இன்று நவராத்திரி விழாத் தொடக்க நாள்/.நவராத்திரி விழாப்பாடல்
இன்று நவராத்திரி விழாத் தொடக்க நாள்.
நவராத்திரி நாயகியாய் குமரி, திரிமூர்த்தி, கல்யாணி, ரோகிணி, காளிகா, சண்டிகா, சாம்பவி, துர்க்கா, சுபத்திரா, என்னும் ஒன்பது வடிவங்களின் பெயர்களும்
; சாந்தி, சூரி, ஆசூரி, ஜாதவேதா, ஜ்வாலா, வன துர்க்கை, மூல துர்க்கை, சூலினி, ஜெய துர்க்கை, என்னும் ஒன்பது நவதுர்க்கையரின் பெயர்களும்;
ஆதி லட்சுமி, சந்தான லட்சுமி, வீர லட்சுமி, விஜய லட்சுமி, கஜ லட்சுமி, தன லட்சுமி, தானிய லட்சுமி, மகா லட்சுமி, என்னும் அஷ்ட லட்சுமியரின் பெயர்களும்;
வாசீஸ்வரி, சித்ரேஸ்வரி, துளஜா, கீர்த்தீஸ்வரி, கட சரஸ்வதி, நீல சரஸ்வதி, கினி சரஸ்வதி, அந்தரிட்ச சரஸ்வதி, என்னும் அஸ்ட சரஸ்வதியின் பெயர்களும் அமைத்து நவராத்திரி விழாப்பாடலாக இப்பாடல் அமைக்கப்பட்டுள்ளது.
பாடல், இசை, குரல் & ஒளி வடிவம் முனைவர் பொன்மணி சடகோபன்
ஆதி சக்தியின் அம்சமாய்
முதல் மூன்று நாட்கள் துர்க்கையாகவும்;
அடுத்த மூன்று நாட்களில் இலக்குமியாகவும்;
அடுத்த மூன்று நாட்களில் சரஸ்வதியாகவும்;
அம்பிகையைத் துதித்து மறுநாள் விஜயதசமியாக மறம் அகலும் அறம் வெல்லும் என்பதை உலகிற்கு உணர்த்தும் விழா.
தாயாய் இருந்து தடை விலக்கித் தயை புரியும் சக்தியின் அருள்பெற்று
வீரமும் செல்வமும் ஞானமும் அடைவோம்.
வாழ்க வளமுடன்
குகனருள் கூடட்டும் 🙏
முனைவர் பொன்மணி சடகோபன் |