மத்திய நிதி அமைச்சர் கணவர் பரக்கலபிரபாகர் யார்?

 மத்திய நிதி அமைச்சர் கணவர் பரக்கலபிரபாகர் யார்?

நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் கணவரும் பிரபல பொருளாதார நிபுணருமான டாக்டர் பரக்கல பிரபாகர் கரண் தாபருக்கு அளித்த பேட்டியின் முக்கிய அம்சங்கள்.

முதலில் யார் இவர் இந்த பரக்கல பிரபாகர் எனத் தெரிஞ்சுக்கலாம்.

இவரது தாயும் தந்தையும் நீண்ட கால ஆந்திரா காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் மற்றும் மந்திரிகள்.

பரக்கலா பிரபாகர் ஆரம்ப கட்டங்களில் தெலு;ஙகு தேசம் பார்ட்டிக்கு சந்திரபாபு நாயுடுவுக்கு ஆலோகராக நெருக்கமாக இருந்தவர்.

2000ல் ஆந்திர மாநில பி.ஜே.பி. அண்ணாமலை அதாவது 2000களிலேயே பி.ஜே.பி. ஆந்திர ஒருங்கிணைந்த மாநிலங்களில் இந்துத்வா, பி.ஜே.பி.யை வளர்க்க முனைந்து, தொடர்ந்தவர்.

2000களில் இவரது மனைவிக்கு ஹைதராபாத்தில் பெரிய பதவி “மகளிர் பாதுகாப்பு அமைச்சரகம்” பி.ஜே.பி. காலங்களில் தலைவராக நியமனம் வாங்கிப் பின்புலமாகச் செயல்பட்டவர். சுஷ்மா ஸ்வராஜுக்கு மனைவி நிர்மலாவை நெருக்கமாக்கி, 2014களில் எங்கும் எம்.எல்.ஏ.கூட ஆகாத மனைவியை நேரடி மத்திய அமைச்சரவையில் கேபினட் மந்திரியாக இடம் பெறச் செய்தார்.

இவ்வளவு காலங்களும் பி.ஜே.பி.க்காக மறைமுகமாக உழைத்து, பத்திரிகைகளில் பிரபலம் ஆவதற்கு பி.ஜே.பி. மோடி எகானமிக்ஸை தாக்குகிறராம். யார் நிதி அமைச்சர்? இவரது மனைவி. மனைவி மேல் தப்பில்லையாம்!

மோடி கெட்டவராம், நிர்மலாவைப் பற்றிக் கேட்டால் மழுப்புகிறார்.

இந்துத்வாவை வைத்து 10 கோடி பி.ஜே.பி. உறுப்பினர்களை வைத்து, 38% இந்து மக்கள் ஓட்டு வைத்து, மோடி என்ன வேண்டுமானாலும் பொருளாதார மடத்தனம் பண்ணுகிறார் என காது குத்துகிறார்.

ஏன் நிதி அமைச்சருக்கு பொறுப்பு இல்லையா எனக் கேட்டால் மோடி மக்கு என்கிறார்! (Modi regime staggering incompetence.)

அப்போ நிதிஅமைச்சர் பதவியை ராஜினாமா செய்து ஹைதரபாத் கணவர் வீட்டுக்குச் செல்ல வேண்டியதுதானே?

கர்நாடகா தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்ற மறுநாள் பெங்களூருவில் இந்தப் புத்தகத்தை வெளியிட்டு இருக்கிறார்.

இவர் எழுதிய மகா புத்தகத்தை வெளிவரமுடியாமல் பல சதிகள் நடந்ததாம். தடைகளையெல்லாம் மீறி கள்ள ரயில் ஏறி பெங்களூரு வந்து வெளியிட்டாராம். பூச்சுற்றுகிறார். எவனும் இவர் புத்தகத்தை வெளியிட தயாரில்லை. யார் ரூ.500 கொடுத்து வாங்குவர். வெளிநாட்டில் எல்லாம் காத்திருக்கிறார்களாம். நோபல் பரிசு பெற்ற அமர்த்யா சென், டாக்டர் சிங், ராஜன் சொல்லாததையா நீர் சொன்னீர் என காங்கிரஸ் இவரை கண்டுகொள்ளவில்லை.

