ஆந்திர ரயில் விபத்து: ரயில்வே தொழில்நுட்ப குழுவினர் தீவிர ஆய்வு! | தனுஜா ஜெயராமன்
ஆந்திராவில் நேற்றிரவு நிகழ்ந்த ரயில் விபத்திற்கு என்ன காரணம் என்பது குறித்து ரயில்வே தொழில்நுட்ப குழுவினர் தீவிர ஆய்வு நடத்தி வருகின்றனர்.
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் இருந்து ராயகடா நோக்கிச் சென்ற பயணிகள் ரயில் கண்டகப்பள்ளி என்ற இடத்தில் சிக்னல் பிரச்சினை காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. அப்போது அதே ரயில் பாதையில் பலாசா எக்ஸ்பிரஸ் ரயில் வந்த நிலையில், இரு ரயில்களும் மோதிக்கொண்டன .நின்று கொண்டிருந்த ரயிலின் பின்புறம் பலாசா எக்ஸ்பிரஸ் மோதிய நிலையில், இதில் மொத்தம் 5 பெட்டிகள் தடம் புரண்டன.
அருகே இரண்டு ரயில்கள் ஒன்றுடன் ஒன்று மோதி ஏற்பட்ட விபத்தில் 10
பேர் பலியானதாகவும், 45 பேர் படுகாயம் அடைந்தனர். ஆனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்க கூடும் என்று கருதப்படுகிறது.
பொதுவாக தொழில்நுட்ப கோளாறு அல்லது இயந்திர கோளாறு ஆகியவற்றின் காரணமாக வழித்தடத்தின் இடையே ரயில் நிறுத்தப்பட்டால் அது பற்றிய தகவல் உடனடியாக ரயில்வே துறையில் அமலில் இருக்கும். தானியங்கி தகவல் தொழில்நுட்ப முறை மூலம் அருகில் உள்ள ரயில் நிலைய கட்டுப்பாட்டு அதிகாரிக்கு கிடைத்துவிடும். அதன் அடிப்படையில் அதே வழித்தடத்தில் பின்னால் வந்து கொண்டிருக்கும் ரயிலின் ஓட்டுனருக்கு தகவல் அளித்து அவரை எச்சரிக்கை செய்ய வாய்ப்புகள் உள்ளன.
ஆனால் நேற்று நடைபெற்ற விபத்தில் ஒரு ரயில் இடையில் நிறுத்தப்பட்ட நிலையில் அது பற்றிய தகவல் ரயில்வே அதிகாரிகளுக்கு கிடைக்கவில்லையா அல்லது கிடைக்கும் பின்னால் வந்து கொண்டிருந்த பலாசா பேசஞ்சர் ரயிலில் ஓட்டுநருக்கு அவர்கள் தகவலை தெரிவிக்கவில்லையா தகவல் தெரிந்தும் பின்னால் வந்து கொண்டிருந்த ரயிலில் ஓட்டுநர் அலட்சியமாக இருந்து விட்டாரா அல்லது இதில் ஏதாவது சதி உள்ளதா என்று பல்வேறு கேள்விகள் ஏற்பட்டுள்ளன.
இதையடுத்து பேரிடர் மீட்புப் படையினர் தொடங்கி பலரும் மீட்புப் பணிகளில் களமிறங்கினர். இரவு நேரம் என்பதால் மீட்புப் பணிகளில் சற்று சுணக்கம் ஏற்பட்டது. இந்த ரயில் விபத்தில் இதுவரை 19 பேர் உயிரிழந்துள்ளனர்.. மேலும் 50க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். இந்த விபத்தில் காயமடைந்தோர் சிகிச்சைக்காக விஜயநகரம் மருத்துவமனையில் அட்மிட் செய்யப்பட்டுள்ளனர்.
இந்தியாவில் இதுபோன்ற விபத்துகள் நடைபெறுவது தொடர் கதையாகியுள்ள நிலையில், இதைத் தடுக்க ரயில்வே அமைச்சகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதைப் பலரும் வலியுறுத்தி வருகின்றனர்.
மேலும் விபத்து குறித்து விரிவான விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் அப்போதுதான் கூடுதல் தகவல்கள் தெரிய வரும் என்றும் ரயில்வே தரப்பில் கூறப்பட்டுள்ளது.