பொங்கல் பண்டிகை
பொங்கல் பண்டிகை ஏன் கொண்டாட்டமும்
அதன் சிறப்புகளும்
தமிழ்நாட்டில் பொங்கல் பண்டிகையாகவும், கர்நாடகா, ஆந்திர பிரதேசம், தெலங்கானா போன்ற மாநிலங்களில் மகர சங்கராந்தி என்கிற பெயரில் கொண்டாடப்படும் இந்த பண்டிகை தென்னிந்தியாவில் ஒரு மிகப்பெரிய பண்டிகை என்றால் அது மிகை இல்லை.
பொதுவாக விவசாய அறுவடை திருவிழாவாகத்தான் பொங்கல் கொண்டாடப்படுகிறது. இந்த பண்டிகை மேற்கொள்ளப்படும் பூசைகளின் முக்கிய நாயகனாக சூரிய பகவான் கருதப்படுகிறார்
. சூரியனின் செங்கதிர் கிரணங்களின் உதவியினாலும் அவருடைய அருளினாலும் விவசாயம் நன்றாக செழித்து வளர்ந்து உலகில் உள்ள அனைவரும் நன்றாக இருக்க மேற்கொள்ளப்படும் பிரார்த்தனையாகவும் பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது
. ஒரு வகையில் பொங்கல் பண்டிகை இயற்கைக்கு நன்றி சொல்லும் விழாவாகவும் கருதப்படுகிறது. வீரமும் அறிவும் செறிந்த தமிழ் குடிமக்கள் வெறுமனே இயற்கை இறைவனான சூரியனை மட்டும் ஒரு நாளில் வழிபட்டுச் செல்லாமல், தன் உழவுத் தொழிலுக்கு உறுதுணையாக இருக்கும் மாடுகளை அடுத்த நாள் போற்றி வணங்குகின்றனர்.
அதற்கு அடுத்த நாள் காணும் பொங்கல் என்கிற பெயரிலும் கொண்டாட்டங்கள் நடைபெறும். பொங்கல் திருநாள் என்பது தமிழர்களை பொருத்தவரை மூன்று நாட்களைக் கொண்ட ஒரு கொண்டாட்டமாக கருதப்படுகிறது
. பொங்கல் பண்டிகை கொண்டாட்டத்தை ஒட்டி தமிழகத்தின் பல முக்கிய நகரங்களில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்தப்படும்.