ஈரானும் பெண்களை மதிக்குதாம்

 ஈரானும் பெண்களை மதிக்குதாம்

ஈரானும் பெண்களை மதிக்குதாம் 

ஈரானில் பெண்களுக்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளில் ஒன்றுதான் இது. கிட்டத்தட்ட 40 வருடங்களாக நடைமுறையில் இருந்த விதியை மாற்ற, உடந்தையாக இருந்துள்ளது பி பா. இதற்கு மூல காரணமாக இருந்த பெண் தற்போது உயிருடன் இல்லை.


கடந்த மார்ச் மாதம் சஹர் கோடயாரி ( ப்ளூ கேர்ள் ) என்ற இளம்பெண் ஒருவர், ஆண் வேடமிட்டு கால்பந்து ஸ்டேடியத்திற்குள் நுழைந்தார். அவரை கைது செய்த போலீஸார் சிறையில் அடைத்தனர். இந்நிலையில் அந்த பெண் சிறைக்குள்ளேயே தீ குளிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்

உடல் முழுவதும் தீ காயம் ஏற்பட்டு மோசமான நிலையில் இருந்த அவர் சில தினங்களுக்கு முன்பு பரிதாபமாக இறந்து போனார். இந்த சம்பவம் நாட்டை உலுக்கியது. எனினும் ஈரான் அரசு இதுகுறித்து எந்த கருத்தையும் தெரிவிக்காமலேயே இருந்தது. இந்நிலையில் பிபா அசோசியேசன் அரசை கண்டித்து அறிக்கையை வெளியிட்டது.

அதில், பெண்களை ஸ்டேடியத்துக்குள் அனுமதிக்க வேண்டும், அப்படி இல்லை எனில் கால்பந்து அணிகளிலிருந்து ஈரான் நீக்கப்படும் என மிரட்டல் விடுத்தது. இந்நிலையில் ஈரான் அரசு அந்நாட்டு பெண்களை ஸ்டேடியத்துக்குள் விதிமுறைகளின்றி அனுமதித்துள்ளது

.இந்த உத்தரவு வந்ததை அடுத்து ரசிகைகள் மகிழ்ச்சியுடன் காணப்படுகின்றனர். இந்நிலையில் 2020 ஆம் ஆண்டிற்கான பிபா உலக கோப்பை கால்பந்து போட்டிக்கான டிக்கெட்டுகள் ஆன்லைனில் விற்கப்பட்டு சில மணி நேரத்திலேயே தீர்ந்துள்ளன. ஈரானும் கம்போடியாவும் விளையாட இருக்கும் இந்த போட்டி மூலமாக ஈரான் ரசிகைகள் டெக்ரான் அசாடி ஸ்டேடியத்திற்குள் வீர நடை போடவுள்ளனர்.

நாட்டில் கலாச்சாரம் என்ற போர்வையில் பெண்களை முடக்கி ஆள நினைப்பது இயற்கைக்கு புறம்பான செயலாகும். இத்தனை வருட கட்டுப்பாட்டு பிடியில் துவண்டு போயிருந்த ஈரான் பெண்களுக்கு இந்த ஒரு சிறிய சுதந்திரம் பெரிய அளவில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக அந்நாட்டு இளம்பெண்கள் சிலர் கூறுகின்றனர்.

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...