இன்றையராசிபலன்  (சனிக்கிழமை 23 செப்டம்பர் 2023)

 இன்றையராசிபலன்  (சனிக்கிழமை 23 செப்டம்பர் 2023)

மேஷம் முதல் மீனம் வரையுள்ள 12 ராசிக்காரர்களுக்கும் பலன்கள் எப்படி இருக்கிறது என்று நமது மின்கைத்தடியின் இந்த பகுதியில் பார்க்கலாம்.

மேஷம் :  வாக்குவாதம் எழ வாய்ப்புள்ளதால் உரையாடத் தொடங்குமுன் முறையாக யோசிக்க வேண்டும்.வெளிப்படையான, அனுசரணையான அணுகுமுறை தேவை. உங்கள் பணிகளை துல்லியமாகவும் தரத்துடனும் மேற்கொள்ள வேண்டும். இன்று நிதிநிலைமை சிறப்பாக இருக்காது. தேவையற்ற செலவினங்கள் காணப்படும். உங்கள் கண்களில் கவனம் செலுத்துங்கள். .

ரிஷபம் : இன்று நீங்கள் தேவைகளை அறிந்து நடந்து கொள்வீர்கள். உங்கள் முயற்சிகளில் வெற்றி காண்பீர்கள். உங்களின் சிறிய திட்டம் பெரிய வெற்றிக்கு வழி காட்டும். உங்கள் பணிகளை விரைந்து ஆற்றுவீர்கள். உங்களிடம் இன்று ஆற்றலும் உறுதியும் நிறைந்து காணப்படும். இன்று சுதந்திரமான நிதிநிலை காணப்படும். இன்று ஆரோக்கியப் பிரச்சினைகள் ஏதும் இருக்காது.

மிதுனம் : இன்று உங்கள் விருப்பங்களை மேம்படுத்திக் கொள்வீர்கள். வாய்ப்புகள் கிடைக்கும். அதை உங்களுக்கு சாதகமாக ஆக்கிக் கொள்வீர்கள். பணியில் உங்கள் செயல்திறனை வெளிப்படுத்துவீர்கள். உங்கள் திறமைகள் உங்கள் மேலதிகாரிகளால் பாராட்டப்படும். இன்று சுதந்திரமான நிதிநிலை காணப்படும். இன்று வளமான நாளாக அமையும். இன்று ஆரோக்கியப் பிரச்சினைகள் ஏதும் இருக்காது.

கடகம் : இன்று சில பதட்ட நிலை காணப்படும். மூளைக்கு சிறிது ஓய்வு கொடுப்பதன் மூலம் சிறந்த முடிவை எடுக்க இயலும். பிரார்த்தனை மேற்கொள்வதன் மூலம் சிறந்த பலன் கிடைக்கும். பணப்புழக்கம் போதிய அளவு காணப்படாது. இன்று பணிகள் அதிகமாக காணப்படும். பணிகளை மேற்கொள்ளும்போது சில தவறுகள் நேரலாம். பதட்டம் காரணமாக முதுகுவலி ஏற்படலாம்.

சிம்மம் : இன்று வளர்ச்சி குறைந்து காணப்படும். தேவையற்ற கவலைகள் வருத்தம் அளிக்கும். அத்தகைய உணர்வுகளை தவிர்த்தல் நல்லது. பணியில் செய்யும் தவறுகள் காரணமாக உங்கள் மேலதிகாரிகளின் அதிருப்திக்கு ஆளாவீர்கள். உங்கள் பணியில் கவனம் தேவை. தேவையற்ற குடும்ப பொறுப்புகள் காரணமாக செலவு அதிகரிக்கும். இதனை சமாளிப்பதை கடினமாக உணர்வீர்கள்.

