கடலூர் என்எல்சி விவகாரம்: பயிர்களுக்கு இழப்பீடு!
கடலூர் மாவட்டத்தில் என்எல்சி நிர்வாகத்தால் சேதப்படுத்தப்பட்ட பயிருக்கு ஏக்கர் ஒன்றிற்கு 40 ஆயிரம் ரூபாய் இழப்பீடு வழங்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடலூர் மாவட்டத்தில் அமைந்திருக்க கூடிய என்எல்சி தொழிற்சாலையில் இரண்டாவது ஆலை விரிவாக்க பணி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் அந்த பணியின் போது விளைநிலங்களுக்குள் ஜேசிபி இயந்திரங்கள் இறக்கப்பட்டு விளைநிலங்கள் சேதப்படுத்தப்பட்டன. இது விவசாயிகளிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
இதைத் தொடர்ந்து கடலூர் மாவட்டம் முழுவதும் விவசாயிகள் தொடர் போராட்டங்களை செய்தனர். பல இடங்களில் சாலை மறியல், என்எல்சி விரிவாக்க பணியில் ஈடுபட்டுள்ள வாகனங்கள் முற்றுகை என்று தினமும் தொடர் போராட்டம் நடைபெற்று வருகிறது.
இது தொடர்பாக பாதிக்கப்பட்ட விவசாயிகள் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் என்எல்சி நிர்வாகம் கையகப்படுத்தப்பட்ட நிலத்தை பாதுகாக்க தவறிவிட்டது.
ஆனாலும் விளைநிலங்களை சேதப்படுத்தியதை அனுமதிக்க முடியாது. இதனால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு 30 ஆயிரம் இழப்பீடு தருவதாக கூறும் என் எல் சி யின் வாதத்தை ஏற்றுக் கொள்ள முடியாது. கூடுதலாக 10 ஆயிரம் சேர்த்து 40 ஆயிரம் ரூபாய் இழப்பீடாக வழங்க வேண்டும். அவற்றை ஆகஸ்ட் 6ஆம் தேதி வரும் ஞாயிற்றுக்கிழமைக்குள் வழங்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் கூறியுள்ளது