இன்றைய ராசி பலன் (செவ்வாய் 22 ஆகஸ்டு 2023)

 இன்றைய ராசி பலன் (செவ்வாய் 22 ஆகஸ்டு 2023)

மேஷம் :  இன்றைய நாள் சிறப்பான நாளாக இருக்கும். பணியிடத்தில் உங்களின் பணிக்கான அங்கீகாரம் கிடைக்கும். துணையிடம் நேர்மையாக நடந்து கொள்வீர்கள். நிதிநிலைமை சிறப்பாக காணப்படும். ஆரோக்கியத்தில் எந்த பிரச்சனையும் ஏற்படாது.

ரிஷபம் : இன்றைய நாள் உங்களுக்கு சாதகமான நாளாக இருக்கும். பணியிடத்தில் பணிகள் அதிகமாக காணப்படும். அதனால் தவறுகள் ஏற்பட வாய்ப்புள்ளதால் பணிகளை திட்டமிட்டு பணியாற்ற வேண்டும். துணையுடன் அமைதியாக பேச வேண்டும். பணவரவு அதிகமாக காணப்படும். ஆரோக்கியத்தில் தோல் எரிச்சல் பிரச்சனை ஏற்படும்.

மிதுனம் :  இன்றைய நாள் சாதகமான நாளாக இருக்காது. பணிகள் அதிகமாக இருப்பதால் குறித்த நேரத்தில் முடிக்க முடியாது. துணையுடன் நல்லுறவு நீடிக்க அமைதியாக பேச வேண்டும். குடும்பத்தில் பொறுப்புகள் அதிகமாக இருக்கும். அதனால் செலவுகளும் அதிகமாக காணப்படும். ஆரோக்கியத்தில் சளி, இருமல் பிரச்சனை ஏற்படும்.

கடகம் : இன்றைய நாள் சிறப்பான நாளாக இருக்கும். பணியிடத்தில் வளர்ச்சி காணப்படும். துணையுடன் வெளிப்படையாக பேசுவீர்கள். இதன் மூலம் இருவருக்கிடையே நல்லுறவை பராமரிப்பீர்கள். நிதிநிலைமை சிறப்பாக காணப்படும். இதனால் இருவருக்கிடையே நல்லுறவை பராமரிப்பீர்கள். ஆரோக்கியத்தில் எந்த பிரச்சனையும் ஏற்படாது.

சிம்மம் : இன்றைய நாள் சிறப்பான நாளாக இருக்கும். பணியிடத்தில் பணிகளை சிறப்பான செய்து முடிப்பீர்கள். இதனால் உயரதிகாரர்கள் பாராட்டுவார்கள். துணையுடன் வெளிப்படையாக பேசி மகிழ்வீர்கள். நிதிநிலைமை சிறப்பாக காணப்படும். ஆரோக்கியத்தில் எந்த பிரச்சனையும் ஏற்படாது.

கன்னி : இன்றைய நாள் சாதகமான நாளாக இருக்கும். பணிகளை திட்டமிட்டு பணியாற்ற வேண்டும். துணையுடன் நல்லுறவை பராமரிப்பீர்கள். பணவரவு சிறப்பாக காணப்படும். ஆரோக்கியத்தில் கண் எரிச்சல், முதுகு வலி பிரச்சனை ஏற்படும்.

துலாம் : இன்றைய நாள் சிறப்பான நாளாக இருக்கும். பணியிடத்தில் பதற்ற நிலையை தவிர்க்க வேண்டும். பணிகளை குறித்த நேரத்தில் முடிப்பதற்கு திட்டமிட்டு பணியாற்ற வேண்டும். துணையுடன் நல்லுறவை பராமரிக்க புரிந்து நடந்து கொள்ள வேண்டும். நாளை பண இழப்பு ஏற்பட வாய்ப்புள்ளதால் பணத்தை கவனமாக கையாள வேண்டும். ஆரோக்கியத்தில் தோல் வலி பிரச்சனை ஏற்படும்.

விருச்சிகம் :  இன்றைய நாள் தன்னம்பிக்கை குறைந்து காணப்படும். இசை கேட்பதன் மூலம் மன ஆறுதல் தரும். பணிகள் அதிகமாக காணப்படும், அதனால் பணிகளை திட்டமிட்டு பணியாற்ற வேண்டும். துணையுடன் உணர்ச்சிவசப்படுவதை தவிர்க்க வேண்டும். நாளை பொறுப்புகள் அதிகமாக இருக்கும்.

தனுசு  :   இன்றைய நாள் முக்கிய முடிவுகள் எடுப்பதற்கு உகந்த நாளாக இருக்கும். பணியிடத்தில் திறமையை வெளிப்படுத்துவீர்கள். உங்களின் துணையுடன் நல்லுறவை பராமரிப்பீர்கள். பணவரவு சிறப்பாக காணப்படும். ஆரோக்கியத்தில் எந்த பிரச்சனையும் ஏற்படாது.

மகரம் :  இன்றைய நாள்  எந்த செயலையும் பொறுமையாக செய்ய வேண்டும்.  பணியிடசூழல் திருப்தி அளிக்கும் வகையில் இருக்காது.  உங்களின் துணையுடன் நட்பு முறையோடு நடந்தால் நல்ல புரிந்துணர்வு ஏற்படும். நாளை வரவை விட செலவுகள் அதிகமாக இருக்கும். ஆரோக்கியத்தில் கால் வலி பிரச்சனை ஏற்படும்.

கும்பம் : இன்றைய நாள் சவால்கள் நிறைந்த நாளாக இருக்கும். பணியிடத்தில் வெற்றியை அடைவதற்கு கடுமையாக உழைக்க வேண்டியிருக்கும். உங்களின் துணையுடன் நல்லுறவை பராமரிக்க அமைதியாக பேச வேண்டும்.  நிதிநிலைமை சிறப்பாக காணப்படாது. நாளை தாயின் உடல் ஆரோக்கியத்திற்காக செலவு செய்ய வேண்டியிருக்கும்.

மீனம் : இன்றைய நாள்  சாதகமான நாளாக இருக்கும். பணியிடத்தில் உங்களின் திறமைக்கான அங்கீகாரம் கிடைக்கும். துணையுடன் நட்பாக நடந்து கொள்வீர்கள். பணவரவு அதிகமாக காணப்படும். ஆரோக்கியத்தில் எந்த பிரச்சனையும் ஏற்படாது.

சதீஸ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...