05-11-2019 செவ்வாய்க்கிழமை – இன்றைய ராசி பலன்கள்

05-11-2019 செவ்வாய்க்கிழமை – இன்றைய ராசி பலன்கள்
மேஷம்
 உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றமான சூழல் உண்டாகும். செலவுகளை குறைத்து சேமிப்பை அதிகப்படுத்த முயல்வீர்கள். வழக்கு விவகாரங்களில் சாதகமான பலன்கள் ஏற்படும். தடைபட்ட காரியங்களை செய்து முடிப்பீர்கள். சந்தேக உணர்வினால் மனக்கசப்புகள் ஏற்படலாம்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : மயில் நீலம் 
அஸ்வினி : முன்னேற்றமான நாள். 
பரணி : சேமிப்பு அதிகரிக்கும்.
கிருத்திகை : மனக்கசப்புகள் ஏற்படலாம். 
—————————————
ரிஷபம்
 அரசு சம்பந்தமான செயல்பாடுகளில் இருந்த தடைகள் அகலும். மூத்த உடன்பிறப்புகளால் அனுகூலமான பலன்கள் உண்டாகும். கல்வி பயிலும் மாணவர்களுக்கு சாதகமான நாள். மனை சம்பந்தமான விவகாரங்களில் சுமூக முடிவுகள் கிடைக்கும். செயல்படும் விதத்தில் புதிய யுக்திகளை பயன்படுத்துவீர்கள்.  
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : இளநீலம் 
கிருத்திகை : தடைகள் அகலும். 
ரோகிணி : அனுகூலமான நாள். 
மிருகசீரிஷம் : முடிவுகள் கிடைக்கும்.  
—————————————
மிதுனம்
 பணியில் கூடுதல் பொறுப்புகள் உண்டாகும். இணையதளம் தொடர்பான பணிகளில் சாதகமான வாய்ப்புகள் அமையும். வருவாய் சம்பந்தமான எண்ணங்கள் மேலோங்கும். திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் அமையும். அயல்நாட்டு பயணங்களில் சாதகமான சூழல் உண்டாகும். 
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : பழுப்பு நிறம்
மிருகசீரிஷம் : பொறுப்புகள் உண்டாகும்.
திருவாதிரை : வாய்ப்புகள் அமையும்.
புனர்பூசம் : சாதகமான நாள்.
—————————————
கடகம்
 முக்கிய கோப்புகளை கையாளும்போது கவனம் வேண்டும். மனதில் அஞ்ஞான எண்ணங்கள் உண்டாகும். மாணவர்கள் கவனத்துடன் செயல்படவும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். பணிபுரியும் இடங்களில் உயர் அதிகாரிகளிடம் வீண் விவாதங்களை தவிர்க்கவும். 
அதிர்ஷ்ட திசை : கிழக்கு 
அதிர்ஷ்ட எண் : 9 
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்
புனர்பூசம் : கவனம் வேண்டும்.
பூசம் : எண்ணங்கள் மேலோங்கும்.
ஆயில்யம் : பேச்சில் நிதானம் வேண்டும்.
—————————————
சிம்மம்
 குடும்ப உறுப்பினர்களால் அனுகூலமான பலன்கள் ஏற்படும். எதிர்பாராத பணவரவு உண்டாகும். கணவன், மனைவிக்கிடையே ஒற்றுமை அதிகரிக்கும். உயர் அதிகாரிகளின் மூலம் சாதகமான பலன்கள் ஏற்படும். தொழிலில் புதிய நேர்த்தியான முடிவுகளால் மேன்மை உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 3  
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்
மகம் : இடர்பாடுகள் நீங்கும்.
பூரம் : ஒற்றுமை அதிகரிக்கும். 
உத்திரம் : மேன்மை உண்டாகும்.
—————————————
கன்னி
 செய்யும் செயல்களில் திருப்திகரமான சூழல் அமையும். பணிபுரியும் இடங்களில் சக ஊழியர்களால் சாதகமான வாய்ப்புகள் உண்டாகும். மனதில் இருந்துவந்த கவலைகள் குறையும். தொழிலில் சில மாற்றங்களை செய்வீர்கள். பணியில் எதிர்பார்த்த சாதகமான சூழல் அமையும்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு  
அதிர்ஷ்ட எண் : 8 
அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்
உத்திரம் : திருப்திகரமான நாள்.
அஸ்தம் : கவலைகள் குறையும்.
