திருப்பதி பிரம்மோற்சவம் நிறைவு! | தனுஜா ஜெயராமன்

 திருப்பதி பிரம்மோற்சவம் நிறைவு! | தனுஜா ஜெயராமன்

திருப்பதி ஏழுமலையான் கோவில் வருடாந்திர பிரம்மோற்சவத்தின் நிறைவு நாளான நேற்றுடன் மிக பிரம்மாண்டமான விழா நிகழ்வுகள் அனைத்தும் நிறைவடைந்தது.

அதனால் அதிகாலை 3 மணிக்கு துவங்கி உற்சவர் மலையப்ப சுவாமி ஸ்ரீதேவி பூதேவி சமேதராக கோயிலில் இருந்து புறப்பட்டு வாகன மண்டபத்தை அடைந்தார். அவருடன் சக்கரத்தாழ்வாரும் எழுந்தருளினார்.

திருப்பதி ஏழுமலையான் கோயில் வருடாந்திர பிரமோற்சவ நிறைவு நாளை முன்னிட்டு உற்சவர் மலையப்ப சுவாமி ஸ்ரீதேவி பூதேவி சமேதராக கோவிலில் இருந்து புறப்பட்டு வாகன மண்டபத்தை அடைந்தார்.

ஸ்ரீதேவி பூதேவி சமேத மலையப்ப சுவாமி, சக்கரத்தாழ்வார் ஆகிய உற்சவர்கள் மாட வீதிகள் வழியாக வராக சாமி கோவில் முகமண்டபம் அடைந்தனர். அங்கு உற்சவர்களுக்கு அபிஷேகம், சமர்ப்பணம் ஆகியவை நடத்தப்பட்டன.

பின் ஆறு மணி அளவில் சக்கரத்தாழ்வாரை கோவில் திருக்குளத்திற்குள் கொண்டு சென்ற அர்ச்சகர்கள் மூன்று முறை தண்ணீரில் மூழ்க செய்து சக்கர ஸ்நானம் நடத்தினர்.

அப்போது திருக்குளத்தின் நான்கு புறங்களிலும் கூடி இருந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கோவில் திருக்குளத்தில் புனித நீராடினார்கள்.

இதனை தொடர்ந்து உற்சவர்கள் மாட வீதிகள் வழியாக கோவிலை அடைந்தனர்.

நேற்று இரவு 9 மணிக்கு மேல்  கொடி  இறக்கத்துடன் ஏழுமலையான் கோவில் பிரம்மோற்சவ விழா நிறைவடைகிறது.

தனுஜா ஜெயராமன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...