக்கும். புதிய முயற்சிகளை ஒருமுறைக்குப் பலமுறை யோசித்துத் தொடங்கு வது நல்லது. வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் சுமாராகத்தான் இருக்கும். பணியாளர்கள் நல்லபடி ஒத்துழைப்பார்கள். அம்பிகை வழிபாடு நலம் சேர்க்கும்.

கடக ராசி அன்பர்களே!

காலை முதலே சுறுசுறுப்பாகச் செயல்படுவீர்கள். திடீர் செலவுகள் ஏற்பட்டாலும் தேவையான பணம் இருப்பதால் கடன் வாங்காமல் சமாளித்துவிடுவீர்கள். குடும்பத்தில் உள்ளவர்கள் உங்கள் முயற்சிகளுக்கு அனுசரணையாக நடந்துகொள்வார்கள். பிள்ளைகளால் மகிழ்ச்சி ஏற்படும். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் எதிர்பார்த்தபடியே இருக்கும். அம்பிகையை வழிபட நன்மைகள் அதிகரிக்கும்

சிம்ம ராசி அன்பர்களே!

முற்பகலில் செயலில் நிதானம் தேவை. வழக்கமான பணிகளில் மட்டுமே ஈடுபடவும். மற்றவர்களுடன் மனஸ்தாபம் ஏற்பட வாய்ப்பு உள்ளதால் பேசும்போது பொறுமை அவசியம். தாய்வழி உறவுகளுக்காக செலவு செய்யவேண்டி வரும். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். வியாபாரத்தில் சில சங்கடங்களைச் சமாளிக்கவேண்டி வரும். பணியாளர்களிடம் போதுமான ஒத்துழைப்பு கிடைக்காது. சிவபெருமானை வழிபடுவது நன்று.

கன்னி ராசி அன்பர்களே!

சிலருக்கு அதிர்ஷ்ட வாய்ப்புகள் ஏற்படும் நல்ல நாள். எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு. இன்று நீங்கள் எடுக்கும் புதிய முயற்சி வெற்றிகரமாக முடியும். உங்களுடைய முயற்சிக்கு வாழ்க்கைத்துணை ஆதரவாக இருப்பார். வாழ்க்கைத்துணைவழி உறவினர்களால் ஆதாயம் உண்டாகும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். பங்குதாரர்களிடம் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாகும். முருகப்பெருமானை வழிபட நன்மைகள் அதிகரிக்கும்.

துலா ராசி அன்பர்களே!

குடும்பத்தினரால் எதிர்பாராத செலவுகள் ஏற்படும். அதன் காரணமாக கையிருப்பு கரைவதுடன் சிலருக்குக் கடன் வாங்கவேண்டிய நிர்ப்பந்தமும் ஏற்படும். வாழ்க்கைத்துணை மூலம் எதிர் பார்த்த காரியம் முடிவது மகிழ்ச்சி தரும். நண்பர்கள் மூலம் ஆதாயம் கிடைக்க வாய்ப்பு உள்ளது. பணிகளைக் குறித்த நேரத்தில் முடிப்பீர்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைப்பதற்குச் சற்று கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். ஆஞ்சநேயரை வழிபடுவது சிறப்பு.

விருச்சிக ராசி அன்பர்களே!

தந்தைவழி உறவினர்களிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். தந்தையின் தேவையை நிறைவேற்றுவீர்கள். உறவினர்களிடம் பேசும்போது பொறுமையைக் கடைப்பிடிக் கவும். தந்தைவழி உறவினர்களிடம் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும். வியாபாரத்தில் பணியாளர்களால் பிரச்னைகள் ஏற்படக்கூடும். பங்குதாரர்களிடம் அனுசரணையாக நடந்து கொள்ளவும். பைரவர் வழிபாடு பலன் தரும்.

தனுசு ராசி அன்பர்களே!

உற்சாகம் நிறைந்திருக்கும் நல்ல நாள். பிள்ளைகள் கேட்டதை வாங்கித் தருவீர்கள். பிற்பகலுக்குமேல் அக்கம்பக்கத்தில் இருப்பவர்களால் வீட்டில் சில சங்கடங்கள் ஏற்படக்கூடும். மற்ற வர்களுடன் இணக்கமாக நடந்துகொள்வது அவசியம். வியாபாரத்தில் விற்பனை வழக்கம் போலவே காணப்படும். பணியாளர்களின் கோரிக்கையை நிறைவேற்ற முயற்சி செய்வீர்கள். அம்பிகையை வழிபடுவது நன்று.

மகர ராசி அன்பர்களே!

சற்று பொறுமையுடன் செயல்படவேண்டிய நாள். குடும்பம் தொடர்பான முக்கிய முடிவு எடுப்பதை தவிர்ப்பது நல்லது. பிள்ளைகள் பிடிவாதம் பிடித்தாலும் அனுசரித்துச் செல்லவும். பிற்பகலுக்கு மேல் தாய்வழி உறவினர்கள் மூலம் மகிழ்ச்சி தரும் செய்தி கிடைக் கும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களுடன் மனஸ்தாபம் ஏற்பட வாய்ப்பு உள்ளதால் அவர்களி டம் கனிவாக நடந்துகொள்ளவும். விநாயகரை வழிபடுவது நலம் சேர்க்கும்.

கும்பராசி அன்பர்களே!

எதிலும் பொறுமையைக் கடைப்பிடிக்கவேண்டிய நாள். தந்தையின் விருப்பத்தைப் பூர்த்தி செய்வீர்கள். திடீர் செலவுகள் மனதை சஞ்சலப்படுத்தும். முக்கிய முடிவு களை ஒரு முறைக்குப் பலமுறை யோசித்து எடுப்பது நல்லது. வியாபாரத்தில் விற்பனை வழக்கம் போலவே இருக்கும். பணியாளர்களுக்காக செலவு செய்ய நேரிடும். இன்று மகாவிஷ்ணுவை வழிபடுவது சிறப்பானப் பலன்களைத் தரும்.

மீனராசி அன்பர்களே!

குடும்பத்தினரின் தேவைகளை நிறைவேற்றி மகிழ்வீர்கள். எதிர்பாராத பணவரவுடன், திடீர் செலவுகளும் ஏற்படும். நீண்டநாள்களாகத் திரும்பிச்செலுத்த நினைத்த கடனைத் தந்து முடித்து நிம்மதியடைவீர்கள். கணவன் – மனைவிக்கிடையே மனஸ்தாபம் ஏற்பட வாய்ப்பு உள்ளதால் ஒருவரையொருவர் அனுசரித்துச் செல்வது நல்லது. பிள்ளைகளால் பணவரவுக்கு வாய்ப்பு உள்ளது. வியாபாரம் வழக்கம் போலவே இருக்கும். துர்கையை வழிபடுவது நன்று.

சதீஸ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...