அதர்வாவின் “ மத்தகம் “ பாதியில் கிழிக்கப்பட்ட புத்தகம் – வெப் தொடர் விமர்சனம்!
அதர்வாவின் முரளி மற்றும் ஜெய்பீம் மணிகண்டன் நடிப்பில் உருவாகியுள்ள மத்தகம் வெப்தொடர் டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டாரில் வெளியாகி உள்ளது. மொத்தமாக ஐந்து எபிசோடுகள் கொண்ட இந்த தொடரில் ஒவ்வொரு எபிசோடும் 45 நிமிடங்கள்.
இயக்குனர் பிரசாத் முருகேசன் இயக்கத்தில் உருவாகி உள்ள இந்த தொடரில் அதர்வா உயர் போலீஸ் அதிகாரியாக அஷ்வத் என்ற கேரக்டரில் நடித்துள்ளார். அதர்வா நேர்மையான காவல் அதிகாரியாகயும், ஒரு சரராசரி குடும்ப தலைவனாகவும் சிறந்த நடிப்பை தந்துள்ளார்.
ஜெய்பீம் புகழ் மணிகண்டன் நிழல் உலக தாதா “படாளம் சேகர் “ என்கிற கதாபாத்திரத்தில் முதல் முறையாக வில்லனாக நடித்துள்ளார். எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் அதில் மிரட்டிவிடும் மணிகண்டன் இதிலும் வில்லனாக நடித்து சிறப்பாக ஸ்கோரை பெற்றுவிட்டார்.
மேலும் நிகிலா விமல், கவுதம் மேனன், தில்னாஸ் இராணி, இளவரசு, டிடி, வடிவுக்கரசி, அருவி திருநாவுக்கரசு, மூணாறு ரமேஷ், சரத் ரவி, ரிஷி காந்த் மற்றும் முரளி அப்பாஸ் என ஏராளமானோர் இத் தொடரில் நடித்துள்ளனர்.
வடசென்னையின் இருக்கும் ரவுடிகள் குறித்த கதைகளம். போலீஸ் அதிகாரி அதர்வா இறந்ததாக சொல்லப்படும் படாளம் ரவியாக வரும் மணிகண்டனை ஸ்கெட்ச் போட்டு பிடிக்க முயல்கிறார். மணிகண்டன் சென்னையில் இருக்கும் ரவுடிகளை வைத்து பிறந்த நாள் பார்ட்டி என்கிற பெயரில் ஏதோ பெரிய சம்பவம் செய்ய முயல்கிறார் என்று தெரிகிறது. ஆனால் அது என்ன என கடைசிவரை தெரியவில்லை. ஆனால் அதற்கு மினிஸ்டர் இளவரசு உதவுகிறார் என்பது மட்டும் கதையில் சொல்கிறார்கள். டிடி மணிகண்டன் காதலும் எங்கு எப்படி என தொடங்கியது என தெரியவில்லை…எந்த சம்பவங்களும் கோர்வையாக இல்லை.
அதர்வா நிகிலா தம்பதிகள் வாழ்க்கை முறை குறித்து ஏதும் இயக்குனருக்கே தெளிவில்லை. குழந்தை பெற்ற மனைவி நிகிலாவிடம் அதர்வா நடந்து கொள்ளும் விதம் நிகிலாவுக்கு மட்டுமல்ல நமக்கே எரிச்சலை வரவழைக்கிறது.
கவுதம் மேனன் போலீஸ் கமிஷ்னர் தில்னாஸ் இரானி குறித்த வகையிலும் ஒன்றும் புரியவில்லை. அவர்கள் மகளிக்கு ஏதோ உடம்பு சரியில்லை என்பதை தவிர..
சங்கு’ கணேசன் , ‘காய்ன்’ சிவா, ‘சூளை’ பாபு, திமிங்கலம், ஐஸ் பாக்ஸ், மாவா சைட் போன்ற ரவுடிகள் பெயர்கள் வழக்கம் போல இருந்தாலும், தொடர்ந்த ரவுடிகளின் கதைகள் ஏதோ போலீஸ் டாகுமெண்டரி போல இருக்கறது. பார்ப்பவர்களுக்கு சலிப்பை ஏற்படுத்துகிறது.
ஐந்து எபிசோடுகளும் முடிவற்று அந்தரத்தில் தொங்குகிறது.. கடைசி எபிசோட் இன்னும் சிறப்பாக எடுத்திருக்கலாம்… “சொத்” என முடிகிறது. படித்து கொண்டிருக்கும் புத்தகத்தை பாதியில் கிழித்து விட்டது போன்ற உணர்வு.
இறந்துவிட்டதாக கருதப்பட்ட படாளம் சேகர் உயிரோடு இருப்பது எப்படி? பிறந்த நாள் விழாவில் எப்படி என்ன நடக்கப்போகிறது என்பது இரண்டாவது பாகத்தில் சொல்லுவார்கள் போலும்.. இப்படி ஏன் ஐந்து எபிசோட்கள் எடுத்து அப்படியே விட்டு விட்டார்கள் என புரியவில்லை..
தொடரில் எந்த கேரக்டரும் முழுமைபெற்ற உணர்வு நமக்கு ஏற்படவேயில்லை. மொத்தத்தில் மத்தகம் ஈர்க்கவில்லை பெருங்குழப்பம்..!!