இன்றைய ராசி பலன்கள் ( 18 நவம்பர் 2023 சனிக்கிழமை )
‘தினம் தினம் திருநாளே!’ தினப்பலன் நவம்பர் 18-ம் நாளுக்கான மேஷம் முதல் மீனம் வரையுள்ள 12 ராசிக்காரர்களுக்கும் பலன்கள் எப்படி இருக்கிறது என்று நமது மின்கைத்தடியின் இப்பகுதியில் பார்க்கலாம்
மேஷ ராசி அன்பர்களே!
இன்று உங்களுக்கு சாதகமான நாள். நீங்கள் நம்பிக்கை உணர்வுடன் வெற்றியைக் கொண்டாடி மகிழ்வீர்கள். உங்கள் இனிமையான வார்த்தைகள் மூலம் பிறரை வெல்வீர்கள். இன்று முக்கிய முடிவுகள் எடுக்க உகந்த நாள். கடினமான பணிகளையும் எளிதில் முடிப்பீர்கள். பணப்புழக்கம் தாராளமாக காணப்படும். இன்று சிறந்த ஆற்றலுடன் காணபடுவீர்கள்.
ரிஷப ராசி அன்பர்களே!
இன்று நீங்கள் நம்பிக்கையான மனநிலை கொண்டிருப்பீர்கள். நீங்கள் உறுதியுடன் இருப்பதன் மூலம் இன்றைய நாளின் சவால்களை வெற்றி கொள்ள முடியும். இன்று இறுக்கமான பணிகளில் மும்மரமாக இருப்பீர்கள். சிறிது பண இழப்பு காணப்படுகின்றது. வெந்நீர் குடிப்பதன் மூலம் சளியை தவிர்க்க இயலும்.
மிதுன ராசி அன்பர்களே!
இன்று உங்களின் பொறுமை சோதனைக்குள்ளாகும் சூழ்நிலை ஏற்படும். நீங்கள் எளிதில் உணர்ச்சி வசப்படுவீர்கள். நீங்கள் அமைதியான அணுகுமுறை மேற்கொள்ள வேண்டும். உங்கள் இலக்குகளை அடைய கடினமாக போராட வேண்டும். பணியிடத்தில் பதட்டமான சூழ்நிலை காணப்படும். பயணத்தின் போது பண இழப்பு காணப்படுகின்றது.
கடக ராசி அன்பர்களே!
இது உங்களுக்கு சாதகமான நாள். நற்பலன்கள் கிடைக்கும் நாள். உங்கள் தொடர் முயற்சியால் இது சாத்தியம். வேலை தொடர்பான பயணம் காணப்படுகின்றது. இது உங்களுக்கு நன்மை பெற்றுத் தரும். வெற்றி கிடைக்கும். இன்று அதிர்ஷ்டகரமான நாள். இன்று அதிக பண வரவு காணலாம். இன்று உங்கள் மன உறுதி காரணமாக ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.
சிம்ம ராசி அன்பர்களே!
இன்று பரிசோதனைகுள்ளாகும் நாள். ஆன்மீக ஈடுபாடு உங்களுக்கு ஆறுதலை அளிக்கும். ஆன்மீக யாத்திரை உங்களுக்கு பயனளிக்கும். பணியிடச் சூழலில் அசௌகரியம் காணப்படும். நிதிநிலைமை ஏமாற்றம் அளிக்கும் வகையில் இருக்கும். சில அசௌகரியங்கள் காரணமாக உங்கள் ஆரோக்கியம் பாதிக்கப்படும்.
கன்னி ராசி அன்பர்களே!
இன்று வருத்தப்படும்படியான சில சூழ்நிலை காணப்படும். நீங்கள் எதிர்பார்த்த பலன்கள் கிடைக்காது. எளிய அணுகுமுறை மேற்கொள்வதன் மூலம் சாதகமான பலன்கள் கிடைக்கும். கூடுதல் பொறுப்புகள் காரணமாக பணிகளை குறித்தநேரத்தில் முடிப்பதை கடினமாக உணர்வீர்கள். உங்கள் குழந்தையின் ஆரோக்கியத்திற்காக பணம் செலவு செய்ய வேண்டிய கட்டாயம் காணப்படும். இன்று ஆரோக்கியம் சிறப்பாக இருக்காது.
