“கருமேகங்கள் கலைகின்றன” படம் பார்த்த IAS மாணவர்கள்! | தனுஜா ஜெயராமன்

 “கருமேகங்கள் கலைகின்றன” படம் பார்த்த IAS மாணவர்கள்! | தனுஜா ஜெயராமன்

இருபது ஆண்டுகளுக்கு முன்பு நான் எழுதிய “கருமேகங்கள் ஏன் கலைந்து சென்றன” எனும் சிறுகதை, “கருமேகங்கள் கலைகின்றன” எனப் பெயர் மாற்றம் பெற்று திரைப்படமாக உருவாகி இன்று உலகம் முழுவதிலும் உள்ள திரையரங்குகளில் வெளியாகி இருக்கிறது என்கிறார் தங்கர் பச்சன். ‘கருமேகங்கள் கலைகின்றன’ திரைப்படம் வெளியான முதல் நாள் முதல் காட்சியை முன்னூறுக்கும் மேற்பட்ட IAS மாணவர்கள் சென்னை சந்திரன் திரையரங்கில் கண்டுக்களித்தனர். படம் முடிந்ததும் ரசிகர்களின் கருத்துக்களை பகிரப்பட்டது. அங்கு வந்திருந்த இயக்குநர் தங்கர் பச்சானை சூழ்ந்து கொண்டு அவரைப் பாராட்டியதுடன் இதே போன்ற சிறந்த திரைப்படங்களை மேலும் மேலும் உருவாக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர்.

வெறும் தாளில் இருந்த இந்த கதை 138 நிமிடங்கள் ஓடும் திரைப்படமாக உருவாக காரணமாக இருந்த இப்படத்தின் தயாரிப்பாளருக்கும் என்னுடன் துணை நின்று மக்களின் உள்ளங்களை கட்டிப்போடும் திரைப்படைப்பாக உருவாக காரணமாக இருந்த நடிப்புக் கலைஞர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் அனைவருக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

யாருக்காக இப்படம் படைக்கப்பட்டதோ அவர்களிடமே இதை சேர்த்துக் கொண்டிருக்கும் ஊடக மற்றும் சமூக ஊடக நண்பர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றியை உரித்தாக்குகிறேன். எனது படைப்புகளையும் எனது நோக்கத்தையும் உணர்ந்து என்றும் துணை நிற்கும் உங்கள் அனைவருக்கும் என்றும் கடமைப்பட்டிருக்கிறேன். படைப்பை படைப்பது மட்டுமே எனது பணி. இதனை ஏற்றுக் கொண்டாடி என்னை இடைவெளியின்றி மீண்டும் இயங்க வைப்பது உங்கள் கையில் தான்,அனைவருக்கும் எனது நன்றி என்கிறார் தங்கர் பச்சன்.

தனுஜா ஜெயராமன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...