தெலுங்கு ரசிகர்களுக்காக ‘ப்ரோ’
சமுத்திரக்கனி இயக்கத்தில் தம்பி ராமையா நடித்த படம் ‘வினோதய சித்தம்’. கடந்த 2021-ஆம் ஆண்டு நேரடியாக ஓடிடியில் வெளியான இப்படம் விமர்சன ரீதியாக பெரும் வரவேற்பை பெற்றது.
தற்போது இப்படத்தை ‘ப்ரோ’ என்ற பெயரில் தெலுங்கில் ரீமேக் செய்துள்ளார் சமுத்திரக்கனி. தமிழில் சமுத்திரக்கனி நடித்த கதாபாத்திரத்தில் பவன் கல்யாண், தம்பி ராமையா கதாபாத்திரத்தில் சாய் தேஜ் நடிக்கின்றனர்.
தெலுங்கு ரசிகர்களுக்காக பல்வேறு மாற்றங்களுடன் தயாராகியுள்ள இப்படம் நாளை 28ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.