சுழியம் ஏன் தோன்றியது?
சுழியம் ஏன் தோன்றியது?
கடல்கொண்ட தென்னாட்டில் நடைபெற்ற தமிழ்க் கழகப்புலவர் பேரவை முத்தமிழ் இலக்கியப் பாங்குக்கு அடிப்படையான எண்ணும் எழுத்துமாகிய இலக்கணப் பாகுபாடு சிந்தனையைத் தூண்டி தருக்கம் எனும் ஏரண எதிராடல்கலையை வளர்த்தது. முதற்பொருள் கருப்பொருள் தொடபான உரையாடல்கள் ஐம்பூதங்கள் கலந்த மயக்கம் உலகம் என்றும் அதற்கு அடிப்படை அணுக்கொள்கை என்றும் முடிவு கண்டன: இதனைக்கண்ட அறிவர் இதற்குக் காட்சி அளவை (தர்சனம்) என்றனர்.
இந்த அளவையில் இன்மை என்பதும் ஒர் உள்பொருளாகக் கருதப்பட்டதால் இன்மையைக் குறிக்க சுழியம் கண்டுபிடிக்க வேண்டியதாயிற்று.
சுழியம் எங்குத் தோன்றியது?
சுழியம் தொடர்பான கருத்துகள் கடல் வணிகர்வழி பல நாடுகளுக்குப் பரவின. சுமேரிய பாபிலோனியரிடையிலும் பெரிய வட்டம் பத்தைக் குறித்தது. கி.மு.4000 அளவிலேயே இது அங்குப் பரவியிருப்பதால் கடல் கொண்ட குமரிக்கண்டத்தில் வாழ்ந்த கணியரும் அறிவருமாகிய வானநூல், கணித நூல் வல்லுநரிடை இது தோன்றியதாகும். சிந்து வெளி மக்களிடையிலும் 10:100 எனப்பதின்(தசம) மடங்கு எண்கள் தென்னாட்டுத் தமிழரிடமிருந்தே சென்றுள்ளன என்பதும் கருதத்தக்கது.
சுழியம் எப்படித் தோன்றியது?
எண்களை ஏறு வரிசையிலும் பெருக்கல் வரிசையிலும் கனம் எனும் அடுக்கு வரிசையிலும் 1/320 முதல் 1/320X320 எனும் முந்திரி, கீழ் முந்திரி வரிசையிலும் கணக்கிட்ட பந்தமிழர் நீட்டல் அளவையைப் பத்தின் அடிப்படையான பதின் (தசம்) அளவாகக் கொள்ளவில்லை. நீட்டல் அளவுக்குரிய கோலின் நீளத்தை 11 அடியாகக் கொண்டனர். இது வட்டத்தின் சுற்றளவைக் கணக்கிடுவதற்காகவே கண்டு பிடிக்கப்பட்ட நீட்டல் அளவு. இதன் காற்பகுதியாகிய 2 ¾ அடி கோயில் கட்டும் கம்மியருக்கான தச்சு முழம் எனக்கூறப்படுகிறது.
வட்டத்தின் விட்டத்தை ஏழு சம கூறாக்கி அதனொடு 4 சமக்கூறுகளைச் சேர்த்து இரண்டால் பெருக்கினால் 7+4=11X2=22 சமக்கூறுகளாகிய வட்டத்தின் சுற்றளவு கிடைக்கும் என்பது இன்று படிப்பறிவில்லாத தச்சருக்கும் தெரிந்த தலைமுறைத் தொடர்பு அறாத கலையறிவு. 22/7 என்னும் கணக்கு நுட்பம் குமரிக்கண்டத்துத் தமிழரிடமிருந்தே உலக நாடுகளுக்கும் புரவியுள்ளது.
இரண்டாம் தமிழ்க் கழகம் தொடங்கிய பாண்டியன் வெண்தேர்ச்செழியன் தேருடையவன் என்பதால் சக்கரத்தின்சுற்றளவும் வட்டத்தின் பரப்பளவும் காணும் கணக்கு நுட்பம் கி.மு. 4000 ஆண்டுகளுக்கு முன்பே தமிழருக்குத் தெரிந்திருந்தது என்பது புலனாகிறது.
எப்பொழுது தோன்றியது?
இடைக்காலச் சோழர் காலத்தில் 11 அடி அளவுகோலே வழக்கத்திலிருந்தது. சிந்து வெளியிலும் அரப்பா மொகஞ்சதாரோ நகரங்களில் உள்ள தெருக்களாக 22,33,44 அடி என்னும் அடி நீட்டல் அளவுடையனவாக இருந்தன. மதுரை போன்ற மூவேந்தர் தலைநகரத் தெருக்களின் அளவும் 11 அடியினஇ மடங்குகளாக 33,44 அடிகளாகவே உள்ளன. எனவே, சிந்துவெளி நாகரிகக் காலம் கி:மு. 3500 என்றதால் கி.மு. 4000 அளவிலேயே 11 அடி நீட்டல் அளவுகோல் தோன்றியிருக்க வேண்டும்.
எத்துணைப் பொüய நேர்க்கோடாக இருந்தாலும் அது மிகப்பெரிய வட்டத்தின் பரிதியில் சிறு நேர்க்கோடாக இருக்கும் என்பது கணித நூல் கண்டறிந்த உண்மை,5 ½ அடி உயரமுள்ள வண்டிச் சக்கரத்தின் சுற்றளவு 16 ½ அடி. ஒரு வண்டிச் சக்கரம் 320 சுற்றுச் சுற்றினால் அது சென்ற தொலைவு ஒரு கல் (மைல்) ஆகும் என்பதும், இது உலகம் முழுவதும் பரவியுள்ளதால் இதன் தொன்மையையும் கணித்தறியலாம்.
சுழியத்தை கண்டுபிடித்த தொல்கணியாதன்?
இன்மைக்கொள்கை தமிழருடையது. அணுக்கொள்கையில் ஏரணப் பிரிவுகளில் இதுவும் ஒன்று. இதனை
அண்மையின் இன்மையின் எண்மையின்
வன்மையின் அன்ன பிறவும் குறிப்பொடு கொள்ளும்
என்ன கிளவியும்….. தொல். செய்யுள்214. எனத்தொல்காப்பியர் குறிப்பிடுகின்றார். வித்திலிருந்து மரம் உண்டாகிறது. வித்தினைப் பார்க்கும்பொது மரம் தெரியவில்லை. வித்து முளைத்துச் செடியாகும்போது மரம் தெரியவில்லை. வித்து முளைத்துச் செடியான பிறகு வித்தினைப் பார்க்க முடிவதில்லை.
வித்தில் மரம் தெரியாதது இன்னை. அதனால் மரம் இல்லை என்று பொரு கொள்ள முடியாது. இன்மையாகிய பொருள் உள்ள பொருளே. ஆதலால் சுழியத்தின் மதிப்பு கண்ணுக்குப் புலப்படாத உண்மையாயிற்று. இதனைப் பக்குடுக்கை நன்கணியர், கணியாதன் ஆகிய கணியவியல் அறிவர்கள் உலகிற்கு உணர்த்தினர். நாளடைவில் ஆசிவகம் எனப்பட்ட இக்கோட்பாடு சாங்கியம், வைசேடிகம், உலகாயதம் எனும் பெயர்களில் நாலாத் திசையும்