இன்றைய ராசி பலன் ஞாயிறு 27 ஆகஸ்டு 2023)

மேஷம் : இன்று உற்சாகமான நாளாக இருக்காது. பலன்கள் குறைந்து காணப்படும். குழப்பங்கள் காணப்படும். பிரார்த்தனை மற்றும் இறை வழிபாடு மூலம் நிவாரணம் கிடைக்கும். பணிகள் அதிகமாக காணப்படும். திட்டமிட்டு பணியாற்ற வேண்டும். பண வரவு குறைந்து காணப்படும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்காது.

ரிஷபம் : இன்று நீங்கள் தேவைகளை அறிந்து நடந்து கொள்வீர்கள். உங்கள் முயற்சிகளில் வெற்றி காண்பீர்கள். உங்களின் சிறிய திட்டம் பெரிய வெற்றிக்கு வழி காட்டும். உங்கள் பணிகளை விரைந்து ஆற்றுவீர்கள். உங்களிடம் இன்று ஆற்றலும் உறுதியும் நிறைந்து காணப்படும். இன்று சுதந்திரமான நிதிநிலை காணப்படும். ஆரோக்கியப் பிரச்சினைகள் ஏதும் இருக்காது.

மிதுனம் :  இன்று உங்கள் விருப்பங்களை மேம்படுத்திக் கொள்வீர்கள். வாய்ப்புகள் கிடைக்கும். அதை உங்களுக்கு சாதகமாக ஆக்கிக் கொள்வீர்கள். பணியில் உங்கள் செயல்திறனை வெளிப்படுத்த்துவீர்கள். உங்கள் திறமைகள் உங்கள் மேலதிகாரிகளால் பாராட்டப்படும். சுதந்திரமான நிதிநிலை காணப்படும். இன்று ஆரோக்கியப் பிரச்சினைகள் ஏதும் இருக்காது.

கடகம் : இன்று வெற்றிகரமான நாளாக இருக்கும். தைரியம் மற்றும் உறுதி மூலம் நன்மை விளையும். பயணம் செய்வதற்கான வாய்ப்பு உள்ளது. இன்று பணியில் அதிக பலன்கள் கிடைக்கும். உங்கள் ஆற்றலை நீங்கள் உணரும் நாள். இதன் மூலம் உங்கள் தன்னம்பிக்கை வளாரும். உங்கள் கையிலிருக்கும் பணம் போதுமானதகா இருக்கும். இன்று உறுதியாகவும் புத்துணர்ச்சியுடனும் காணப்படுவீர்கள்.

சிம்மம் : நீங்கள் இன்று அனுசரித்து நடந்து கொள்ள வேண்டும். தவறுகளை திருத்திக்கொள்ள வேண்டும். உங்கள் செயல்களில் கட்டுப்பாடு வேண்டும். இழப்பு ஏற்படாமல் இருக்க திட்டமிட்டு செயலாற்ற வேண்டும். உங்கள் பணிகளை உறுதியுடனும் பொறுமையுடனும் ஆற்ற வேண்டும். இன்று செலவுகள் அதிகரித்து காணப்படும்.

கன்னி : இன்று சற்று அனுகூலம் குறைந்த நாள். உற்சாகம் குறைந்து காணப்படும். இன்றைய நாளை கையாள்வது கடினமாக இருக்கும். இன்று கெடுதலான பலன்கள் காணப்படும். வேலை தொடர்பான பயணம் காணப்படுகின்றது. இன்று பணவரவு குறைந்து காணப்படும். உங்களால் சிறந்த ஆரோக்கியத்தை பராமரிக்க இயலாது.

துலாம் : இன்று அனுகூலமான நாளாக இருக்கும். விருந்தினர்களின் வருகை உற்சாகம் அளிக்கும். அதிர்ஷ்டம் உங்கள் பக்கம் இருக்கும். நீங்கள் அர்ப்பணிப்புடன் பணிகளை ஆற்றுவீர்கள். வெற்றி பெற வேண்டும் என்ற உங்கள் லட்சியம் மூலம் வெற்றி காண்பீர்கள். இன்று உங்கள் கடின உழைப்பின் காரணமாக நீங்கள் எளிதில் பணம் சம்பாதிப்பீர்கள். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

விருச்சிகம் : இன்று திருப்திகரமான நாளாக இருக்காது. இன்று பாதுகாப்பின்மை உணர்வு காணப்படும். இதனை சமாளிக்க நம்பிக்கையுடன் முயல வேண்டும். பிரார்த்தனை மற்றும் தியானம் மூலம் நம்பிக்கையை வளர்த்துக் கொள்ள முடியும். பணியிடத்தில் பதட்டம் காணப்படும். பணிகள் இறுக்கமாக காணப்படும். பணப்புழக்கம் போதிய அளவு காணப்படாது.

தனுசு  :   இன்று பொறுமையான சகஜமான அணுகுமுறை மேற்கொள்ள வேண்டும். ஆன்மீகத்தில் ஈடுபடுவதன் மூலம் வளர்ச்சி கிடைக்கும். இன்று பணிகள் அதிகமாக காணப்படும். பணிகளை குறித்தநேரத்தில் முடிப்பதை கடினமாக உணர்வீர்கள். இன்று பணப்புழக்கம் போதிய அளவில் இருக்காது.

மகரம் :  நீங்கள் யதார்த்தமான அணுகுமுறை மேற்கொள்வது சிறந்தது. உங்களை மகிழ்ச்சியாக வைத்துக் கொள்வதன் மூலம் உங்கள் தன்னம்பிக்கைவளரும். உங்கள் செயல்களை ஆற்ற அதிர்ஷ்டத்தை சார்ந்து இருக்காதீர்கள். பணியிடத்தில் நம்பிக்கையுடனும் அமைதியுடனும் பணியாற்ற வேண்டியது அவசியம். பணியில் திருப்தி ஏற்படாது. இன்று கணிசமான தொகையை பராமரிப்பதை கடினமாக உணர்வீர்கள்.

கும்பம் : இன்றைய நாள் உங்களுக்கு சாதகமாக இருக்கும். உங்கள் இலக்குகளை எளிதில் அடைவீர்கள். எதிர்காலத்திற்கான திட்டமிட இன்றைய நாளை பயன் படுத்திக் கொள்ளுங்கள். உங்களுக்கு புதிய பணி வாய்ப்புகள் கிடைக்கும். நீங்கள் அந்த வாய்ப்புகளை பயன்படுத்திக் கொண்டு முன்னேறுவீர்கள். இன்று பணப்புழக்கம் மகிழ்ச்சிகரமாக இருக்கும். இன்று ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

மீனம் : இன்று சுமாரான நாளாக இருக்கும். உங்கள் பணிகளை மேற்கொள்வதில் சில குறைபாடுகளைக் காண்பீர்கள். சில சௌகரியங்களை விட்டுக்கொடுக்க வேண்டியிருக்கும். இன்று உங்கள் பணிகளை மேற்கொள்ளும்போது தவறு நடக்கலாம். எனவே கவனமுடன் பணியாற்ற வேண்டும். இன்று பணவரவு குறைந்து காணப்படும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!