மாணவர்கள் எளிதில் பாஸ்போர்ட் பெறலாம்!

 மாணவர்கள் எளிதில் பாஸ்போர்ட் பெறலாம்!

தேசிய அஞ்சல் வாரத்தை முன்னிட்டு “பள்ளி மாணவர்கள் பாஸ்போர்ட் பெற என்ன செய்ய வேண்டும்?” என்ற கேள்வியோடு  பாஸ்போர்ட் அதிகாரியை மாணவர்கள் சந்தித்தார்கள்.

பாஸ்போர்ட் பெறுவதற்கு முன்பு மதுரை வரை செல்ல வேண்டும். இப்போது உங்கள் ஊரான தேவகோட்டையில் பாஸ்போர்ட் அலுவலகம் அமைந்துள்ளது சிறப்பு ஆகும்.

பாஸ்போர்ட் தேவைப்படுபவர்கள் முதலில் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். பிறகு விண்ணப்பித்த கடிதத்தோடு,  ஒரிஜினல் சான்றிதழ்களைக் கொண்டுவர  வேண்டும். இவ்வாறு கொண்டுவரும்போது  சான்றிதழின் நகலை யும், அந்த நகலில் சான்றிதழ் உண்மைத்தன்மை கொண்டது என்ற சுய சான்றொப்பம் இட்டு வழங்க வேண்டும். நாங்கள் இங்கே அதனைச் சரிபார்த்து உங்கள் விவரங்களை மேல் அலுவலகத்துக்கு அனுப்புவோம். அங்கிருந்து போலீஸ் விசாரணைக்கு அனுப்புவார்கள். அதன் பிறகு பாஸ் போர்ட் அலுவலகத்தில் இருந்து உங்களுக்கு பாஸ்போர்ட் கிடைக்கும்.

“தற்போது பொதுமக்கள் எளிதில் பாஸ்போர்ட் பெறும் வகையில் விதிகளை எளிமையாக்கியுள்ளோம். குறிப்பாக, பள்ளி மாணவர்கள் பாஸ்போர்ட் பெறு வது எளிது. காவல்துறை விசாரணைக்குப் பிறகே பாஸ்போர்ட் வழங்கப்படும். இதற்கு இரண்டு முதல் மூன்று வாரங்கள் வரை ஆகலாம்.

பாஸ்போர்ட் பெற விண்ணப்பிக்கும்போது, முகவரிக்கான சான்றிதழும் பெயர் மற்றும் பிறந்த தேதிக்கான சான்றிதழும் இருக்க வேண்டும். முகவரி விவரத்தைச் சரிபார்க்க ஆதார் கார்டே போதுமானது.

பாஸ்போர்ட் மட்டுமே வெளிநாடு செல்ல போதாது. விசா அவசியம் தேவைப் படும். அதனையும் பெற்றுக்கொண்டுதான் வெளிநாடு செல்ல இயலும். இவ் வாறு மாணவர்களின் பல்வேறு கேள்விகளுக்குப் பதில் அளித்தனர்.

அஞ்சலக  நடைமுறைகள் எப்படி?

சிவகங்கை மாவட்டம்   தேவகோட்டை சேர்மன் மாணிக்கவாசகம் நடுநிலைப் பள்ளி மாணவ, மாணவியர்  அஞ்சலக  நடைமுறைகள்  பற்றி முழுவதுமாக அறிந்து கொள்ளும் வாய்ப்பினைப் பெற்றனர்.

தேவகோட்டை சேர்மன் மாணிக்கவாசகம் நடுநிலைப் பள்ளி மாணவ, மாணவி யருக்கு அஞ்சலகம் தொடர்பான நடைமுறைகளை அறிந்துகொள்ள தலைமை ஆசிரியர் சொக்கலிங்கம் ஏற்பாடு செய்தார்.

தேவகோட்டை அஞ்சலக தலைமை அதிகாரி செல்வராஜ்     சம்மதம் தெரிவித் தார். மாணவர்கள் பள்ளியிலிருந்து அஞ்சலகத்திற்குச்   சுற்றுலாவிற்குப் பயணிப்பதுபோல்  உற்சாகத்துடன் அனைவரும் சென்றனர். தேவகோட்டை அஞ்சலக தலைமை அதிகாரி செல்வராஜ்  அனைவரையும்  வரவேற்று   மாணவர்களுக்கு  செயல்முறை விளக்கம் அளித்தார். அஞ்சலகத்தின்   செயல் பாடுகள் என்னென்ன என்பது குறித்து விளக்கப்பட்டது. அஞ்சலகத்தில் பொது மக்கள் பயன்பாடும், பொதுமக்களுக்கு அஞ்சலகத்தின்   சேவை குறித்தும் எடுத்துக் கூறினார்கள்.

