பாடகராக மாறிய ப்ரபல நடிகர்…..! – தனுஜா ஜெயராமன்.

 பாடகராக மாறிய ப்ரபல நடிகர்…..! – தனுஜா ஜெயராமன்.

நடிகர் விஷால் ஜிவி. பிரகாஷ்இசையில்” மார்க் ஆண்டனி “ படத்தில் பாடல் ஒன்றை பாடுவது போன்ற வீடியோ வெளியாகி உள்ளது. இது அந்த படத்தின் தெலுங்கு வெர்ஷனுக்காக என்கிறது டோலிவுட் வட்டாரம்.

நடிகர் விஷால், எஸ்.ஜே.சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள மார்க் ஆண்டனி திரைப்படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியுள்ளார். 
இப்படத்தில் சுனில், செல்வராகவன், கிங்ஸ்லி, ஒய்.ஜி.மகேந்திரன், ரிது வர்மா, அபிநயா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஜி.வி.பிரகாஷ் குமார் இந்தப் படத்துக்கு இசையமைக்கிறார்.

‘திரிஷா இல்லனா நயன்தாரா’ படம் மூலம் பரபரப்பை ஏற்படுத்தியவர் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன். பின்னர் சிம்பு நடிப்பில் ‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’ படத்தை இயக்கினார்.

மார்க் ஆண்டனி திரைப்படத்தின் இறுதிக்கட்ட டப்பிங் பணிகள் குறித்து ஏற்கனவே நடிகர் விஷால் விடியோ வெளியிட்டிருந்தார்.

டைம் டிராவலை மையமாகக் கொண்டு உருவான படமாகத் தெரிகிறது. விஷால், எஸ்.ஜே.சூர்யா இருவரும் இரட்டை வேடங்களில் நடித்துள்ளனர்.

இந்நிலையில், இறுதிக்கட்ட டப்பிங் பணிகளை மேற்கொள்ளும் விடியோ ஒன்றை நடிகர் விஷால் பகிர்ந்துள்ளார். இப்படம், விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு செப்.15 அன்று வெளியாக உள்ளது.

இதற்கு முன்பு “மார்க் ஆண்டனி’’ படத்தின்  ‘’அதிருது மாமே’’ என்ற முதல் சிங்கில் பாடலை  டி.ராஜேந்தர் பாடியுள்ளார். இதனை ஒட்டி அந்த பாடலின் ப்ரோமோ வீடியோவை படக்குழு வெளியிட்டு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது என்பதும் குறிப்பிடதக்கது.

தற்போது சிங்கராக மாறியிருக்கும் நடிகர் விஷாலின் பாடலும் பட்டி தொட்டி எங்கும் பட்டையை கிளப்பும் என்கிறார்கள் கோலிவுட் மற்றும் டோலிவுட் வட்டாரத்தினர்.

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...