தேசிய கீதம் பாடப்பட்ட தினம் இன்று
தேசிய கீதம் பாடப்பட்ட தினம் இன்று
தேசிய கீதம் பாடப்பட்ட தினம் இன்று
முதன்முதலில்
டிசம்பர் 27: முதன்முதலில் தேசிய கீதம் பாடப்பட்ட தினம் இன்று …
நம்ம தேசிய கீதமான ‘ஜன கண மன’ பாடலானது முதல் முதலாக 107 வருஷங்களுக்கு முன்னாடி இதே தினத்தில்தான் மொத மொதல்லே பாடப்பட்டிச்சு. 1911 ம் ஆண்டு டிசம்பர் மாதம் 27 ம் தேதி கொல்கத்தாவில் நடைபெற்ற இந்திய காங்கிரஸ் கட்சியின் மாநாட்டின் போது பாடப்பட்டது. தாகூர் உறவினரான சரளா தேவி என்பவர் பள்ளி மாணவர்களுடன் இணைந்து பாடினார்.
இன்னொரு சமாச்சாரம் தெரியுமா? தாகூர் இயற்றியதே ஜன கண மன என்கிற நம் தேசிய கீதம் .ஐந்து பத்திகள் கொண்டதாக்கும் இதில் ஒரு பத்தியை மட்டுமே நாம் பாடுகிறோம். நெசம் என்னன்னா இதை தாகூர் எழுதுன காலத்தில் வங்கப்பிரிவினை அமலில் இருந்தது.அதையொட்டி நடந்த சமவங்களை கண்டும், கேள்விப்பட்டும் ஏற்பட்ட வலியோடு இந்த தேசம் ஒன்று என வலியுறுத்த தாகூர் இப்பாடலை இயற்றினார் . அதே சமயம் ஆங்கிலேயர் ஆட்சிகாலம் வரை ‘god save the queen’ என்கிற பாடலைத்தான் பாடிக்கொண்டு இருந்தார்கள்.
இப்பத்திய ஜன கண மன ஐந்தாம் ஜார்ஜ் மன்னருக்கு வரவேற்பு அளித்து இயற்றப்பட்ட பாடல் இது என்கிற கருத்து சில பேரால் சொல்லப்பட்டது உண்மையில் ஐந்தாம் ஜார்ஜ் மன்னரை வரவேற்று அதே மாநாட்டில் ராம்புஜ் சவுத்திரி என்பவர் ஓர் இந்திப் பாடலைப் பாடினார். அந்தப் பாடலையும் தாகூரின் பாடலையும் வேறுபடுத்தி அறிந்துகொள்ளாத ‘ஸ்டேட்ஸ்மேன்’, ‘இங்கிலிஷ்மேன்’ போன்ற ஆங்கிலப் பத்திரிகைகள், இரண்டு பாடல்களுமே மன்னரை வாழ்த்திப் பாடியதாக தவறாக தகவல் வெளியிட்டுச்சு.
இதுக்கிடையிலே தாகூரின் ஜன கன மண எனும் இப்பாடல் 1943 இல் நேதாஜி அவர்களால் உருவாக்கப்பட்ட இந்திய தேசிய படையின் தேசிய பாடலானது .
அப்பாலே ஜனவரி 24 அன்று 1950 ஆம் வருடம் இப்பாடல் இந்தியாவின் தேசிய கீதமாக ஏற்றுக்கொள்ளப்பட்டது .
இன்று அப்பாடல் நூறு ஆண்டுகளை கடந்தும் கம்பீரமாக நம் தேசபக்தியின் அடையாளமாக உயர்ந்து நிற்கிறது
அது மட்டுமில்லாம என் பொன் வங்கமே என்கிற பொருளில் தாகூர் வங்கப்பிரிவினையின் பொழுது எழுதிய அமர் சோனா பங்களா 1971 இல் வங்காளதேசத்தின் தேசிய கீதமாகிப் போச்சு