நல்ல நட்பு

 நல்ல நட்பு

நல்ல நட்பு


ஒற்றை நபரை நான்கு
கால்கள் சுமக்கும்
நாற்காலி போலத்தான்

தழைத்து வளரும் பழங்களை
முன்னின்று காக்கும்
முள்வெளி தான்

ஒரு கை சாதம் வைத்தால்
ஊரையே அழைக்கும்
காகம் போலத்தான்

இணையாய் பறக்கும் மாலை
நேரத்து பறவைகளுடைய
ஒற்றுமையை போலத்தான்

கவலையில் இருந்தால் அறிவுரை
இல்லாமல் தரும்
ஆறுதல் போலத்தான்

தடம் பதிக்கும் போது
இடம் பதியாமல்
வடம் பிடிக்குமாம்

நல்ல நட்பு

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...