நாட்டு சேதியும் !!! நம்ம சேதியும்!!!

 நாட்டு சேதியும் !!! நம்ம சேதியும்!!!
நாட்டு சேதியும் !!! நம்ம சேதியும்!!!
          மகாராஷ்டிராவில் சிவசேனா கூட்டணி முதல்வராக பல்வேறு அரசியல் குழப்பங்களுக்கு பிறகு உத்தவ் தாக்கரே இன்று பதவி ஏற்கிறார் .
          பகுதி-2 ஆரம்பம் போல…. இது எத்தன நாளைக்குன்னு தெரியலயே….எதுக்கும் ஒவ்வொரு நாளும் தூங்கி எழுந்திருக்கும்போது யாரு முதல்வர்னு ஒரு தடவை உறுதிப்படுத்திக்கங்க மகாராஷ்டிர மக்களே…..
***************************************
         கிருஷ்ணகிரி ,திருவள்ளூர், மற்றும் நாகப்பட்டினம் ஆகிய மூன்று மாவட்டங்களுக்கு புதிய அரசு மருத்துவ கல்லூரி அமைக்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. ஏற்கனவே அக்டோபர் 23ஆம் தேதி தமிழ்நாட்டிற்கு ஒரே நேரத்தில் ஆறு அரசு புதிய அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கு அனுமதி பெற்றதோடு மட்டுமல்லாமல் தற்போது கூடுதலாக மூன்று அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கு அனுமதி பெறப்பட்டுள்ளது. ஒரே ஆண்டில் 9 புதிய அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கு அனுமதி பெறுவது ஒரு வரலாற்று சாதனை.– முதல்வர் பழனிசாமி.
          எப்படியும் நம்ம புள்ளைங்க ஒன்ன கூட நீங்க படிக்க விட போறது இல்ல… இன்னும் கொஞ்சம் வருஷத்துல தமிழ்நாடு பூரா வட நாட்டு மருத்துவர்கள் தான் இருப்பாங்க… அவங்க கிட்ட போய் வியாதி  என்னன்னு சொல்றதுக்காகவாவது இந்தி படிக்கணும் போலயே…….
***************************************
         கண்புரை அறுவை சிகிச்சைக்காக ரூபாய் 46 ஆயிரம் மதிப்புள்ள செல்லாத நோட்டுகளுடன் செய்வதறியாது நிற்கிற திருப்பூரைச் சேர்ந்த சகோதரிகளான இரு மூதாட்டிகள். பணமதிப்பிழப்பு நடவடிக்கை தெரியாமல் இறக்கும் முன் தங்கள் கணவர்கள் வெள்ளாடுகளை விற்றுக் கொடுத்த பணத்தை பத்திரமாக இத்தனை நாட்கள் வைத்திருந்து அறுவை சிகிச்சைக்காக எடுத்த போது அறிய வந்த பரிதாபம். அந்தப் பணத்தை மாற்ற இயலாது என்றுவிட்ட வங்கி மேலாளர்.
              கோடிகளைக் கொள்ளை இட்டு திரியும் கேடிகளோடு கைகோர்த்து இருக்கும் அரசாங்கம் உங்களைப் போன்ற அப்பாவிகளின் குரலுக்கு செவிமடுக்குமா என்ன??? வேதனைப்படுவதைத் தவிர வேறு ஒன்றும் செய்ய இயலாத கையாலாகாதவர்களாய் நாங்கள்…. மன்னித்துவிடுங்கள் எங்களை……
*************************************
       கோட்சே தேசபக்தர்—– மக்களவையில் மத தீவிரவாத குற்றம் சாட்டப்பட்ட எம்பி பிரக்யா தாகூர் மறுபடியும் சர்ச்சை பேச்சு.
       
          அணையப் போற விளக்கு பிரகாசமாக எறியிற மாதிரி அடிக்கடி இப்போவெல்லாம் கொஞ்சம் அதிகமாத்தான் பேசுறீங்க…..
****************************************
                எஸ் பி ஜி சட்டத்திருத்த மசோதா நிறைவேற்றம் .சிறப்பு பாதுகாப்பு இனி பிரதமருக்கும் மட்டுமே. 
                
              மொத்த அதிகாரமும் எங்க இருக்கோ  பாதுகாப்பு அங்க மட்டும் கொடுத்தா போதும் தானே….. நீங்க சரியாதானுங்க செஞ்சிருக்கீங்க…..
*******************************************

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...