அதிகரித்து வரும் தங்க முதலீடுகள்! | தனுஜா ஜெயராமன்
தங்கத்தை வெறும் நகையாக, பொருளாக பார்ப்பதை தாண்டி இன்று அனைத்து தரப்பும் மக்களும் தங்கத்தை ஒரு முக்கிய முதலீடாக பார்க்கும் எண்ணம் வந்துள்ளது. குறிப்பிட்ட மக்கள் மட்டுமே தங்கத்தில் அதிகப்படியான முதலீட்டை செய்து வந்த நிலை தற்போது நிலை முற்றிலும் மாறியுள்ளது. அதிகரித்து வரும் விலை உயர்வினால்வபலரும் தங்கம் மீதான முதலீட்டு மீது ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்தியாவில் தங்கம் மீதான டிமாண்ட் தொடர்ந்து அதிகரித்து வருகிறது, தங்கம் வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்து விற்பனை செய்யப்படும் காரணத்தால் இதை குறைக்க மத்திய அரசு மக்கள் நேரடியாக தங்கத்தில் முதலீடு செய்வதை தடுக்க தங்க முதலீட்டு பத்திரத்தை அறிமுகம் செய்துள்ளது.
இன்றைய வர்த்தகத்தில் டாலர் மற்றும் அரசு பத்திர முதலீட்டில் ஏற்பட்ட முதலீட்டு லாபத்தில் பதிவான தடுமாற்றம், இன்று தங்கம் விலை 3 வார உச்சத்தை எட்டியுள்ளது. இதேவேளையில் அமெரிக்க அரசு பத்திர முதலீட்டு லாபம் 20 வருட உச்சத்தில் இருந்து சரிந்துள்ளது. இதனால் சர்வதேச முதலீட்டாளர்கள் தங்கம் மீதான முதலீட்டை அதிகரித்துள்ளனர். இன்றைய சர்வதேச சந்தை வர்த்தகத்தில் ஒரு அவுன்ஸ் 24 கேரட் ஒரு அவுன்ஸ் தங்கம் விலை 1914 டாலரில் இருந்து 1925.52 டாலர் வரையில் உயர்ந்துள்ளது. இதேபோல் எம்சிஎக்ஸ் சந்தையில் 10 கிராம் 24 கேரட் தங்கம் விலை 0.11 சதவீதம் உயர்ந்து 58,954.00 ரூபாயாக உள்ளது. 1 கிலோ வெள்ளி விலை 0.17 சதவீதம் உயர்ந்து 73,740 ரூபாயாக உள்ளது.