நாட்டு சேதியும் !!! நம்ம சேதியும் !!!
நாட்டு சேதியும் !!! நம்ம சேதியும்!!
நாட்டு சேதி:
தலைமை நீதிபதி ஆர்.டி.ஐ. (தகவல் அறியும் உரிமைச் சட்டம்) வரம்புக்கு உட்பட்டவர். பொதுமக்கள் இனி தகவல்களை பெறலாம். சுப்ரீம் கோர்ட் வரலாற்றுத் தீர்ப்பு!!!
நம்ம சேதி:
அடடே!!!
———————————————–
நாட்டு சேதி:
அதேசமயம் ஆர்.டி.ஐ. (தகவல் அறியும் உரிமைச் சட்டம்) சட்டத்தை நீதிபதிகளை, நீதித்துறையை கண்காணிக்கும் கருவியாக பயன்படுத்த கூடாது.
நம்ம சேதி:
அதான பாத்தேன்!!!
———————————————–
நாட்டு சேதி:
சுற்றுச்சூழலை பாதுகாக்க பழைய வாகனங்களை உடைத்து அதிலிருந்து கிடைக்கும் மூலப்பொருட்களைக் கொண்டு புதிய வாகனங்கள் தயாரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான உடைப்பு மையங்கள் இந்தியா முழுவதும் திறக்கப்பட உள்ளன.
நம்ம சேதி:
உடச்சதெல்லாம் பத்தாதுன்னு இப்போ வண்டியில வந்து நிக்குது. இப்பகூட நச்சுக் கழிவை வெளியிடுற தொழிற்சாலைகள், எட்டு வழி சாலை,பணத்துக்காகவே கட்டப்படுற பாலம் ,கோயில்,சாமியார் பேரால அழிக்கப்படுற இயற்கை வளங்களப் பத்தி பேச மாட்டீங்களே!!!
———————————————–
நாட்டு சேதி :
மேட்டூர் அணையிலிருந்து வீணாகும் உபரி நீரை திருப்பிவிடும் திட்டத்திற்கு 565 கோடி நிதி ஒதுக்கீடு– முதல்வர் பழனிசாமி அறிவிப்பு.
நம்ம சேதி :
மக்கள் பணத்த தான் தண்ணியா செலவழிகிறிங்களே தவிர தேவப்படுற தண்ணிய கண்ணுல காட்ட மாட்டீங்கறீங்களே எசமான்!!!
———————————————–
நாட்டு சேதி:
இந்தியாவிலேயே சர்க்கரை நோய் பாதிப்பில் தமிழகம் முதல் இடம்.
நம்ம சேதி :
எது எதில முதலிடம்ன்னு ஒரு வரையறையே இல்லாம போச்சு. இதுக்கு அர்த்தம் தமிழ்நாடு முழுக்க முழுக்க கார்ப்பரேட் காரன் கடை வீதியை மாறி போச்சு…. அதானுங்களே
———————————————–
நாட்டு சேதி :
உலகின் அனைத்து நாடுகளும் ஏங்கக்கூடிய கலைச் சின்னங்கள் நம்மிடம் இருக்கும் நிலையில் அவை பராமரிப்பின்றி சீரழிவதை அனுமதிக்கக்கூடாது. –பாமக நிறுவனர் ராமதாஸ்
நம்ம சேதி :
தமிழ் இன உணர்வு மட்டும் தான் உண்மையானது, ஆதியில இருந்தே இருக்கது, அதயே மறந்துட்டு உங்கள மாதிரி நாலு பேரு இன்னும் நல்லா சாதி அரசியல் செஞ்சா சின்னங்கள் என்ன!! தமிழ் நாடே சீரழிஞ்சு தான் போகும்!!!
———————————————–