வஞ்சப்புகழ்ச்சி. பி.ஜே.பி.க்கு அரசியல் லாபமடைய, தேட விளம்பரம், முயற்சிக்கிறார்.

புத்தக விளம்பரம். பெயர்கூட ஏதோ குள்ளநரித்தனம் குருக்கட்டாம்.

(The Crooked Timber of New India.)

நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் யார்?

நிர்மலா சீதாராமன் ஆகஸ்ட் 18, 1959 அன்று மதுரையில் சாவித்திரி மற்றும் நாராயணன் சீதாராமனுக்கு மகனாகப் பிறந்தார். சீதாராமனின் தந்தை முசிறி, திருச்சிராப்பள்ளியைச் சேர்ந்தவர், மற்றும் அவரது தாயின் குடும்பத்தின் வேர்கள் திருவெண்காடு மற்றும் தமிழ்நாட்டின் தஞ்சாவூர் மற்றும் சேலம் மாவட்டங்களில் இருந்தன. நிர்மலா சீதாராமன் தமிழ் ஐயங்கார் பிராமண குடும்பத்தில் பிறந்தவர் மற்றும் அவரது தந்தை இந்திய ரயில்வே ஊழியர். 

நிர்மலா சீதாராமன் சென்னை மற்றும் திருச்சிராப்பள்ளியில் பள்ளிப்படிப்பை முடித்தார். திருச்சியில் உள்ள சீதாலட்சுமி ராமசுவாமி கல்லூரியில் பொருளாதாரத்தில் இளங்கலை கலைப் பட்டம் பெற்றார். 1984 ஆம் ஆண்டில், ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் (ஜேஎன்யு) முதுகலை கலை மற்றும் பொருளாதாரத்தில் எம்.பில் முடிக்க டெல்லி சென்றார். 

நிர்மலா சீதாராமன் ஜேஎன்யுவில் படிக்கும் போது தனது கணவர் பரகலா பிரபாகரை சந்தித்தார். வெவ்வேறு அரசியல் சித்தாந்தங்களைக் கொண்டிருந்தாலும், இந்த ஜோடி 1986 இல் திருமணம் செய்து கொண்டது மற்றும் பரகலா வங்மாய் என்ற மகள் உள்ளார். பரகலா பிரபாகர் காங்கிரஸ் கொள்கையில் இருந்தவர், சீதாராமன் பாஜக பக்கம் சாய்ந்தவர். இவரது கணவர் பரகலா பிரபாகர் அப்போதைய ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவிடம் தகவல் தொடர்பு ஆலோசகராக பணியாற்றினார். 

2006ல், பாரதிய ஜனதா கட்சியில் (பாஜக) சேர்ந்த நிர்மலா சீதாராமன், 2010ல் பாஜகவின் தேசிய செய்தித் தொடர்பாளர் ஆனார். 2014ல், பாஜக தேர்தலில் வெற்றி பெற்றதையடுத்து, நரேந்திர மோடியின் அமைச்சரவையில், நிர்மலா சீதாராமன், இளைய அமைச்சராக நியமிக்கப்பட்டார். ஜூன் 2014 இல், ஆந்திரப் பிரதேசத்தில் இருந்து ராஜ்யசபா எம்.பி.யாக சீதாராமன் தேர்ந்தெடுக்கப்பட்டார். மே 2016 இல், அவர் ராஜ்யசபா தேர்தலில் கர்நாடகாவில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். செப்டம்பர் 3, 2017 அன்று, பாதுகாப்பு அமைச்சராக நிர்மலா சீதாராமன் நியமிக்கப்பட்டார். இந்திரா காந்திக்குப் பிறகு இந்தப் பதவியை வகிக்கும் இரண்டாவது பெண்மணியும், முழுநேரப் பதவியை வகித்த முதல் பெண்மணியும் ஆவார். 

மே 31, 2019 அன்று, சீதாராமன் நிதி மற்றும் கார்ப்பரேட் விவகார அமைச்சராக அலுவலகத்தில் சேர்ந்தார் மற்றும் இந்தியாவின் முதல் முழுநேர பெண் நிதியமைச்சர் ஆவார். 

மூலவன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...