சபரிமலை நடை நாளை திறப்பு! மண்டல பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை நாளை திறக்கப்படுகிறது.
இன்று முதல் வரும் ஜனவரி 20ம் வரை தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கம். சபரிமலையில் ஐயப்பனை தரிசிக்க ஆன்லைனில் விண்ணப்பித்த, 36 பெண்களுக்கு அனுமதி தரலாமா என்பது குறித்து, திருவிதாங்கூர் தேவசம் போர்டுடன் கேரள அரசு ஆலோசனை சபரிமலை விவகாரம்: மத்திய, மாநில அரசுகளுக்கு உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தல். சபரிமலை தீர்ப்பை அனைவரும் கடைபிடிக்க வேண்டும்.
பெண்களை அனுமதிக்கும், சபரிமலை தீர்ப்பை மீறுவதை அனுமதிக்க முடியாது – உச்ச நீதிமன்றம். மத்திய அரசு வழக்கறிஞர் துஷார் மேத்தாவிடம், உச்ச நீதிமன்ற நீதிபதி நாரிமன் அறிவுறுத்தல்.10 முதல் 50 வயது வரையிலான பெண்கள் சபரிமலைக்கு வந்தால் பாதுகாப்பு அளிக்க மாட்டோம், நீதிமன்ற அனுமதி வாங்கி வரும் பெண்களுக்கு மட்டுமே பாதுகாப்பு அளிக்கப்படும்: கேரள தேவசம்போர்டு அமைச்சர் கடம்கம்பள்ளி சுரேந்திரன்
