ஆவேசமாக கேள்வி கேட்ட நிக்சன்… சட்டென நோஸ்கட் செய்த கமல்! | தனுஜா ஜெயராமன்
பிக்பாஸின் ஒவ்வொரு சீசனிலும் போட்டியாளர்களுக்கு இடையே காதல் ஏற்படுவதும், அவர்கள் சர்ச்சையில் சிக்குவதும் வாடிக்கையாகி வருகிறது.
ஏற்கனவே மணி ரவீனா லவ்கேம் ஆடிவரும் நேரத்தில் , புதியதாக ஐஷூவும், நிக்சனும் நெருக்கமாக இருந்து வருகின்றனர். கடந்த நாட்களில் கண்ணாடிக்கு அந்த பக்கமும் இந்தப் பக்கமும் இருக்கும் நிக்சன் மற்றும் ஐஷூ முத்தம் கொடுப்பதைப் போல் பேசும் காட்சிகள் பிக்பாஸில் வெளியாகி ரசிகர்களைக் முகம்சுளிக்க வைத்துள்ளது.
தற்போது நடைபெற்று வரும் பிக்பாஸில் ஐஷூவும், நிக்சனும் அடிக்கடி கொஞ்சி கொஞ்சி பேசி நெருக்கமாக இருந்து வருகின்றனர். இருவரின் செயல்களால் அவர்கள் காதலிப்பதாக கூறப்படும் நிலையில், இருவரும் ரொமான்ஸில் ஈடுபடும் காட்சி வெளியாகியுள்ளது. கண்ணாடிக்கு அந்தப் பக்கமும், இந்தப் பக்கமும் இருக்கும் நிக்சன் மற்றும் ஐஷூ மொத்தம் கொடுப்பதை போல் பேசும் காட்சி வெளியாகி ரசிகர்களைக் கடும் கோபத்தில் ஆழ்த்தி வருகிறது.
இவர்கள் இருவரும் மைக்கை கழற்றி விட்டு கொஞ்சி கொஞ்சி ரகசியம் பேச பிக்பாஸ் பூஜை வேளை கரடி போல மைக் போடுங்க என கத்தி வருகிறார்.
அதை விட காமெடியா நிக்ஸன் ஆவேசமாக வீட்டில் ரூல்ஸ்ப்ரேக் குறித்து கமலிடம் கேள்வி எழுப்ப..
கோபமான கமல் முதல்ல மைக் மாட்டி பேசுப்பா.. ரகசியம் பேசனும்னா வா இங்க வந்து பேசலாம்னு நெக்ஸனை பலமாக நோஸ்கட் செய்தார். நிக்ஸன் தொங்கிய முகத்துடன் சாரி சார் என கப்சிப்பானார். கூல் சுரேஷை அவ்வப்போது அவர் பாணியிலேயே வறுத்து வடை போடுகிறார் கமல்.
எப்போதுமே போட்டியாளர்களை அவர்கள் பாணியில் வைத்து செய்கிறார் கமல்.