அஞ்சலகத்தில்  அமைந்துள்ள ஒவ்வொரு பிரிவையும் தனித்தனியே  மாணவர் களை  அழைத்துச் சென்று விளக்கம் அளித்தார். தபால்கள் பிரிப்பது எப்படி? தபால்கள்  உரிய இடங்களுக்கு அனுப்பப்பட்டு வீடுகளுக்குச் சென்றடைவது எப்படி? அஞ்சல் அட்டை,  உள்நாட்டு தபால் சேவை, ஒப்புதல் அட்டை,  மணி  ஆர்டர் படிவம் பூர்த்தி செய்வது எப்படி?  பணம் செலுத்தும் படிவம், பணம்  எடுக்கும்  படிவம் ஆகியவை பூர்த்தி செய்வது எப்படி? பதிவு தபால் என்ன  என்பது தொடர்பாகவும், பதிவு தபாலுக்கும்  விரைவு தபாலுக்கும் என்ன வேறுபாடு என்பதையும்   விளக்கமாக எடுத்து கூறினார்கள்.

அஞ்சலகத்தின் முக்கிய சேவைகளாக உள்ள இ – போஸ்ட் , முக்கிய நகரங் களுக்குப்  பொது மக்கள் தங்களது சரக்குகளைக் குறைந்த விலையில் அனுப்பி வைக்கப்படும் தபால் சேவை,  உள்நாட்டில் பணப்பரிமாற்றச் சேவை, வெளி நாடுகளுக்குத் தபால்கள், பார்சல்கள் அனுப்ப அறிமுகம் செய்யப்பட்டுள்ள world net express சேவை, Mobile Money System, IMO  எனப் பல தகவல்கள் குறித்து விளக்கம் அளித்தனர்.

மை ஸ்டாம்ப், பணம் செலுத்தும் கவுன்ட்டர், பார்கோடு மூலம்  கணினியில் எவ்வாறு பதிவு செய்தல் என்பதையும்  செயல் விளக்கம் அளித்தனர். மாணவர்கள் முத்தையன், ஆகாஷ், திவ்யஸ்ரீ, ஜெயஸ்ரீ  ஆகியோர் படிவங்கள்  பூர்த்தி செய்வது தொடர்பாக கேள்விகள் கேட்டு பதில் பெற்றனர்.சில மணி  நேரங்கள் மாணவ,மாணவியர் உற்சாக வெள்ளத்தில் திளைத்தனர். மாணவர் களை அழைத்து செல்வதற்கான ஏற்பாடுகளை ஆசிரியை செல்வமீனாள்  செய் திருந்தார்.
மேலும் கூடுதல் தகவல்கள் :

நீங்கள் அஞ்சலகம் சென்ற உடன் பணம் கட்டும் படிவத்தினை எஸ்.பி.103 படிவம், பணம் எடுக்கும் படிவத்தினை எஸ்.பி.7, கணக்கும் முடிக்கும் படிவத்தினை எஸ்.பி.7A என்றும் பெயர் சொல்லி கேளுங்கள். உங்களுக்கு அஞ்சலகம் தொடர்பாக தெரியும் என்றும் தெரிவித்தார்.

மணி ஆர்டர் அனுப்புவது எப்படி என்பதை விளக்கும் வகையில் பள்ளியில் படிக்கும் பரத்குமார் என்கிற மாணவர்க்கு அவரது வீட்டு முகவரிக்கு ரூபாய் பத்துக்கான பணம் அனுப்புவது எப்படி என்பதை கணினி வழியாகவும், படிவம் பூர்த்தி செய்வது எவ்வாறு என்பது தொடர்பாகவும் நேரடியாக விளக்கி சொன்னார்கள். நாளை அந்த மாணவருக்கு ரூபாய் பத்து கிடைக்கும் என்றும் தெரிவித்தார்.

தபால் நிலையத்தில் இருந்து சரியான பின்கோடு எழுதினால் மறுநாளே தபால் கிடைக்கும் என்றும், தபால்களை எவ்வாறு அலுவலகத்தில் ஊர் வாரியாக அடுக்கி வைக்கிறார்கள் என்றும் பிரித்து வைத்து காண்பித்தார். மேலும் ஒவ்வொரு போஸ்ட் மேனும் சரியான வழித்தடத்தில் தான் தினமும் செல்வார்கள் என்றும், குறிப்பிட்ட நேரத்தில் குறிப்பிட்ட இடத்தில் அவர்களைச் சென்று அடையலாம் என்றும் தெரிவித்தார். அதனால்தான் அந்தக் காலத்தில் மெயில் சென்றுவிட்டதா என்றும், போஸ்ட் மேன் சென்று விட்டாரா என்றும் கேட்டு சரியான நேரத்தை அறிந்து கொள்வார்கள்.  செல்வமகள் சேமிப்புத் திட்டம் தொடர்பாகத் தெளிவாக எடுத்துக் கூறினார்கள். பணம் போடுவது கணினி வழியாக  எப்படி என்பதைத் தெளிவாக விளக் கினார்கள்.

மூலவன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...