இன்றைய ராசி பலன் ( புதன்கிழமை 13 செப்டம்பர் 2023 )

 இன்றைய ராசி பலன் ( புதன்கிழமை 13 செப்டம்பர் 2023 )

சோபகிருது வருடம் ஆவணி மாதம் 27 ஆம் தேதி புதன்கிழமை 13.9.2023 சந்திர பகவான் இன்று சிம்ம ராசியில் பயணம் செய்கிறார். இன்று அதிகாலை 04.01வரை திரியோதசி . பின்னர் சதுர்த்தசி. இன்று அதிகாலை 01.24 வரை ஆயில்யம். பின்னர் மகம். திருவோணம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சந்திராஷ்டமம். சற்று கவனமுடனும் எச்சரிக்கையுடனும் நடந்துகொள்வது அவசியம்.

மேஷம் :  இன்று வெற்றிபெற தொடர் முயற்சி எடுக்க வேண்டும். இன்று செயல்களை நம்பிக்கையுடன் ஆற்றுங்கள். பதட்டத்தை கட்டுப்படுத்துங்கள். ஆன்மீக ஈடுபாடு உங்களை சுறுசுறுப்பாக வைக்கும். உங்கள் பணிகளை நீங்கள் எளிதில் ஆற்ற இயலாது. இன்று கூடுதல் செலவினங்கள் காணப்படும். பண இழப்பிற்கான வாய்ப்பும் உள்ளது. உங்கள் ஆரோக்கியம் குறைந்து காணப்படும்.

ரிஷபம் : இன்று வெற்றியைக் காண பொறுமையாக இருக்க வேண்டும். செய்யும் செயலில் உறுதி இருந்தால் வெற்றி நிச்சயம். பதட்டமாக இருப்பதாக உணர்வீர்கள். உறுதி மற்றும் தைரியம் மூலம் வெற்றி காண்பீர்கள். இன்று செழிப்பான நாளாக காணப்படாது. அதிர்ஷ்டத்தை விட கடின உழைப்பை நம்புங்கள். பணப்புழக்கம் மகிழ்ச்சிகரமானதாக இருக்காது. இன்று ஆரோக்கியம் சுமாராக இருக்கும்.

மிதுனம் :  குடும்பத்திற்காக பணம் செலவு செய்வீர்கள். இது உங்களுக்கு மகிழ்ச்சியை அளிக்கும். இன்று நம்பிக்கையுடன் இருங்கள். சிறந்த வளர்ச்சி சாத்தியம். உங்கள் பணியில் வளர்ச்சி காணப்படும்.பணியில் வெற்றி கிடைப்பதற்கான வாய்ப்பு உள்ளது. நிதிநிலைமை சிறப்பாக காணப்படும். அமைதியாக இருந்தால் ஆரோக்கியமாக இருக்கலாம்.

கடகம் : இன்று மகிழ்சிகரமான நாளாக இருக்காது. நீங்கள் அதிக முயற்சி எடுக்க வேண்டும் உங்களிடத்தில் இன்று தெளிவு இருக்காது அதனால் தவறான முடிவுகள் எடுக்க வாய்ப்பு உள்ளது. நீங்கள் இன்று பணியில் மும்மரமாக இருப்பீர்கள். உங்கள் பணிகளை திட்டமிட்டு ஆற்றுங்கள். பண வரவு சுமாராக காணப்படும். பணத்தை கவனமாக கையாள வேண்டும்.

சிம்மம் : ஆன்மீக ஈடுபாடு மூலம் நீங்கள் ஆறுதல் பெறலாம். பிரார்த்தனை மற்றும் தியானம் மகிழ்ச்சி அளிக்கும். மனதில் உற்சாகமாகவும் முகத்தில் புன்னகையுடனும் இருங்கள். இன்று பணிச்சுமை அதிகமாக இருக்கும். திட்டமிட்டு பணிகளை மேற்கொள்ள வேண்டும். இன்று வரவு செலவு இரண்டும் காணப்படும். பணத்தை கவனமுடன் கையாளவும். இன்று மனதில் குழப்பம் காணப்படும்.

கன்னி : இன்று பொறுமையை வளர்த்துக் கொள்ள வேண்டும். மக்களின் நன்மதிப்பை பெற வேண்டும். தைரியத்தை வளர்த்துக்கொள்ள வேண்டும். நீங்கள் பணியில் தவறுகள் செய்ய நேரலாம். எளிதாகப் பணியாற்ற மனதை நல்ல நிலையில் வைத்திருக்க வேண்டும். பண வரவிற்கு இது உகந்த நாள் அல்ல. பணத்தை கவனமாக செலவு செய்ய வேண்டும். பண இழப்பிற்கான வாய்ப்பும் உள்ளது.

