தலைமை செயலக கட்டிடம் இடம் மாறுமா? இல்லையா?

 தலைமை செயலக கட்டிடம் இடம் மாறுமா? இல்லையா?

தலைமைச் செயலகத்தில் காணப்படும் இட நெருக்கடி, பராமரிப்புப் பணி மேற்கொள்ள முடியாத சூழல் போன்ற காரணங்களால் தலைமைச் செயலகத்தின் அங்கீகரிக்கப்பட்ட அரசுப் பணியாளர் சங்கத்தின் சார்பில் முதல்வருக்குக் கடிதம் எழுதப்பட்டிருக்கிறது.

அந்தக் கடிதத்தில் தலைமைச் செயலகத்தை ஓமந்தூரார் அரசினர் தோட்டத்துக்கு மாற்ற வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

2011-ல் ஜெயலலிதா ஆட்சிக்கு வந்ததும் ஒமந்தூரார் கட்டிட புதிய தலைமைச் செயலகம் எண்ணை கிணறு வடிவில் இருப்பதாகவும், இங்கு அனைத்து அலுவலகமும் இயங்க கூடிய அளவுக்கு போதிய வசதிகள் இல்லை என்றும் கூறி அங்கே செல்ல மறுத்து விட்டார்.

இப்போது தி.மு.க. ஆட்சி நடந்து வரும் நிலையில் தலைமை செயலகத்தை மீண்டும் ஓமந்தூரார் வளாகத்தில் உள்ள புதிய தலைமைச் செயலக கட்டிடத்துக்கு மாற்ற வேண்டும் என்று தலைமை செயலக சங்கம் வலியுறுத்தி வருகிறது.

மேலும் அந்தக் கடிதத்தில், ‘தமிழ்நாட்டின் மக்கள் தொகை பெருக்கத்தின் காரணமாக தலைமைச் செயலகத்தில் பணியாற்றக்கூடிய பணியாளர்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கப்பட்டு இருக்கிறது. தற்போது 7 ஆயிரம் பணியாளர்கள் வரை இதில் பணியாற்றி வருகின்றனர். அனைத்துத் துறை சார்ந்த அரசு அலுவலகங்களும் இங்கு உள்ளதால், தினமும் பல்லாயிரக்கணக்கான மக்கள் தலைமைச் செயலகத்துக்கு வருகின்றனர். இதனால் போதிய இட வசதி இல்லாமல் தலைமைச் செயலகம் நெருக்கடியாகக் காணப்படுகிறது.

இது அரசின் கொள்கை முடிவு என்பதால் தலைமைச் செயலகம் ஓமந்தூரார் வளாகத்தில் உள்ள புதிய தலைமை செயலக கட்டிடத்துக்கு இடம் மாறுமா? இல்லையா? என்பது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முடிவு செய்வதை பொறுத்து அமையும் என்று அதிகாரிகள் கருத்து தெரிவித்தனர்.

தனுஜா ஜெயராமன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...