இன்றைய ராசி பலன் (செவ்வாய்க்கிழமை 19 செப்டம்பர் 2023)

 இன்றைய ராசி பலன் (செவ்வாய்க்கிழமை 19 செப்டம்பர் 2023)

சோபகிருது வருடம் புரட்டாசி மாதம் 2 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை 19.9.2023, சந்திர பகவான் இன்று துலாம் ராசியில் பயணம் செய்கிறார். இன்று காலை 11.50 வரை சதுர்த்தி . பின்னர் பஞ்சமி. இன்று பிற்பகல் 12.51 வரை சுவாதி. பின்னர் விசாகம். ரேவதி அஸ்வினி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சந்திராஷ்டமம். சற்று கவனமுடனும் எச்சரிக்கையுடனும் நடந்துகொள்வது அவசியம்.

மேஷம் :  மனைவியின் பங்காக சிறிய சொத்தை பெறுவீர்கள். எதிர்காலம் பற்றிய கவலையால் தூக்கத்தை தொலைப்பீர்கள். ஒரு சிலர் கடன் வாங்கியாவது நினைத்த காரியத்தை நிறைவேற்றுவீர்கள். அவர்களின் தேவையைப் பூர்த்தி செய்வீர்கள். தொழில் எதிரிகள் செய்யும் பிரச்சினையால் மன உளைச்சலுக்கு ஆளாவீர்கள். சந்திராஷ்டம நாள். கவனம் தேவை.

ரிஷபம் : காணாமல் போன பொருளை திரும்ப பெறுவீர்கள். வயிற்றுக்கோளாறுக்காக மருத்துவச் சிகிச்சை செய்வீர்கள். காதலியுடன் வெளியூர் செல்வீர்கள். வெளிநாட்டிலிருந்து நல்ல செய்தியை எதிர்பார்ப்பீர்கள். கால நேரம் பார்க்காமல் வேலை செய்து பாராட்டைப் பெறுவீர்கள். ஆன்லைன் வர்த்தகங்களில் பாதிப்பை அடைவீர்கள். உறவினர்கள் மத்தியில் மரியாதை குறைவதை உணர்வீர்கள்.

மிதுனம் :  வருமானத்திற்கு இடையூறாக இருந்த தடைகளை தாண்டுவீர்கள். தைரியமாக பிரச்சனைகளை சந்திப்பீர்கள். சகோதர வகையில் ஆதாயம் பெறுவீர்கள். காதலியின் அலட்சியத்தால் மன சஞ்சலம் அடைவீர்கள். மருத்துவம், கணிதம், பொறியியல், சட்டம் படிப்பவர்கள் வெற்றி காண்பீர்கள். பூர்வீக சொத்தில் இருந்த பிரச்சனையை பேசி தீர்ப்பீர்கள்.

கடகம் : தென்னைமரதோப்பு குத்தகைகளில் அதிக வருமானம் பார்ப்பீர்கள். பணப்பயிர்களை நடவு செய்து விற்பனையில் சாதனை படைப்பீர்கள். நீண்டநாள் நண்பரின் உதவியால் தொழிலை விரிவுபடுத்துவீர்கள். ஐடி ஊழியர்கள் அதிகச் சம்பளம் பெறுவீர்கள். ஆன்லைன் வர்த்தகங்கள் மூலம் ஆதாயம் அடைவீர்கள். கடன் சுமையை குறைப்பீர்கள்.

சிம்மம் : கூட இருந்தே குழி பறிக்கும் நண்பர்களை அடையாளம் காண்பீர்கள். சொன்ன சொல்லைக் காப்பாற்றி நல்ல பெயர் எடுப்பீர்கள். கூட்டுத் தொழிலில் இருந்த சங்கடங்கள் விலகி சந்தோசம் அடைவீர்கள். வாக்கு சாதுர்யத்தால் எல்ஐசியில் அதிக பாலிசி சேர்ப்பீர்கள். குறுக்கு வழியில் பணம் சம்பாதிக்கும் எண்ணத்தால் பாதிக்கப்படுவீர்கள். தடைபட்ட சுபநிகழ்ச்சிகளை நடத்துவீர்கள்.