துலாம் : இன்று வெற்றிக்கு உகந்த நாள். விரைவாக செயலாற்ற உங்களிடம் உறுதியும் தைரியமும் காணப்படும். உங்கள் ஆற்றலை வெளிக்கொணரும் திறமை உங்களிடம் காணப்படும். பணிகளை குறித்த நேரத்தில் முடிப்பீர்கள். நீங்கள் தொழில் சார்ந்த அணுகுமுறையை மேற்கொள்வீர்கள். இன்று நிதிநிலை உங்கள் கட்டுப்பாட்டில் இருக்கும். இன்று நலமாக இருப்பீர்கள். திடமான ஆரோக்கியம் கொண்டிருப்பீர்கள்.

விருச்சிகம் : இன்று சிறப்பான நாளாக இருக்கும். நீங்கள் மிகுந்த தன்னம்பிக்கையுடன் உங்கள் செயல்களைச் செய்வீர்கள். உங்கள் நண்பர்கள் மற்றும் நெருங்கிய தொடர்பு உடையவர்களிடம் நல்ல உறவை பராமரிப்பீர்கள். உங்கள் சக ஊழியர்களின் ஆதரவு உங்களை கடினமாக உழைக்க வைக்கும். இன்று பணம் அதிக அளவில் கிடைக்கும். நம்பிக்கையான உணர்வுகள் காணப்படும்.

தனுசு  :   இன்று சுமாரான பலன்கள் கிடைக்கும் நாள். நீங்கள் அமைதியாகவும் பொறுமையாகவும் இருக்க வேண்டும். சகஜமான அணுகுமுறை வேண்டும். இன்று பணிகள் அதிகமாக காணப்படும். எனவே பணிகளை கவனமாகக் கையாள வேண்டும். அறிவார்ந்த திட்டங்கள் மூலம் இது சாத்தியம். ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும். இன்று வரவை விட செலவு அதிகமாக இருக்கும்.

மகரம் : இன்று செயல்கள் உங்கள் விருப்பம் போல நடக்காது. நேர்மறை எண்ணம் கொண்டு செயல்படுவது நல்லது. தன்னம்பிக்கையோடு உங்கள் இலக்கில் கவனம் செலுத்த வேண்டும். தனிமையாக இருப்பது போன்று உணர்வீர்கள். ஆனால் இதுவும் கடந்து போகும். செலவுகள் அதிகமாக காணப்படும். பணத்தை தக்க வைத்துக்கொள்ளும் வாய்ப்பு குறைவு. இன்று பணிகள் அதிகமாக காணப்படும். இன்று ஆரோக்கியம் சுமாராக இருக்கும்.

கும்பம் : இன்று சாதகமான நாளாக அமையும். உங்கள் வாழ்விற்கான பயனுள்ள முடிவுகளை எடுக்க உகந்த நாள். உங்கள் உடன் பிறந்தவர்களின் ஆதரவு கிடைக்கும். நீங்கள் பணியில் பிரகாசிப்பீர்கள். பணிகளை நீங்கள் கையாளும் திறன் மூலம் நீங்கள் உங்கள் மேலதிகாரிகளின் கவனத்தை கவர்வீர்கள். பணப்புழக்கம் அதிகமாக காணப்படும். சில பயனுள்ள முதலீடுகளை நீங்கள் தேர்வு செய்யலாம். இன்று ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

மீனம் : இன்று வெற்றி கிடைக்கும் நாள். நீங்கள் இன்று தைரியமாக இருப்பீர்கள். உங்கள் முயற்சி நல்ல பலன்களை அளிக்கும். பயணங்களுக்கான வாய்ப்பு உள்ளது. உங்கள் பணியில் வெற்றி பெறுவீர்கள். இன்று உங்கள் ஆற்றலை நீங்கள் உணரும் நாள். இன்று அதிக தன்னம்பிக்கை காணப்படும். இன்று பணபுழக்கம் திருப்திகரமாக இருக்கும். நீங்கள் இன்று புத்துணர்ச்சியுடனும் உறுதியுடனும் காணப்படுவீர்கள்.

சதீஸ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...