பிக்பாஸ் நிகழ்ச்சியில் இந்த டிவி ப்ரபலமா?

 பிக்பாஸ் நிகழ்ச்சியில் இந்த டிவி ப்ரபலமா?

பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் தற்போது தமிழ் செய்தி நிறுவனத்தில் பணிபுரியும் செய்தி வாசிப்பாளர் ஒருவர் கலந்து கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஏற்கனவே பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் செய்தி வாசிப்பாளர் அனிதா சம்பத் கலந்து கொண்டு புகழ்பெற்றார். தற்போது அனிதா சம்பத் விஜய் டிவியின் பல ப்ரபல நிகழ்ச்சிகளிலும் , பெரிய திரையிலும் கிடைத்த வாய்ப்புகளை அள்ளிப் போட்டு பட்டையை கிளப்பி வருகிறார்.

விஐய் டிவியின் பிக்பாஸ் நிகழ்ச்சி அடுத்த மாதம் துவங்க உள்ளதாக கூறப்படுகிறது. அதன் ப்ரமோ கூட தயாராகிவிட்டதாக சொல்கிறார்கள்.

பிக்பாஸ் என்றாலே பரபரப்பிற்கு பஞ்சமா என்ன? இந்த நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொள்ள உள்ள பிரபலங்கள் பற்றிய, அவ்வப்போது பட்டியல் வெளியாகி வருகிறது. அந்த வகையில்  தற்போது செய்தி வாசிப்பாளர் ஒருவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள உள்ளதாக செய்தகள் அடிபட்டு வருகிறது.

கனத்த குரலில் பேசி, தன்னுடைய குரல் மூலம் மிகவும் பிரபலமான பாலிமர் டிவியின் செய்தி வாசிப்பாளர் ரஞ்சித் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள உள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கனவே பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் செய்தி வாசிப்பாளர் அனிதா சம்பத் கலந்து கொண்ட நிலையில் அவரை தொடர்ந்து, ரஞ்சித் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள உள்ளாராம். ஒருவேளை இவர் போட்டியாளராக உள்ளே வந்தால், ரசிகர்கள் எப்படிப்பட்ட வரவேற்பு கொடுப்பார்கள் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

அனிதா சம்பத்தை போல புகழ்பெறுவாரா ரஞ்சித் என்பதான எதிர்பார்ப்புடன் சின்னத்திரை வட்டாரத்தில் பேசப்படுகிறது.

தனுஜா ஜெயராமன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...