இன்றையராசிபலன்  (ஞாயிற்றுக்கிழமை 24 செப்டம்பர் 2023)

சோபகிருது வருடம் புரட்டாசி மாதம் 7 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை 24.9.2023, சந்திர பகவான் இன்று தனுசு ராசியில் பயணம் செய்கிறார். இன்று காலை 06.10 வரை நவமி . பின்னர் தசமி. இன்று காலை 10.37 வரை பூராடம். பின்னர் உத்திராடம். மிருகசீரிஷம் திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சந்திராஷ்டமம். சற்று கவனமுடனும் எச்சரிக்கையுடனும் நடந்துகொள்வது அவசியம்.

மேஷம் முதல் மீனம் வரையுள்ள 12 ராசிக்காரர்களுக்கும் பலன்கள் எப்படி இருக்கிறது என்று நமது மின்கைத்தடியின் இப்பகுதியில் பார்கலாம்.

மேஷம் :  புதிய பாதையில் பயணிக்கத் தொடங்குவீர்கள். பிள்ளைகள் பொறுப்புணர்ந்து செயல்படுவார்கள். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். கைமாற்றாக வாங்கியிருந்த பணத்தை திருப்பித் தருவீர்கள். வியாபாரத்தில் அதிரடியான செயல்களால் போட்டிகளை சமாளிப்பீர்கள். உத்தியோகத்தில் சூழ்ச்சிகளை முறியடிப்பீர்கள். சாதிக்கும் நாள்.

ரிஷபம் : சந்திராஷ்டமம் நீடிப்பதால் வேலைச்சுமை இருந்து கொண்டே இருப்பதாக ஆதங்கப்படுவீர்கள். உதவி கேட்டு உறவினர்களும் தர்மசங்கடத்திற்கு ஆளாக்குவார்கள். சிறுசிறு ஏமாற்றங்கள் வந்து போகும். வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாவதில் தாமதம் ஏற்படும். உத்தியோகத்தில் அலட்சியம் வேண்டாம். தானுண்டு தன் வேலையுண்டு என்றிருக்க வேண்டிய நாள்.

மிதுனம் : பிள்ளைகளால் மகிழ்ச்சியும் உறவினர்களால் ஆதாயமும் உண்டு. விலை உயர்ந்தப் பொருட்கள் வாங்குவீர்கள். தாயார் ஆதரித்துப் பேசுவார். பயணங்கள் சிறப்பாக அமையும். வேற்றுமதத்தவர் உதவுவார். வியாபாரம் தழைக்கும். உத்தியோகத்தில் உங்களின் திறமைகள் வெளிப்படும். நன்மை கிட்டும் நாள்.

கடகம் : குடும்பத்தினருடன் மனம்விட்டு பேசி மகிழ்வீர்கள். விருந்தினர்களின் வருகையால் வீடு களைக்கட்டும். பிரபலங்கள் அறிமுகமாவார்கள். நீண்ட நாட்களாக தள்ளிப் போன காரியங்கள் முடியும். வியாபாரத்தில் ரெட்டிப்பு லாபம் உண்டு. உத்தியோகத்தில் அதிகாரிகள் அதிசயிக்கும் படி நடந்துக் கொள்வீர்கள். தொட்டது துலங்கும் நாள்.

சிம்மம் : வருங்காலத் திட்டத்தில் ஒன்று நிறைவேறும். உறவினர்களில் உண்மையானவர்களை கண்டறிவீர்கள். அனாவசியச் செலவுகளை கட்டுப்படுத்துவீர்கள். அக்கம்-பக்கம் வீட்டாரின் ஆதரவு பெருகும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். உத்தியோகத்தில் திருப்தி உண்டாகும். கனவு நனவாகும் நாள்

கன்னி : திட்டவட்டமாக செயல்பட்டு காரியங்களை சிறப்பாக முடிப்பீர்கள். தாய்வழி உறவினர்களுடன் மனஸ்தாபம் வந்து நீங்கும். பணப்பற்றாக்குறையை சமாளிப்பீர்கள். மனதிற்கு இதமான செய்தி வரும். வியாபாரத்தில் அதிரடி சலுகைகள் மூலம் லாபமடைவீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்களால் நிம்மதி கிடைக்கும். உழைப்பால் உயரும் நாள்.

துலாம் : உங்கள் பேச்சில் அனுபவ அறிவு வெளிப்படும். உடன்பிறந்தவர்கள் உங்கள் வேலைகளைப் பகிர்ந்துக் கொள்வார்கள். அரசால் ஆதாயம் உண்டு. வெளிவட்டாரத்தில் செல்வாக்கு உயரும். வியாபாரத்தில் சில மாற்றம் செய்வீர்கள். உத்தியோகத்தில் உயரதிகாரி சில சூட்சுமங்களை சொல்லித் தருவார். துணிச்சல் அதிகரிக்கும் நாள்.

விருச்சிகம் : கணவன்-மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும். அழகும் இளமையும் கூடும். பழைய பிரச்னைகளுக்கு மாறுபட்ட அணுகுமுறையால் தீர்வு காண்பீர்கள். விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். வியாபாரத்தில் சில தந்திரங்களை கற்றுக்கொள்வீர்கள். உத்தியோகத்தில் மதிக்கப்படுவீர்கள். தடைப்பட்ட வேலைகள் முடியும் நாள்.

தனுசு  :   ராசிக்குள் சந்திரன் இருப்பதால் எதையோ இழந்ததைப் போல் ஒருவித கவலைகள் வந்து போகும். நீங்கள் சிலருக்கு நல்லது சொல்லப்போய் பொல்லாப்பாக முடியும். வியாபாரத்தில் வேலையாட்களை பகைத்து கொள்ளாதீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்களிடம் உயரதிகாரி பற்றி விமர்சிக்க வேண்டாம். கவனம் தேவைப்படும் நாள்.

மகரம் : அனாவசிய செலவுகளை குறைக்கப்பாருங்கள். திடீர் பயணங்கள் இருக்கும். குடும்பத்தில் சின்ன சின்ன வாக்குவாதங்கள் வந்து நீங்கும். சகோதரர்களால் பகை வரக்கூடும். வியாபாரத்தில் பாக்கிகளை கறாராகப் பேசி வசூலிப்பீர்கள். உத்தியோகத்தில் அதிருப்தி உண்டாகும். கடினமாக உழைக்க வேண்டிய நாள்.

கும்பம் : குடும்பத்தாரின் ஒத்துழைப்பு இருக்கும். சொத்து வாங்குவது குறித்து யோசிப்பீர்கள். அரசால் அனுகூலம் உண்டு. புது வேலை அமையும். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். புதுத் தொழில் தொடங்கும் முயற்சி வெற்றி அடையும். உத்தியோகத்தில் உங்கள் கை ஓங்கும். சிறப்பான நாள்.

மீனம் : தவறு செய்பவர்களை தட்டிக் கேட்பீர்கள். உடன்பிறந்தவர்கள் உங்கள் வளர்ச்சிக்கு சாதகமாக இருப்பார்கள். உங்களால் வளர்ச்சியடைந்த சிலரை இப்பொழுது சந்திக்க நேரிடும். விலகி நின்றவர்கள் விரும்பி வருவார்கள். வியாபாரத்தில் புது முடிவுகள் எடுப்பீர்கள். உத்தியோகத்தில் பெரிய பொறுப்புகள் தேடிவரும். சிந்தனைத் திறன் பெருகும் நாள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!