ACTION திரைவிமர்சனம்
ஜேம்ஸ் பாண்ட் படங்களைப் போல ஒரு நீண்ட சண்டைக் காட்சியுடன் படம் துவங்குகிறது. அதற்குப் பிறகு, அந்த சண்டை எதற்காக என ஃப்ளாஷ் பேக்கில் சொல்கிறார்கள். அந்த ஃப்ளாஷ் பேக் முடிவதற்குள் முதலில் நடந்த சண்டையே மறந்துவிடுகிறது. பிறகு, ‘ரீ-கேப்’ போட்டு மீண்டும் கதை தொடர்கிறது
நகைச்சுவை நிரம்பிய, கலகலப்பான திரைப்படங்களுக்குப் பெயர்போன சுந்தர். சி. இந்த முறை விஷாலுடன் இணைந்து ஒரு ஆக்ஷன் கதையை முயற்சித்திருக்கிறார். சர்கார்படத்திற்குப்பிறகுபழகருப்பையாமீண்டும்அரசியல்வாதியாக நடித்திருக்கிறார்
தேசிய அரசியல் தலைவர் ஒருவர் தமிழ்நாட்டில் கொல்லப்படுகிறார். அதில், முதலமைச்சருடைய (பழ. கருப்பைய்யா) மூத்த மகன் (ராம்கி) குற்றம்சாட்டப்படுகிறார். பிறகு அவர் தற்கொலையும் செய்துகொள்கிறார். தேசியத் தலைவரின் கொலைக்குப் பின்னால் இருப்பது உண்மையிலேயே யார் என்பதை முதல்வரின் இளைய மகன் (விஷால்), பல நாடுகளுக்குப் பயணம் செய்து கண்டுபிடிக்கிறார் என்பதுதான் படத்தின் கதை.ஓடுவது, சுடுவது, பறப்பது, சண்டை போடுவது என விஷாலின் ஆக்ஷன் படங்களின் எண்ணிக்கையில் ஒன்று அதிகரித்திருக்கிறது. தமன்னா, ஐஸ்வர்யா லக்ஷ்மி என இரண்டு நாயகிகள் இருக்கிறார்கள்.சுந்தர். சி. எந்த பாணியில் படம் எடுத்தாலும் அதில் நகைச்சுவைக் காட்சிகளுக்கு பஞ்சம் இருக்காது. ஆனால் இந்தப் படத்தில் அந்த பகுதி சுத்தமாக இல்லை.