இன்றைய ராசி பலன் சனிக்கிழமை 09 செப்டம்பர் 2023)

 இன்றைய ராசி பலன் சனிக்கிழமை 09 செப்டம்பர் 2023)

கோபகிருது ஆண்டு – ஆவணி 23 – சனிக்கிழமை (09.09.2023) நட்சத்திரம் : திருவாதிரை மாலை 6.38 வரை பின்னர் புனர்பூசம் திதி : தசமி மாலை 10.48 வரை பின்னர் ஏகாதசி, யோகம் : சித்த யோகம் நல்லநேரம் : காலை 7.45 – 8.45 / மாலை 4.45 – 5.45 சனிக்கிழமை – சுப ஓரை விவரங்கள் (காலை 7 முதல் 7 1/2, 10 1/2 முதல் 12 வரை, பகல் 12 முதல் 1 வரை, 5 முதல் 6 வரை, இரவு 6 முதல் 7 1/2 வரை, 9 முதல் 10 வரை) சுபகாரியங்கள் : ஆயுதம் பழக, யாத்திரை போக, வார்படஞ் செய்ய, சுபம் பேச சிறந்த நாள்.

மேஷம் : மேஷ ராசி அன்பர்களே, குடும்பத்தில் தவிர்க்க முடியாத செலவுகள் வரும். மன சஞ்சலங்கள் ஏற்பட்டு பின் விலகும். வாகன யோகம் உண்டாகும். உத்தியோகத்தில் வேலைச்சுமை குறையும்.

ரிஷபம் : ரிஷப ராசி அன்பர்களே, குடும்பத்தில் இருந்த இன்னல்கள். குறையும். பணவரவு சுமாராக இருக்கும். புதிய முயற்சிகளை தவிர்க்கவும். உத்யோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும்.

மிதுனம் :  மிதுன ராசி நேயர்களே, குடும்பத்தில் அமைதி நிலவும். பேச்சில் இனிமை கூடும். கணவன் மனைவி உறவில் குதூகலம் ஏற்படும். உத்யோகத்தில் நல்ல பெயர் கிடைக்கும்.

கடகம் : கடக ராசி அன்பர்களே, எதையும் சமாளிக்கும் சாமர்த்தியம் உண்டாகும். நண்பர்கள் விரோதமாக செயல்பட வாய்ப்புண்டு. பயணங்களால் ஆதாயம் உண்டு. தொழில், வியாபாரத்தில் சாதிக்க முடியும்.

சிம்மம் : சிம்ம ராசி அன்பர்களே, குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். பிரியமானவர்களுடன் கருத்து மோதல்கள் வந்து நீங்கும். எதிர்பார்த்த உதவிகள் தாமதமாகும். தொழில், வியாபாரம் விருத்தியடையும்.

கன்னி : கன்னி ராசி அன்பர்களே, தள்ளிப் போன காரியங்கள் விரைவில் முடியும். தேக ஆரோக்கியம் பலம் பெரும். வெளிவட்டாரத்தில் புது தொடர்புகள் கிடைக்கும். உத்யோகத்தில் அமைதி நிலவும்.

துலாம் : துலாம் ராசி நேயர்களே, ஆன்மீக நாட்டம் அதிகரிக்கும். காணாமல் போன பொருள் திரும்ப கிடைக்கும். விலகி நின்றவர்கள் மீண்டும் வந்து சேருவர். தொழில், வியாபாரம் சிறக்கும்.

விருச்சிகம் : விருச்சிக ராசி அன்பர்களே, குடும்ப கௌரவம் உயரும். எதிர்பாராத செலவுகள் வரும். தேவையில்லாத இடங்களில் செல்வாக்கை பயன்படுத்த வேண்டாம். உத்யோகத்தில் உயர்வு நிலை உண்டு.

தனுசு  :   தனுசு ராசி அன்பர்களே, அத்தியாவசிய பொருட்களை வாங்கி சேமிக்க முடியும். பிராத்தனைகள் நிறைவேறும். கணவன் மனைவிடையே அன்யோன்யம் ஏற்படும். தொழில், வியாபாரத்தில் போட்டிகள் குறையும்.

மகரம் : மகர ராசி அன்பர்களே, மனதில் புதிய உற்சாகம் பிறக்கும். பொருளாதார நிலையில் முன்னேற்றம் இருக்கும். காரிய அனுகூலம் உண்டாகும். தொழில், வியாபாரம் நல்ல முறையில் செல்லும்.

கும்பம் : கும்ப ராசி அன்பர்களே, எதையும் ஒளிவு மறைவின்றி பேசுவது நல்லது. மனம் யோக, தியானத்தில் ஈடுபடும். அக்கம் பக்கம் வீட்டாரின் ஆதரவு பெருகும். தொழில், வியாபாரத்தில் வளர்ச்சி இருக்கும்.

மீனம் : மீன ராசி அன்பர்களே, எதிர்பார்த்த காரியம் தாமதமின்றி நடைபெறும். மறைமுக எதிர்ப்புகள் குறையும். பண நெருக்கடியை ஓரளவு சமாளிக்க முடியும். தொழில், வியாபாரம் செழிப்படையும்.

சதீஸ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...