இஸ்ரேல் – ஹமாஸ் பிரச்சனை! இந்தியாவுக்கு வரவிருக்கும் டெக் நிறுவனங்கள்! |தனுஜா ஜெயராமன்
இஸ்ரேல் ஹமாஸ் பிரச்சனை குறித்து டெக் சந்தை வல்லுனர்கள் கூறுகையில் இந்த தாக்குதல்கள் தொடர்ந்து அதிகரித்தால் இஸ்ரேலில் இருக்கும் வர்த்தக அமைப்புகள் தனது வர்த்தகத்தை இந்தியாவுக்கும், பிற நாடுகளுக்கும் மாற்ற வேண்டிய கட்டாயம் ஏற்படும் என எச்சரிக்கின்றனர்.
இஸ்ரேல் ஹமாஸ் அமைப்பு மத்தியில் வெடித்த இந்த மோசமான தாக்குதல்கள் தொடர்ந்து விரிவாக்கம் அடைந்து வரும் காரணத்தால் இஸ்ரேல் நாட்டில் இருக்கும் வர்த்தக அமைப்புகள் முக்கியமான முடிவை எடுக்க வேண்டிய கட்டாயத்தில் தள்ளப்பட்டு உள்ளனர்.
இஸ்ரேல் நாட்டில் இன்டெல், மைக்ரோசாப்ட், கூகுள் போன்ற சுமார் 500க்கும் அதிகமான MNC நிறுவனங்கள் அலுவலகங்கள் மற்றும் R&D சென்டர்களை வைத்துள்ளது. இஸ்ரேலில் இருக்கும் இந்த 500 வெளிநாட்டு நிறுவனத்தில் சுமார் 1 லட்சம் பேர் பணியாற்றுகிறார்கள்.
இஸ்ரேல் நாட்டில் தற்போது இயங்கி வரும் டிசிஎஸ், விப்ரோ போன்ற நிறுவனங்களும் தங்களுடைய வர்த்தகத்தை இந்தியாவுக்கோ அல்லது பிற நாடுகளுக்கோ மாற்ற உள்ளது. இஸ்ரேல் – ஹமாஸ் பிரச்சனை மூலம் ஒட்டுமொத்த மத்திய கிழக்கு நாடுகளின் வர்த்தகம் மற்றும் பொருளாதாரம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.