தமிழ் இலக்கியத்தில் ஒரு பெண்பால் புலவர்.குறமகள் குறியெயினி.
தமிழ் இலக்கியத்தில் ஒரு பெண்பால் புலவர்.
சங்க இலக்கிய நூல்களில் ஒன்றான நற்றிணையில் 357 வது பாடலை எழுதியவர் புலவர் :
குறமகள் குறியெயினி.
பொதுவாக மலைவாழ் மக்களெல்லாம் இப்போதுதான் படித்து முன்னேறி வருகின்றனர் என்பது நாம் அறிந்த ஒன்று.
ஆனால் சங்க இலக்கிய காலத்திலும் இவர்கள் பெயர் பெற்றுள்ளனர்
குறமகள் குறியெயினி என்னும் புலவர் பாடல் எழுதி அக்காலத்திலேயே மலைவாழ் மக்கள் என்று சொல்லக்கூடிய இவர் பெருமை சேர்த்துள்ளார்.
இந்த குற மகளால் அக்காலத்திலே தமிழ் மேலோங்கி உள்ளதற்கு இதுவும் ஒரு சான்று ஆகும்.
மகளிர் தினத்தில் இப்ப பெண்பால் புலவரை போற்றுவோம்
இவர் எழுதிய பாடல்:
நின் குறிப்பு எவனோ தோழி என் குறிப்பு
என்னோடு நிலையாது ஆயினும் என்றும்
நெஞ்சு வடுப்படுத்துக் கெட அறியாதே
சேண் உறத் தோன்றும் குன்றத்து கவா அன்
பெயல் உழந்து உலறிய மணிப்பொறி குடுமிப்
பீலி மஞ்சை ஆலும் சோலை
அம் கண் அறைய அகல் வாய்ப்பைஞ் சுனை
உண் கண் ஒப்பின் நீலம் அடைச்சி
நீர் அலைக் கலைஇய கண்ணிச்
சாரல் நாடனொடு ஆடிய நாளே “.
தலைவி, தோழியிடம் தலைவனோடு அன்று ஒரு நாள் இருந்த நிலைப் பற்றி தெரிவிக்கும் கருத்து.
” உன்னுடைய கருத்து என்னவோ?தோழி
என்னுடைய கருத்து என்னோடு அது நிலையாக நிலைத்திருக்க மாட்டாதாயினும் எந்நாளும் நெஞ்சினைக் காயப்படுத்தி கெடுவதை அறியாதது. நெடுந்தொலைவு உயர்ந்து தோன்றும் குன்றில் உள்ள உச்சிமலை சரிவில் மழையில் நனைந்து சிலிர்த்த மணி போன்ற புள்ளிகளை உடைய குடுமியையும், தோகையும் கொண்ட மயில்கள் ஆடுகின்ற சோலையில் அழகிய இடமான பாறைகளைக் கொண்ட அகன்ற வாயுடைய ( கொடைக்கானல் குணா குகையைப் போன்ற இடத்தில் ) புது நீருள்ள சுனையின் மையுண்ட கண்களுக்கு ஒப்பான குவளை மலர்களை கொய்த்து தலையில் செறுகிக்கொண்டு சுனை நீரால் அலைக்கப்பட்டு கலைந்து போன தலை மாலையுடைய சாரல் நாடான தலைவனோடு நான் விளையாடி அந்த நாள்.
தலைவி,தலைவனோடு விளையாடி மகிழ்ந்த அந்த நாளில் இயற்கை அழகும் எவ்வாறு அமைந்ததை இப்பாடலின் மூலம் எடுத்து கூறி உள்ளார் பெண்பாற் புலவர் குறமகள் குறியெயினி.
இன்று சங்க நூலான நற்றிணையில் பாடல் ஒன்றை எழுதியஇப் பெண்பால் புலவர் குறமகள் குறியெயினியை இம் மகளிர் தினத்தில் நினைவு கொள்வோம்.
முருக. சண்முகம்