சித்திரை : மாற்றம் உண்டாகும்.
—————————————
துலாம்
 கூட்டாளிகளால் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். தொழில் சம்பந்தமான புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். தாய்வழி உறவுகளால் ஆதரவான சூழல் ஏற்படும். நிலம் தொடர்பான பேச்சுவார்த்தைகளில் எதிர்பார்த்த முடிவுகள் கிடைக்கும். தைரியத்துடன் புதிய திட்டங்களை செயல்படுத்துவீர்கள்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு 
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : சந்தன வெள்ளை நிறம்
சித்திரை : எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.
சுவாதி : அறிமுகம் கிடைக்கும்.
விசாகம் : ஆதரவான நாள்.
—————————————
விருச்சிகம்
 இணையதளம் சம்பந்தமான பணிகளில் இழுபறியான சூழல் நிலவும். மூத்த உடன்பிறப்புகளால் ஆதாயம் உண்டாகும். புதிய அணிகலன்கள் வாங்குவதற்கான வாய்ப்புகள் அமையும். பூமி விருத்திக்கான செயல்திட்டங்களை வகுப்பீர்கள். வழக்குகளில் சாதகமான முடிவுகள் கிடைக்கும். செயல்பாடுகளில் மாற்றம் உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு 
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : அடர் பச்சை 
விசாகம் : இழுபறி உண்டாகும்.
அனுஷம் : வாய்ப்புகள் அமையும்.
கேட்டை : மாற்றம் உண்டாகும்.
—————————————
தனுசு
 செய்யும் பணிகளில் பதற்றமின்றி நிதானத்துடன் செயல்படவும். பணி சம்பந்தமான அலைச்சல்களால் மேன்மை உண்டாகும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்க காலதாமதமாகும். பூர்வீக சொத்துக்களால் சில விரயச் செலவுகள் நேரிடலாம். பெரியோர்களிடம் நிதானத்துடன் செயல்படவும். தொழிலில் சக பணியாளர்களிடம் மதிப்புகள் அதிகரிக்கும்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
மூலம் : நிதானம் வேண்டும்.
பூராடம் : காலதாமதம் நேரிடலாம்.
உத்திராடம் : மதிப்புகள் அதிகரிக்கும்.
—————————————
மகரம்
 திறமைக்கேற்ற அங்கீகாரம் கிடைக்கும். பிறரின் விமர்சனங்களை பொருட்படுத்தாமல் பணியில் கவனத்துடன் செயல்படவும். வாகனங்களில் உள்ள பழுதுகளை சரி செய்வீர்கள். கால்நடைகளின் மூலம் இலாபம் அதிகரிக்கும். திருமண வரன்கள் கைகூடும். பயணங்களால் புதுவிதமான அனுபவம் உண்டாகும். ஆராய்ச்சி சம்பந்தமான தேடலில் பிரபலங்களின் அறிமுகம் கிடைக்கும்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்
உத்திராடம் : அங்கீகாரம் கிடைக்கும்.
திருவோணம் : இலாபம் அதிகரிக்கும்.
அவிட்டம் : அறிமுகம் கிடைக்கும்.
—————————————
கும்பம்
 நிர்வாகம் சம்பந்தமான பணியில் பொறுப்புகள் அதிகரிக்கும். திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் உண்டாகும். தொழில் சம்பந்தமான புதிய முடிவுகளை எடுப்பீர்கள். எதிர்காலம் சார்ந்த சிந்தனைகள் மேம்படும். மனதில் புதிய இலக்கை நிர்ணயம் செய்வீர்கள்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 5  
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்
அவிட்டம் : பொறுப்புகள் அதிகரிக்கும்.
சதயம் : வாய்ப்புகள் உண்டாகும்.
பூரட்டாதி : சிந்தனைகள் மேம்படும்.
—————————————
மீனம்
 கல்வி பயிலும் மாணவர்களுக்கு அனுகூலமான நாள். வாதத்திறமையால் கீர்த்தி உண்டாகும். புதிய நபர்களின் மூலம் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். கெளரவ பதவிகளால் மகிழ்ச்சி உண்டாகும். ஆராய்ச்சி சம்பந்தமான தேடல் உண்டாகும். திருமண வரன்கள் கைகூடும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு 
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
பூரட்டாதி : மகிழ்ச்சியான நாள்.
உத்திரட்டாதி : எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.
ரேவதி : சுபச்செய்திகள் கிடைக்கும்.
————————–

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!