ஐந்து கோள்கள் வானில் ஒன்றாய் தோன்றும் அதிசயம்

 ஐந்து கோள்கள் வானில் ஒன்றாய் தோன்றும் அதிசயம்

சூரியக்குடும்பத்தில் அமைந்துள்ள ஐந்து கோள்களும் தங்களுக்கு உரிய வட்டப் பாதையில் சூரியனை சுற்றி ஒரே நேர்க்கோட்டில் வானில் தோன்றும் அதிசய நிகழ்வு ஜூன் 27-ஆம் தேதி நடைபெற உள்ளது.

நம் சூரியக் குடும்பத்தில் உள்ள ஒரு சில கோள்களை நம் வெறும் கண்ணாலேயே பார்க்க முடியும். பூமியின் இரட்டைக் கோள் என அழைக்கப்படும் வெள்ளியை காலை மாலைகளில் வெறும் கண்ணால் பார்க்க முடியும். வானில் தனித்து மின்னிக்கொண்டு இருக்கும். அது போல மற்ற கிரகங்களும் தெரியும். ஆனால் சூரிய ஒளியால் அது மூடப்பட்டு விடும்.அப்படி அல்லது வெறும் கண்ணால் பார்க்க எப்போதாவது சந்தர்ப்பம் அமையும். அப்படி ஒரு நிகழ்வுதான் இப்போது நடக்கிறது

புதன், வெள்ளி, செவ்வாய், வியாழன், சனி ஆகிய கிரகங்கள் விடியும் முன் வானில் ஒளிர்வதை வெறும் கண்களால் பார்க்க கூடிய நிகழ்வு என்றால் சீரானது தானே! வாரத்தின் நாட்களை வரிசை காட்டியது போல் வரிசையாக கோள்கள் அணிவகுத்து காட்சி கொடுக்கின்றன.

புதன் சூரியனுக்கு அருகே இருப்பதனாலும் சூரிய ஒளியால் பெரிதும் மூடப்படுவ தாலும் அதை அவ்வளவு சீக்கிரம் பார்க்கும் வாய்ப்பு கிடைக்காது. அது தெரியும் சில நிமிடங்களில் சூரிய ஒளி அதை மறைத்து விடும்.

ஆனால் இப்போது 5 கோள்களையும் ஒன்றாக சேர்த்து பார்க்கும் வாய்ப்பு கிடைத் துள்ளது. இந்த காட்சியானது வெள்ளிக்கிழமையன்று காலை சிறப்பாக தெரிந்துள் ளது. ஆனால் உலகின் பெரும்பாலான பகுதிகளில் திங்கள் வரை இக்காட்சி தெரி யும் என்று வானியல் அறிஞர்கள் கூறியுள்ளனர்..

நாம் வாழும் பூமி, சூரியை ஒருமுறை முழுவதுமாகச் சுற்றி முடிக்க 365 நாட்கள் ஆகிறது. இதே போல பிற கோள்கள் சூரியனைச் சுற்றி முடிக்க எடுத்துக்கொள் ளும் காலம் மாறுபடும். அப்படி கோள்கள் சூரியனைச் சுற்றிவரும்போது, சில சமயங்களில் ஒரே நேர்க்கோட்டில் வரும் அதிசயமும் வானில் நிகழும். அந்த வகையில், இப்போது புதன், வெள்ளி, செவ்வாய், வியாழன், சனி ஆகிய ஐந்து கோள்கள் ஒரே நேர்க்கோட்டில் அணிவகுக்கும் அதிசய நிகழ்வினை வரும் 27 ஆம் தேதி வரையில் காணலாம்.

வடக்கு அரைக்கோள பகுதிகளில் சூரிய உதயத்திற்கு 45 முதல் 90 நிமிடங் களுக்கு இடையில் இக்காட்சி தென்படும். மலை போன்ற உயரமான இடத்திலி ருந்து கிழக்கு நோக்கி அடிவானத்தில் பார்த்தால் தெரியும். அதிகாலையில் மரங்கள் கட்டிடங்கள் மறைக்காத இடத்தில் இருந்து பார்த்தால் தெரியும். ஆனால் சூரியன் உதிக்கும் முன்னரே பார்க்க வேண்டும். சூரியன் உதித்தால் அதன் வெளிச்சத்தில் எல்லாம் மறைந்துவிடும்.

அதிகாலை சூரிய உதயத்திற்கு முன்பாகவும், பின்பாகவும் சூரியனுக்கு மேலே வளைவாக அணிவகுத்து இருக்கும் இந்த ஐந்து கோள்களையும் வெறும் கண் களில் நாம் காணலாம் என்று நாசா தெரிவித்து உள்ளது.

தொலைவில் உள்ள சனியில் இருந்து தொடங்கி பிரகாசமான வெள்ளி வரை எண்ணிக்கொண்டே வந்தால் இறுதி கிரகம் புதனையும் கண்டுபிடித்துவிடலாம்.

சுமார் 18 ஆண்டுகளுக்கு ஒருமுறை வானில் இதுபோன்று அதிசய நிகழ்வு தோன் றுகிறது. கடந்த 2004ஆம் ஆண்டு டிசம்பரில் இது போன்ற நிகழ்வு வானில் தோன்றிய நிலையில், இனி இது போன்ற நிகழ்வு 2040ஆம் ஆண்டுதான் தோன் றும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

மூலவன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...