கன்னி : இன்று உங்களுக்கு சாதகமான நாள். உங்கள் இலக்குகளை எளிதில் அடைய முடியும். இன்று நீங்கள் சிறந்த திட்டங்கள் மூலம் பயன் பெறுவீர்கள். இன்று உங்கள் பணிக்கு பாராட்டு பெறுவீர்கள். கூடுதல் ஊக்கத்தொகை மற்றும் சலுகைகள் பெறுவதற்கான வாய்ப்பு உள்ளது. இன்று வலுவான நிதி ஆதாரத்தை அமைத்துக் கொள்வீர்கள். உங்கள் சேமிப்பு ஆற்றலும் அதிகரிக்கும். உங்களிடம் காணப்படும் சிறந்த ஆற்றல் காரணமாக இன்று உங்கள் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

துலாம் : ஆன்மீக விழிப்புணர்வை வளர்த்துக் கொள்ள வேண்டும்.இதன் மூலம் மகிழ்ச்சியும் ஆறுதலும் கிடைக்கும். அனுபவ அறிவு நல்ல ஆறுதலை அளிக்கும். இன்று பணியிடச் சூழல் மகிழ்சிகரமாக இருக்காது. அதிகப் பணிகள் இருந்தாலும் அதைப் பற்றி கவலைபடாமல் இருங்கள். இன்று தேவையற்ற செலவுகள் ஏறபடும். பதட்டம் காரணமாக கால் வலி ஏற்பட வாய்ப்புள்ளது. இன்று தேவையற்ற செலவுகள் ஏறபடும்.

விருச்சிகம் : இன்று சற்று மந்தமான நாளாக இருக்கும். பதட்டமான சூழ்நிலை ஏற்பட வாய்ப்புள்ளதால் அதற்கு இடம் கொடுக்காதீர்கள். அமைதியாக இருப்பது நல்லது. அவசரம் காரணமாக தேவையற்ற பணச் செலவுகள் ஏற்படும். அதற்காக பிறகு வருந்த நேரலாம். அஜாக்கிரதை காரணமாக பண இழப்பு ஏற்படலாம். உங்கள் பணிகளை திறம்பட ஆற்றும் ஸ்திரத்தன்மை காணப்படாது.

தனுசு  :   இன்று சில சவால்கள் எழ வாய்ப்புள்ளது. இன்று பாதுகாப்பின்மை காணப்படும். இது உங்கள் மகிழ்ச்சியை கெடுக்கும். ஆன்மீக ஈடுபாடு வெற்றியை அளிக்கும். பணிகளை குறித்தநேரத்தில் உங்களால் முடிக்க இயலாது. அதிகரிக்கும் குடும்ப பொறுப்புகள் காரணமாக அதிக செலவுகள் ஏற்படும். இன்று முதுகுவலி ஏற்பட வாய்ப்புள்ளது.

மகரம் : இன்று ஆக்கப்பூர்வமான நாள்.இன்று புத்துணர்ச்சியுடன் காணப்படுவீர்கள். புதிய முயற்சிகள் லாபகரமானதாக இருக்கும். பணியிடத்தில் அனைத்தும் சிறப்பாக இருக்கும். உங்கள் பணிகளை குறித்தநேரத்தில் முடிக்க இயலும். உங்கள் பணத்தேவைகளை பூர்த்தி செய்து கொள்ள சிறந்த நாள். இன்று உங்களால் அதிகமாக சேமிக்க இயலும். உங்களிடம் காணப்படும் கூடுதல் சக்தி காரணமாக இன்று சிறந்த ஆரோக்கியம் காணப்படும்.

கும்பம் : இன்றைய நாள் உங்களுக்கு சாதகமாக இருக்கும்.சுய முன்னேற்றத்திற்க்கான முயற்சியில் வெற்றி பெறுவீர்கள். முயற்சிகள் எளிதாக இருக்கும். நீங்கள் உங்களை மேம்படுத் திக்கொள்வீர்கள். உங்கள் பணியைப் பொறுத்தவரை திருப்தியான நிலை காணப்படும். இன்று அதிக பணவரவு காணப்படும். இன்று உங்களிடம் காணப்படும் உறுதி மற்றும் தைரியம் காரணமாக உங்கள் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

மீனம் : உங்கள் நலத்திற்காக இன்றைய நாளை நீங்கள் பயன்படுத்திக் கொள்ளலாம். அதன் மூலம் இன்றைய நாளை சுமூகமாக்கலாம். வருவதை அப்படியே எதிர்கொள்ளுங்கள். பணியிடத்தில் ஆக்கபூர்வமான பலன்கள் கிடைக்காது. திருப்தி நிலை குறைந்து காணப்படும். இன்று பண இழப்பிற்கான வாய்ப்பு உள்ளது. உங்கள் பணத்தை கவனமாக பாதுகாக்க வேண்டும்.

சதீஸ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...