கன்னி : கடனை அடைத்து மன அழுத்தத்திலிருந்து விடுபடுவீர்கள். புதிய தொழில்களுக்கான வழிமுறைகளை வகுப்பீர்கள். பழைய நண்பர்களின் உதவியை நாடுவீர்கள். அரசுப் பணியாளர்கள் பதவியில் மாற்றமும் ஊதிய உயர்வும் அடைவீர்கள். கணவன் மனைவியிடையே ஒற்றுமையை பலப்படுத்துவீர்கள். வியாபாரத்தில் லாபத்தை அதிகரிப்பீர்கள்.

துலாம் : அதிக சிரமப்பட்டு வியாபாரத்தை நடத்துவீர்கள். தொழிலை விரிவுபடுத்த கடினமாக உழைப்பீர்கள். எதிர்பார்த்த அரசாங்க வேலைகள் தாமதமாவதால் சங்கடப்படுவீர்கள். உறவினர்களின் அவமானத்தால் உற்சாகம் இழப்பீர்கள். முதுகு வலியால் சிரமப்படுவீர்கள். வெளியூர் பயணங்களால் உடல் சோர்வும் மன உளைச்சலும் அடைவீர்கள்.

விருச்சிகம் : பழுதான வாகனத்தை சரிப்படுத்துவீர்கள். வீடு கட்டும் வேலையில் சுணக்கத்தை பார்ப்பீர்கள். ரியல் எஸ்டேட் தொழிலில் பாதிப்பு அடைவீர்கள். ஆன்லைன் வர்த்தகங்களில் சிக்கலை சந்திப்பீர்கள். அரசுப் பணியில் பைல்களைக் கையாளும்போது கவனத்தை சிதற விடாதீர்கள். தேவையில்லாத வாக்குறுதிகளை யாருக்கும் வழங்காதீர்கள். பண முடக்கத்தால் பாதிக்கப்படுவீர்கள்.

தனுசு  :   தட்டும் இடத்திலெல்லாம் பணம் கொட்டி சந்தோஷத்தில் திளைப்பீர்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்ததை விட பல மடங்கு லாபம் பார்ப்பீர்கள். வாகன விற்பனையில் நல்ல முன்னேற்றம் காண்பீர்கள். கட்டுமானத் தொழிலில் இருப்பவர்கள் கணிசமான லாபம் பார்ப்பீர்கள். இல்லத்தரசியின் இதமான போக்கால் நிம்மதியாக தூங்குவீர்கள். காதலில் வெற்றி பெறுவீர்கள்.

மகரம் : தொலைதூரப் பயணங்களால் குடும்பத்தை பிரிவீர்கள். மேற்படிப்புக்காக பிள்ளைகளை வெளிநாட்டிற்கு அனுப்பி வைப்பீர்கள். சந்தோசங்களை அனுபவிப்பதற்கு ஆடம்பரமாகச் செலவு செய்வீர்கள். அடுத்தவருக்கு உதவி செய்வதன் மூலம் மதிப்பு, மரியாதை. செல்வாக்கை உயர்த்திக் கொள்வீர்கள். உறவுகளைப் பலப்படுத்த முயற்சி எடுப்பீர்கள்.

கும்பம் : பிள்ளைகளால் சோதனையை சந்திக்கும் நிலைக்கு ஆளாவீர்கள். கணவன் மனைவி பிரச்சினையால் டென்ஷனாவீர்கள். வியாபாரத்தில் அதிக லாபம் கிடைத்தாலும் செலவும் அதிகரித்து சிரமப்படுவீர்கள். உறவுகளுக்குச் செலவு செய்து மற்றவர்களால் பாராட்டப்படுவீர்கள். அறிமுகமில்லாத யாருடனும் கொடுக்கல் வாங்கல் வைத்துக் கொள்ளாதீர்கள்.

மீனம் : அதிக அலைச்சல் காரணமாக உடல் சோர்வால் பாதிக்கப்படுவீர்கள். வேளாவேளைக்கு உணவருந்தக் கூட நேரம் கிடைக்காமல் வேலை பார்ப்பீர்கள். வெளியூர்ப் பயணங்களால் பெரிதாக பயன் அடைய மாட்டீர்கள். நண்பர்களிடமிருந்து எதிர்பார்த்த உதவி கிடைக்காமல் ஏமாற்றம் அடைவீர்கள். சந்திராஷ்டம நாள். நிதானமாக நடந்து கொள்ளுங்கள்.

சதீஸ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...