இன்றைய முக்கியச் செய்திகள்

 இன்றைய முக்கியச் செய்திகள்

நாகப்பட்டினத்தில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ரூ.7.97 கோடி மதிப்பிலான கட்டடங்களை முதலமைச்சர் பழனிசாமி காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார். மொத்தம் ரூ.82.94 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பல்வேறு கல்லூரி கட்டடங்களையும்  முதல்வர் பழனிசாமி திறந்து வைத்தார்.

ஜம்மு -காஷ்மீர், ஜேஎன்யூ விவகாரம் தொடர்பாக எதிர்க்கட்சிகள் தொடர் அமளி: மாநிலங்களவை பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைப்பு.

முதலமைச்சர் பழனிசாமி தலைமையில், அமைச்சரவை கூட்டம் இன்று நடைபெறுகிறது. இக்கூட்டத்தில், உள்ளாட்சி அமைப்புகள் சட்டத்தில் திருத்தம் செய்வது குறித்து ஆலோசிக்கப்படும் என தகவல்.

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு, ரூ.232 உயர்ந்து ரூ.29,264-க்கு விற்பனை.

வாட்ஸ் அப் விவகாரம்
தொடர்பாக, நாளை தொழில்நுட்பத்துக்கான நாடாளுமன்ற நிலைக்குழு ஆலோசனை நடத்துகிறது. தனிநபர் உரிமையை பறிக்கும் விதத்தில் வாட்ஸ்அப்பில் உளவு பார்க்கப்பட்டதாக எழுந்த புகார் குறித்து ஆலோசனை.

அமலாக்கத்துறையின் கோரிக்கையை ஏற்று சிதம்பரம் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்ட உத்தரவில், திருத்தம் செய்ய டெல்லி உயர்நீதிமன்றம் ஒப்புதல்.

சென்னை முழுவதும் நடைபாதைகளில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள வாகனங்களை அப்புறப்படுத்த சென்னை மாநகராட்சி, காவல்துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு.

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...