உரத்தசிந்தனை எழுத்தாளர்கள் சங்கத்தின் பொதுக்குழு
உரத்தசிந்தனை வாசக எழுத்தாளர்கள் சங்கத்தின் 30 – ஆவது பொதுக்குழு 149, கிரீம்ஸ் ரோடு, சென்னை-600006 -ல் உள்ள இந்துஸ்தான் சேம்பர் ஆப் காமர்ஸ் இடத்தில் உள்ள கிரீம்ஸ் துகர் கட்டடத்தில் உள்ள 5- ஆவது மாடியில் 25-09-2022 ஞாயிற்றுக்கிழமை சரியாக 10.30 மணிக்கு கலைமாமணி திருமதி. பார்வதி பாலசுப்பிரமணியன் அவர்களின் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலுடன் இனிதே துவங்கியது.
உரத்தசிந்தனை சங்கத்தின் உறுப்பினர் மருத்துவர் சந்திரமோகனின் மனைவி கெளசல்யா இதய மருத்துவர் கீதா சுப்பிரமணியத்தின் கணவர் டாக்டர் சுப்பிரமணியன் ஆகியோரின் மறைவுக்கு அரங்கில் கூடியிருந்தவர்கள் இரண்டு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தினர்.
அரங்கத்திற்கு வந்திருந்த உரத்தசிந்தனை சங்கத்தின் அனைத்து உறுப்பினர்களையும் திரு.தொலைபேசி மீரான் இனிதே வரவேற்றார்
உரத்தசிந்தனை சங்கத்தின் பொதுச்செயலாளர் திரு.உதயம்ராம் அரஙகத்தில் அமர்ந்திருந்த ஒவ்வொரு உறுப்பினர்களின் பொதுநலனுக்கான பங்களிப்பையும், அவர்களின் சாதனைகளையும் சிறப்பாக குறிப்பிட்டு அனைத்து உறுப்பினர்களுக்கும் அருமையாக அறிமுகம் செய்தார்.
உரத்தசிந்தனை வாசக எழுத்தாளர்கள் சங்கத்தின் 2021-2022 ஆண்டறிக்கை பொதுக்குழுவின் ஒப்புதலுக்காக திரு. தொலைபேசி மீரான் முன்மொழிய திருச்சியைச் சேர்ந்த திரு. நாச்சியப்பன் வழிமொழிந்ததும் பொதுக்குழுவில் ஏற்றுக் கொள்ளப்பட்டது.
2021-2022 ஆண்டின் 31-03-2022 வரைக்கான வரவு செலவு கணக்கு ஏற்றுக் கொள்வதன் பொருட்டு பொதுக்குழு சார்பில் முனைவர் திரு.பாலசாண்டில்யன் முன்மொழிய முனைவர் திரு.தென்காசி கணேசன் அதை வழிமொழிந்தார்.
பொதுக் குழுக் கூட்டத்தில் பின் வருபவர்கள் 2022- 2023 ஆம் ஆண்டிற்கான புதிய நிர்வாகிகளாக ஒருமனதாகத் தேர்வு செய்யப்பட்டனர்
உரத்தசிந்தனை சங்கத்தின் ஆடிட்டர் திரு.ராதாகிருஷ்ணன் தனது வாழ்த்துரையில் அகில இந்தியாவிலேயே உரத்தசிந்தனைதான் எழுத்தாளர்களின் இலக்கிய மேம்பாட்டிற்கான சேவையை அனைவராலும் போற்றப்படும் படியாக சிறப்புற செய்வதாகவும், வரவு செலவு கணக்கினை சமர்ப்பிப்பதில் அனைத்து சங்கங்களுக்கும் முன்னோடியாகத் திகழ்வதாகவும் கூறி வாழ்த்துரையைத் துவக்கினார்.
அடுத்துவந்த ‘சாய்சங்கரா’ மேட்ரிமோனியல் திரு.பஞ்சாபகேசன் உரத்தசிந்தனை சங்கத்தின் அனைத்து செயல்பாடுகளும் மதுரமாக இருப்பதாக போற்றி வாழ்த்தினார். தொடர்ந்து திரு.மாம்பலம் சந்திரசேகர், ஆடிட்டர் கலைமாமணி திரு.J.பாலசுப்பிரமணியன் வாழ்த்துரை வழங்கினர்.
தலைவர்
திருமதி பத்மினி பட்டாபிராமன்
துணைத் தலைவர்கள்
ஆடிட்டர் என் ஆர்.கே
முனைவர் பா.மேகநாதன்
பொதுச் செயலாளர்
திரு உதயம் ராம்
ஆலோசகர்கள்
திரைப்பட இயக்குநர் திரு எஸ்.பி முத்துராமன்
திரைப்பட நடிகர் திரு டெல்லி கணேஷ்
ஆடிட்டர் ஜெ.பாலசுப்ரமணியன்
முனைவர் நா . பஞ்சாபகேசன்
அடுத்ததாக
திரைப்பட கதாசிரியரும், சிறந்த எழுத்தாளருமான திரு.பட்டுக்கோட்டை பிரபாகர் நமது நாட்டில் அனைவரும் சாதி,மத வேறுபாடு இன்றி ஒற்றுமையுடன் வாழ்வதற்கு உரத்தசிந்தனை அமைப்பின் பங்களிப்பு அதிகம் ஆதலால் தான் இதில் இணைந்ததில் பெருமை கொள்வதாக வாழ்த்துரை வழங்கினார்.
முனைவர் திரு.மேகநாதன், திரு.இதயகீதம் இராமானுஜம், திரைப்பட நடிகர். திரு.டில்லி கணேஷ், திரைப்பட இயக்குனர் திரு.S.P.முத்துராமன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கிச் சிறப்பித்தனர்.
நிறைவாக டெக்னோ முரளி சீனிவாசன் நன்றி கூறினார்.
1 Comment
அருமையான தொகுப்பு பதிவு
வாழ்த்துக்கள்🎉🎊