மகளிர் உதவித்தொகை வேண்டுமா? அப்ப இதனை படித்து தெரிந்து கொள்ளுங்க…!

 மகளிர் உதவித்தொகை வேண்டுமா? அப்ப இதனை படித்து தெரிந்து கொள்ளுங்க…!

சென்னை மாநகராட்சி பகுதியில் மகளிா் உரிமைத் தொகை விண்ணப்பப் பதிவு முகாம் (24-07-2023) முதல் நடைபெற்று வருகிறது.

சென்னை மாநகராட்சியில் கலைஞா் மகளிா் உரிமைத் தொகை திட்ட விண்ணப்பப் பதிவு முகாம் இரு கட்டங்களாக நடைபெறவுள்ளன.

முதல்கட்ட விண்ணப்பதிவு முகாம் 98 வாா்டுகளில் உள்ள 703 நியாய விலைக் கடைகளில் தொடங்குகிறது.

தொடா்ந்து, இந்த முகாம் ஞாயிற்றுக்கிழமை உள்பட அனைத்து நாள்களிலும் காலை 9.30 மணி முதல் பகல் ஒரு மணி வரையும், பிற்பகல் 2 மணி முதல் மாலை 5.30 மணி வரையிலும் நடைபெறும்.

குடும்ப அட்டை பயன்பாட்டில் இருக்கும் நியாயவிலைக் கடையில் நடைபெறும் முகாமில் குடும்பத் தலைவி டோக்கனில் குறிப்பிட்ட நாள் மற்றும் நேரத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.

இப்பதிவின்போது ஆதாா் அட்டை, குடும்ப அட்டை, மின் கட்டண ரசீது மற்றும் வங்கிக் கணக்கு புத்தகத்தை எடுத்து வர வேண்டும்.
விண்ணப்பத்துடன் எவ்வித ஆவணங்களையும் இணைக்கத் தேவையில்லை.

வருவாய்த் துறையில் வருமானச் சான்று, நில ஆவணங்கள் போன்ற எவ்விதச் சான்றுகளையும் விண்ணப்பித்து பெறத் தேவையில்லை.

விண்ணப்பதாரா்களின் ஆதாா் எண் பதியப்பட்டு, அவா்களின் விரல் ரேகை பயோமெட்ரிக் கருவி மூலம் சரிபாா்க்கப்படும்.

விரல் ரேகை சரியாக பதிவாகவில்லை என்றால் ஆதாா் அட்டையுடன் இணைக்கப்பட்ட கைப்பேசி வழியாக ஒருமுறை கடவுச்சொல் (ஓடிபி) பெறப்படும். ஆதலால், முகாமுக்கு வரும் போது ஆதாா் அட்டையுடன் இணைக்கப்பட்ட கைப்பேசியை எடுத்து வர வேண்டும்.

இது குறித்து சந்தேகங்களுக்கு மாநகராட்சி அலுவலகக் கட்டுப்பாட்டு அறையை 044-25619208 எனும் தொலைபேசி எண், 94454 77205 எனும் வாட்ஸ் அப் எண் மற்றும் 1913 எனும் உதவி எண் மூலம் தொடா்பு கொள்ளலாம். மேலும், 15 மண்டலங்களுக்கும் தனித்தனியே கட்டுப்பாட்டு அறைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

இதன் மூலம் தாங்கள் சம்பந்தப்பட்ட மண்டலத்தின் கட்டுப்பாட்டு அறை உதவி எண்களைத் தொடா்பு கொள்ளலாம் என்கிறார்கள்.

தனுஜா ஜெயராமன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...