நாட்டு சேதியும் !!! நம்ம சேதியும்!!!
நாட்டு சேதியும் !!! நம்ம சேதியும்!!!
செங்கல்பட்டு மாவட்டம் இன்று உதயம். வேண்பாக்கம் அரசினர் தொழிற்பயிற்சி நிலைய வளாகத்தில் தமிழக முதலமைச்சர் கே. பழனிசாமி இன்று நண்பகல் 12 15 மணிக்கு தொடங்கி வைக்கிறார்.
மாவட்டம் என்னமா புதுசு புதுசாத்தான் உதயமாகுது…. மாநிலத்தோடு ஒட்டுமொத்த வளர்ச்சிதான் உள்வாங்கிக் கிட்டே போகுது ….அதையும் கொஞ்சம் பாருங்க….
**************************************
தாம்பரம் உள்ளிட்ட புறநகர் பகுதிகளில் பலத்த மழை .வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்ததால் மக்கள் அவதி.
வீதியில போறதுக்கு இடமில்லயினா வீட்டுக்குள்ளதானுங்களே புகுந்து போக முடியும்……
****************************************
கிழக்கு கடற்கரை சாலையில் பல்வேறு பிரபலங்கள் சொகுசு பங்களா கட்ட அனுமதித்த விவகாரம். மாநகராட்சி ஆணையருக்கு உயர் நீதிமன்றம் 25 ஆயிரம் ரூபாய் அபராதம் .பெரிய தடுப்புகளை கட்ட மாட்டோம் என பங்களா கட்டியவர்கள் உறுதிமொழி கொடுத்தால் போதும். உயர் நீதிமன்றம் உத்தரவு.
இதுவே ஏழை பாலைங்க வீடு கட்டி இருந்தா இந்நேரம் இடிச்சுத் தள்ளி இருப்பீங்கதான…. வாழ்க ஜனநாயகம்….. வாழ்க சட்டம்…. வாழ்க நீதித்துறை….
****************************************
கூடங்குளம் அணுமின் நிலையம் முற்றிலும் பாதுகாப்பாக உள்ளது. இந்தியாவில் உள்ள அனைத்து அணுமின் நிலையங்களும் பாதுகாப்பாக இயங்கி வருகின்றன. அணுமின் நிலையத்தின் உற்பத்தியை விட பாதுகாப்பிற்கு முன்னுரிமை அளித்து மத்திய அரசு செயல்பட்டு வருகிறது. பிரதமர் அலுவலக இணை அமைச்சர் ஜிதேந்திர சிங்.
அணுமின் நிலையம் எல்லாம் பாதுகாப்பாகத்தானுங்க இருக்கும். அதப் பாதுகாக்கத் தான் நீங்க இருக்கீங்களே… எங்க கேள்வி என்னன்னா… நம்ம சுற்றுப்புறச் சூழலும் மக்களும் பாதுகாப்பா இருக்காங்களா? அவங்கள பார்த்துக்கத்தான் ஆள் இல்லிங்களே….. சுட்டுத்தள்ளிர மாட்டீங்க….
**************************************