திருநெல்வேலி சீமை!
இதுதான் திருநெல்வேலி சீமை!
தாகத்துக்கு “தாமிரபரணி”
அருவிக்கு “குற்றாலம்”
தமிழுக்கு “பொதிகை மலை”
கடலுக்கு “உவரி”
பாவம் நீங்க “பாபநாசம்”
எழுமிச்சைக்கு “புளியங்குடி”
அப்பளத்துக்கு “கல்லிடை”
கருப்பட்டிக்கு “உடன்குடி”
பாய் க்கு “பத்தமடை”
தென்றலுக்கு “தென்காசி”
பிரியானிக்கு “சங்கரன்கோவில்”
அழகுக்கு “அம்பை”
பார்த்து ரசிக்க “மாஞ்சோலை”
புலி க்கு “களக்காடு”
பறவைக்கு “கூந்தங்குளம்”
படிப்புக்கு “பாளையங்கோட்டை”
சிமென்ட் க்கு “சங்கர்நகர்”
அன்பா பேசுனா “அல்வா”
வம்பா பேசுனா “அருவா”
இது தாம்லே எங்க
திருநெல்வேலி சீமை..!
*1790 ஆம் ஆண்டு இதே செப்டம்பர் மாதம் 1 ஆம் தேதிதான் திருநெல்வேலி மாவட்டம் பிரிட்டிஷ் கிழக்கிந்தியக் கம்பனியால் உருவாக்கப்பட்டது. (அன்றைய தினத்தில் திருநெல்வேலி மாவட்டத்துடன் இன்றைய தூத்துக்குடி மாவட்டமும், விருதுநகர் மற்றும் ராமநாதபுரம் மாவட்டத்தின் சில பகுதிகளும் இருந்தன.)
செப்டம்பர் மாதம் 1 ஆம் தேதி திருநெல்வேலி தினமாக கொண்டாடப்படுகிறது* என்பது எக்ஸ்ட்ரா நியூஸ்.