துலா ராசி அன்பர்களே!
உங்கள் முயற்சியில் பொறுமையும் உறுதியும் தேவை. உங்கள் முயற்சில் வெற்றி காண உணர்ச்சி வசப்படாமல் இருக்க வேண்டும். உங்கள் பணிகளை திட்டமிட்டு நடத்த வேண்டும். இன்று கூடுதல் பணிகள் காணப்படும். பணப்புழக்கம் இன்று சுமூகமாக இருக்காது. தேவையற்ற செலவுகள் செய்வீர்கள். இன்று ஆற்றலும் ஆரோக்கியமும் குறைந்து காணப்படும்.
விருச்சிக ராசி அன்பர்களே!
சுய வளர்ச்சிக்கான முயற்சிகளுக்கு இன்று சாதகமான நாள். உங்கள் மன உறுதி மூலம் இன்று உங்கள் விருப்பங்களை பூர்த்தி செய்து கொள்வீர்கள். நீங்கள் எடுக்கும் முயற்சிகள் நல்ல பலனளிக்கும். பணியில் உங்கள் செயல்திறன் உங்களுக்கு திருப்திகரமாக இருக்கலாம். இன்று பண வரவு அதிகமாக காணப்படும். உங்களிடம் காணப்படும் சிறந்த ஆற்றல் காரணமாக இன்று உங்கள் ஆரோக்கியம்சிறந்து காணப்படும்.
தனுசு ராசி அன்பர்களே!
இன்றைய நிகழ்வுகளில் நீங்கள் நடைமுறை அணுகுமுறையை மேற்கொள்ள வேண்டும். உணர்ச்சி வசப்படுவதை தவிர்க்க வேண்டும். எதிர்மறை எண்ணங்கள் உங்களை பாதிக்காமல் பார்த்துக் கொள்ளுங்கள். இன்று அமைதியாக இருங்கள். இன்று கூடுதல் செலவுகள் காணப்படும். பணியிடச் சூழல் மகிழ்சிகரமாக இருக்காது. இன்று மிதமான ஆரோக்கியமே காணப்படும்.
மகர ராசி அன்பர்களே!
இன்று சில வலுவற்ற சூழ்நிலை காணப்படும். திட்டமிட்டு முயற்சி செய்தால் நல்ல பலன் கிடைக்கும். பிரார்த்தனை மற்றும் மந்திரங்கள் மூலம் நற்பயன் பெறலாம். பணியிடத்தில் நற்பலன்கள் காண உங்கள் பணியில் ஒழுங்கு முறையான அணுகுமுறை வேண்டும். இன்று தேவையற்ற செலவுகள் காணப்படும். இதனால் சிறிது வருத்தம் உங்களிடம் காணப்படும். இன்று பதட்டம் காரணமாக தலைவலி ஏற்பட வாய்ப்புள்ளது.
கும்பராசி அன்பர்களே!
இன்று அர்த்தமுள்ள நாளாக இருக்காது. உங்கள் முயற்சிகள் வெற்றியை அளிக்காது. நீங்கள் அமைதியாகவும் நட்பான அணுகுமுறையுடனும் இருக்க வேண்டும். ஆன்மீக ஈடுபாடு ஆறுதலை பெற்றுத் தரும். பணியிடச் சூழல் சாதகமான பலன்களை அளிக்காது. பணிச்சுமை அதிகமாக காணப்படும். இன்று நிதிநிலைமை மகிழ்ச்சிகரமாக இருக்காது.
மீனராசி அன்பர்களே!
உங்களை மேம்படுத்திக் கொள்ள இன்றைய நாளை நீங்கள் பயன்படுத்திக் கொள்ளலாம். உங்களின் இனிமையான தொடர்பின் மூலம் சாதகமான பலன்கள் சாத்தியம். இன்று உங்களுக்கு சிறப்பான நாள். பணியிடத்தில் உங்கள் செயல்திறன் சாதகமான பலன்களை அளிக்கும். பணப்புழக்கம் அதிக அளவில் காணப்படும். இன்று சிறந்த ஆரோக்கியத்தை பராமரிப்பீர்கள்.