கந்தப் பெருமானின் கருணை
சஞ்சலங்கள் அகல | செந்தூர் முருகன் பாடல்
.| முனைவர் ச.பொன்மணி
இன்று கிருத்திகைத் திருநாள்
கந்தப் பெருமானின் கருணையும் காவலும் காலமெல்லாம் அனைவருக்கும் கிடைக்கட்டும்.
செவ்வாய், கார்த்திகை, சஷ்டி இன்று ஒரே நாளில் வருவது மிக சிறப்பானதாகும்.
முனிவர்கள், தேவர்கள் உள்ளிட்ட பலரும் கடைப்பிடித்த விரதம் சஷ்டி. கார்த்திகையில் கந்தனை வழிபட துன்பங்கள், கடன் தொல்லை நீங்கும்.
எந்த வினையானாலும், கந்தன் அருள் இருந்தால் வந்த வழி ஓடும் என்பது ஆன்றோர் வாக்கு.
அந்த ஆறுமுகனுக்கு உரிய விரதங்களுள் மிக முக்கியமானதாகச் சொல்லப்படுவது, கந்தசஷ்டி விரதம்.
முனிவர்கள், தேவர்கள் உள்ளிட்ட பலரும் கடைப்பிடித்த விரதம் இது. சஷ்டி விரதம் என்பது முருகப் பெருமானுக்குரிய விரதம்.
சஷ்டி விரதமிருப்பவருக்கு குழந்தைப்பேறு உண்டாகும். முருகனை வழிபட குடும்பத்தில் துன்பங்கள், கடன் தொல்லை நீங்கும்.
முருகன் கோயிலுக்குச் சென்று விளக்கேற்றி வழிபாடு செய்ய வேண்டும். அரோகரா சொல்லி ஆறுமுகனை வழிபட அனைத்தும் கிடைக்கும்.
இன்று காலை, மாலை கந்தசஷ்டி கவசம் படிப்பது எல்லா நன்மையும் தரும்.
சஞ்சலங்கள் அகல | செந்தூர் முருகன் பாடல்| முனைவர் ச.பொன்மணி