இன்ஜினியரிங் துறையிலிருந்து விவசாயத்துறை..! | தனுஜா ஜெயராமன்
மது கர்குண்ட் என்ற இன்ஜினியர் பெங்களூரில் உள்ள தனது டெங்கின் (Tengin) என்ற தனது ஸ்டார்ட்அப் நிறுவனம் மூலம் தேங்காய் விவசாய பொருட்களை விற்பனை செய்கிறார். பொறியியலாளராக இருந்து விவசாயியாக மாறிய மது கர்குண்ட் சுத்தமான தேங்காய் எண்ணெய், தேங்காய் பர்பி, சோப்புகள், மெழுகுவர்த்திகள், சர்க்கரை, சிப்ஸ், கிராக்கரி ஷெல்ஸ், கொயர் டிஷ் ஸ்க்ரப்பர்கள் எனப் பலவற்றைத் தென்னை மர வளர்ப்பில் இருந்து உருவாக்கி விற்பனை செய்கிறார்.
இதன் மூலம் மது கர்குண்ட் மாதம் ரூ.4 லட்சம் வரை எளிதாகச் சம்பாதிக்கிறார். தேங்காயின் ஒவ்வொரு பகுதியையும் பயன்படுத்தி, கிட்டத்தட்ட எதுவும் வீணாகாமல் இருப்பதை உறுதிசெய்வது மூலம் ஜீரோ வேஸ்ட் பார்மூலா-வை உருவாக்கி தென்னை விவசாயிகளுக்குப் புதிய பாதையை உருவாக்கியுள்ளார் மது.
வேறு துறையில் இருந்து விவசாயத் துறைக்கு வருபவர்கள் பெரும்பாலான இடத்தில் வெற்றி பெறுவது கடினம். ஆனால் இங்கு ஒருவர் சரியான முறையில் திட்டமிட்டு இனிஜினியராக இருந்து தனது நிலையான மாத சம்பள பணியை விட்டுவிட்டு விவசாயத்தில் போதுமான அனுபவம் கொண்டு களத்தில் இறங்கியுள்ளார். இதன் மூலம் தென்னை வளர்ப்பில் 0% வேஸ்ட் என்ற புதிய பார்மூலா-வை உருவாக்கி சக்ஸஸ் செய்துள்ளார்.
மது கர்குண்ட் தனது ஸ்டார்ட்அப் நிறுவனமான டெங்கின் (Tengin) மூலம் அவருடைய கிராமத்தில் இருக்கும் பெண்கள் சுய உதவி குழுக்களுக்கும் உதவுகிறார். மேலும் டெங்கின் (Tengin) மூலம் கர்நாடகா மற்றும் கோவா-வில் சுமார் 20 விவசாயிகளை இணைத்துள்ளார் மது கர்குண்ட்.