சாலைவிபத்து குறித்த திமுக எம்பி கேள்விக்கு பிஜேபி அமைச்சர் பதில்!

 சாலைவிபத்து குறித்த திமுக எம்பி கேள்விக்கு பிஜேபி அமைச்சர் பதில்!

சாலை விபத்தில் பலியானவர்களின் விவரங்கள் தொடர்பாக பாராளுமன்ற மாநிலங்களவையில் கேள்வி எழுப்ப பட்டது. இது குறித்து விளக்கமளித்தார் சாலை போக்குவரத்து துறை மந்திரி நிதின் கட்கரி.

நாட்டில் தினந்தோறும் செல்பேசிகளால் விபத்துகள் ஏற்பட்டு. வருவது வழக்கமாகி விட்டது. அதில் ஆயிரக்கணக்கான பேர் இறந்துள்ளதாக தகவல்கள் வந்துள்ளது.

கடந்த 2021-ம் ஆண்டு மொத்தம் 4 லட்சத்து 12 ஆயிரத்து 432 விபத்துகள் நடைபெற்றது.

இந்த விபத்துகளில் ஒரு லட்சத்து 53 ஆயிரத்து 972 பேர் இறந்தனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிவேக பயணம் , குடிபோதை, செல்போன் பேசியபடி வாகனம் ஓட்டுதல் போன்ற போக்குவரத்து விதிமீறல்களால் ஒரு லட்சத்து 28 ஆயிரத்து 825 விபத்துகள் ஏற்பட்டதாகவும், அதில் 56 ஆயிரத்து ஏழு பேர் இறந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிவேகமாக சென்று 40,450 பேரும், செல்போன் பேசியதால் ஏற்பட்ட விபத்தில் 1,040 பேரும் பலியாகியது குறிப்பிடத்தக்கது

சாலை விபத்தில் பலியானவர்களின் விவரங்கள் தொடர்பாக பாராளுமன்ற மாநிலங்களவையில் தி.மு.க. எம்.பி. ராஜேஷ்குமாரின் கேள்விக்கு மத்திய சாலை போக்குவரத்து துறை மந்திரி நிதின் கட்கரி எழுத்துப்பூர்வமாக பதில் அளித்து இருந்தார்.

தனுஜா ஜெயராமன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...