விவேகானந்தர்

 விவேகானந்தர்

விவேகானந்தர் காலமான நாளின்று🥲

1902 ஆம் ஆண்டு ஜூலை 4 ஆம் நாள், தனது 39ஆம் வயதில் பேலூரில் விவேகானந்தர் காலமானார். அன்று அவர் நிறுவிய இராமகிருஷ்ண மிஷன் மற்றும் மடம் இன்று உலகம் முழுவதும் கிளைகள் பரவி செயல்பட்டு வருகிறது.

இந்தியத் தாய் பெற்றெடுத்த ஆன்மிகச் செல்வர்களில் முதன்மை ஸ்தானத்தில் இருப்பவர்களில் முக்கியமானவர் சுவாமி விவேகானந்தர். `என்னிடம் ஆற்றல் மிக்க நூறு இளைஞர்களைத் தாருங்கள். நம் நாட்டை மிகப் பெரிய வல்லரசாக மாற்றிக் காட்டுகிறேன்’ என்று வீர முழக்கமிட்டவர்.

கம்பீரமான அவருடைய தோற்றம் எப்படிப்பட்டவரையும் வசீகரித்துவிடும். அவருடைய சொற்பொழிவுகளோ மற்றவர்களைக் கிளர்ந்தெழச் செய்யும். தன்னுடைய பேச்சாற்றலால் மக்களை ஈர்க்கும் திறமையில் அவருக்கு நிகர் அவர்தான். விடுதலைப் போராட்ட வீரர்கள் பலருக்கும் சுவாமிஜி ஆதர்ச சக்தியாக இருந்துள்ளார். `வீரத் துறவி’ என்ற சிறப்புக்கு மிகப் பொருத்தமானவர் சுவாமி விவேகானந்தர்.

நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் முதல் யோகி அரவிந்தர் வரை பல சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கு ஆதர்ச நாயகராக சுவாமிஜி திகழ்ந்தார். தேசிய கீதம் கொடுத்த ரவீந்திரநாத் தாகூர், `சுவாமி விவேகானந்தர் ஒரு ஜீனியஸ்’ என்று போற்றிப் புகழ்ந்திருக்கிறார். பல நாட்டு அறிஞர் பெருமக்களும் சுவாமிஜியால் ஈர்க்கப்பட்டிருக்கிறார்கள்.

`தான் யார் என்று அறிந்துகொள்ளும்போது நரேந்திரன் இந்த உலகத்தை விட்டுச் சென்றுவிடுவான்’ என்று ராமகிருஷ்ண பரமஹம்சர் கூறியதைப்போலவே, இந்த உலகத்தில் தான் அவதரித்த நோக்கம் நிறைவேறியதும், சுவாமி விவேகானந்தர் தான் யார் என்பதையும், எங்கிருந்து வந்தோம் என்பதையும் புரிந்துகொண்டார். அவர் அப்படிப் புரிந்துகொண்ட தினம் 1902-ம் வருடம், ஜூலை மாதம், 4-ம் தேதி.

மகா சமாதி அடைவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பாக, அவர் தனக்குத் தானே பேசிக்கொண்ட வார்த்தைகள்:

`இந்த விவேகானந்தனை யார் புரிந்துகொண்டார்கள்… யாரும் புரிந்துகொள்ளாவிட்டால்தான் என்ன… இந்த விவேகானந்தன் போய்விட்டால்தான் என்ன? காலப்போக்கில் இன்னும் பல விவேகானந்தர்கள் இந்த தேசத்தில் பிறக்கத்தான் போகிறார்கள்.’

அன்று நள்ளிரவு சுவாமி விவேகானந்தர் ஸித்தியடைந்துவிட்டார்.

அவர் கூறியதுபோல் இப்போது நலிவுற்றிருக்கும் நம் தேசத்தைப் புனர் நிர்மாணிக்க ஒரு விவேகானந்தர் வர வேண்டும் என்று அவரைப் பிரார்த்திப்போம்.

விவேகானந்தரின் பொன்மொழிகளில் சில:♻

* கடவுள் இருந்தால் அவனை நாம் காணவேண்டும், ஆத்மா இருந்தால் அதனை நாம் உணர வேண்டும், அப்படியில்லையென்றால் நம்பிக்கை இல்லாமல் இருப்பது நன்று. பாசாங்கு போடுவதை விட நாத்திகனாக இருப்பதே மேல்.

* உலகின் குறைகளை பற்றி பேசாதே. குறைகளை நோக்கி வருத்தப்படு, எங்கும் நீ குறைகளை காண்பாய். ஆனால், நீ உலகுக்கு உதவி செய்ய விருப்பினால் உலகை தூற்றாதே, குறை சொல்லாதே. குறை சொல்லி உலகை இன்னும் பலவீனப்படுத்தாதே. உலகின் குறைகள், குற்றங்கள் எல்லாம் அதன் பலவீனத்தால் விளைபவை அல்லவா.

* செயல் நன்று, சிந்தித்து செயலாற்றுவதே நன்று. உனது மனதை உயர்ந்த இலட்சியங்களாலும், சிந்தனைகளாலும் நிரப்பு. அவற்றை ஒவ்வொரு நாளின் பகலிலும் இரவிலும் உன் முன் நிறுத்து; அதிலிருந்து நல் செயல்கள் விளையும்.

* வாழ்வும் சாவும், நன்மையும் தீமையும், அறிவும் அறியாமையும் ஆகியவற்றின் கலவைதான் மாயா, அல்லது பிரபஞ்சத்தின் இயல்பு. இவ் மாய்த்துள் நீ எல்லையற்று மகிழ்ச்சிக்காக அலையலாம், ஆனால் நீ தீமையையும் காண்பாய். தீமையின்றி நன்மை இருக்குமென்பது சிறுபிள்ளைத்தனம்.

* உலகில் உள்ள தீமைகளைப் பற்றியே நாம் வருந்துகிறோம். நம் உள்ளத்தில் எழும் நச்சுஎண்ணங்களைப் பற்றி சிறிதும் கவலை கொள்வதில்லை. உள்ளத்தை ஒழுங்குபடுத்தினால் இந்த உலகமே ஒழுங்காகிவிடும்.

May be an image of 1 person, temple and text that says "" "எழுந்திரு, விழித்திரு, இலக்கை அடையும் வரை நிறுத்தாதே"

All reactions:

12Kavi Murasu Praveen, Prabhala Subash and 10 others

uma kanthan

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...