‘வணங்கான்‘ படத்தின் ஃபர்ஸ்ட் லுக்! | தனுஜா ஜெயராமன்

 ‘வணங்கான்‘ படத்தின் ஃபர்ஸ்ட் லுக்! | தனுஜா ஜெயராமன்

பாலா இயக்கத்தில் அருண்விஜய் நடிக்கும் ‘வணங்கான்‘ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது.

வி ஹவுஸ் புரொடக்சன்ஸ் மற்றும் பி ஸ்டூடியோஸ் தயாரிக்கும் இந்த படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். ஆர்.பி.குருதேவ் ஒளிப்பதிவு செய்கிறார். இந்த நிலையில் இந்த படத்தின் புதிய அப்டேட் ஆக வணங்கான் படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் இன்று வெளியாகியுள்ளது.

நான் கடவுள், அவன் இவன் உள்ளிட்ட பல படங்களை இயக்கிய பாலா, தற்போது ‘வணங்கான்’ என்ற படத்தை இயக்கி வருகிறார். அருண் விஜய் கதாநாயகனாக நடிக்கும் இந்தப் படத்தில், ரோஷினி பிரகாஷ் கதாநாயகியாக நடிக்கிறார். மேலும், சமுத்திரக்கனி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

கன்னியாகுமரி, திருவண்ணாமலை சுற்று வட்டாரப் பகுதிகளல் நடைபெற்று வரும் படப்பிடிப்பு தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இந்த நிலையில் படத்தின் முதல் பார்வை போஸ்டர் வரும் 25-ஆம் தேதி காலை 10 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. அதன்படி வணங்கான்‘ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது.

தனுஜா ஜெயராமன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...