பெண்கள் நம் நாட்டின் கண்கள்
பெண்கள் நம் நாட்டின் கண்கள்
பூமியில் உயிராய் தோன்றிட
பெருந்தவம் செய்திருக்க வேண்டு
ம் அதிலும் பெண்ணாய் பிறந்திடவே
பெரும்பேறு பெற்றிருக்க வேண்டும்
மகளாய், சகோதரியாய் தோழியாய்
, காதலியாக மனைவியாய் , அன்னையாய்
எத்துணை அவதாரங்கள் உவமை ஏதும் இல்லாததாய்
பெண்மையின் தாய்மை
அது இல்லையெனில் ஏது ஆண்மையின் ஆளுமை
பெண் என்பவள் மாபெரும் சக்தி
அழித்திடுவாள் தீயசக்திகளை
கடலலைகள் கால்கள் மட்டுமே நனைக்கும்
என்பது பேதைகள் நம்பிக்கையாக இருக்கும்
கணுக்காலுக்கு கீழே கட்டுண்டுக் கிடக்க
சிற்றலைகளின் எச்ச நீரல்ல பெண்
பேராழிகளின் உக்கிரம் பேசும் பேரலைகள்
பெண்களுக்கு எதிரான எல்லாவித வன்முறைகளையும்
தவிர்த்திட சபதமேற்கும் நாளாக அமையட்டும்
பெண்சக்தி எவ்விதத்திலும் தாழ்ந்ததல்ல என
நம் சிந்தையில் நிறுத்தும் நாளாகட்டும்
உயர்த்திப் பிடியுங்கள் என்றோ கொண்டாடுங்கள்
எனவும் கோரவில்லை கோரசிந்தை மாற்றி
சக ஜீவியாய் சந்தோசமாய் வாழவிடுங்கள்
பாவப்பட்டவளல்ல பெண்
பவித்ரமானவளென்று சொல்லுங்கள்
படைத்திடுவாள் ஆக்கசக்தியாய்
காத்திடுவாள் அன்னைசக்தியா
ய் பெண்ணியம் என்னும்
கண்ணியத்தை போற்றுவோம்
மஞ்சுளாயுகேஷ்